யோவான் 4:31-34 - WCV
31
அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்” என்று வேண்டினர்.
32
இயேசு அவர்களிடம், “நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார்.
33
“யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
34
இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.