மல்கியா 1:2-4 - WCV
2
“உங்களுக்கு நான் அன்புகாட்டினேன்” என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, “எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர்?” என்று கேட்கிறீர்கள். “யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான்! ஆயினும் யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.
3
ஆனால் ஏசாவை வெறுத்தேன், அவனது மலைநாட்டைப் பாழாக்கினேன். அவனது உரிமைச்சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளிடம் கையளித்து விட்டேன்” என்கிறார் ஆண்டவர். “நாங்கள் அழிக்கப்பட்டோம்: ஆனாலும் பாழடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
4
எங்கள் நகர்கள் அழிக்கப்பட்டன: ஆனால் அவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம்” என்று ஏதோமியர் கூறுவரேயானால், படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் கட்டியெழுப்பட்டும்: நான் அவற்றைத் தகர்த்துவிடுவேன். தீய நாட்டினர் என்றும், ஆண்டவரின் கடும்சினத்திற்கு என்றென்றும் இலக்கான இனம் என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.