மத்தேயு 12:46-48 - WCV
46
இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.
47
ஒருவர் இயேசுவை நோக்கி, “ அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள் “ என்றார்.
48
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “ என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? “ என்று கேட்டார்.