வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர், பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
2பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
4நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.
5நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
6ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
7கர்த்தாவே, எழும்பும்! எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக! நீர் வல்லமையுள்ளவர்! என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.
8கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.