வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்? ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
2அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
3அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.
4ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர், அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
6 “நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்! அவன் சீயோன் மலையில் அரசாளுவான். சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார். அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.
7இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனக்கு மகன்.
8நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
9இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.
10எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே, இப் பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.