கையற்ற மேலாடைகள் எப்போதும் உங்களுடைய உடல் பாகங்களை அதிகமாக வெளியே தெரிய வைக்கின்றன. நீங்கள் அறிந்தபடி, உங்கள் கைகளுக்குக் கீழே உள்ள பகுதி, உங்கள் மார்பகப் பகுதிகள் அல்லது முதுகுப் பகுதிகள் ஆகியவை ஒரு ஆணின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. கையற்ற மேலாடைகளை அணியும்போது இந்தப் பகுதிகள் வெளியே தெரிவதைத் தவிர்க்க இயலாது. பிறர் உங்களை எல்லாக் கோணங்களிலும், எல்லாத் திசைகளிலிருந்தும் பார்ப்பார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், கையற்ற மேலாடையின் கைப்பகுதித் திறப்புகள் பெரும்பாலும் ஒரு மனிதனை ஆடைக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, உங்களது கைகளை உயர்த்தும்போதோ அல்லது நீட்டும்போதோ, இந்தக் கையற்ற மேலாடைகள் உடலின் மார்பகப் பகுதியை வெளிப்படுத்திவிடும்.
கையற்ற மேலாடைகளைப் போலவே, தளர்வான குட்டைக் கை ரவிக்கைக்கும் இது பொருந்தும். உங்கள் கைகளைத் தாழ்த்திப் பக்கவாட்டில் வைத்திருக்கும் வரை இது மிகவும் கண்ணியமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கைகளை உயர்த்தும்போது, ரவிக்கையின் திறப்பு பெரிதாகி ஒரு மனிதன் பார்க்கக்கூடிய அளவுக்கு வழிவகுக்கிறது. இது அவருடைய இருதயத்திற்கு ஒரு பெரிய கண்ணியாக அமைந்துவிடும். நீங்கள் ஒரு பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; ஒரு ஆண் உங்களைப் பார்ப்பது போன்ற அதே கண்ணோட்டத்தில் உங்களால் உங்களைப் பார்க்க முடியாது. உங்களுடைய கையற்ற அல்லது தளர்வான குட்டைக் கை ரவிக்கைகளால், உங்கள் சகோதரர்களில் பலவீனமான ஒருவர் சோதிக்கப்பட்டால், அந்த ஆடையினால் நீங்கள் பெறுகிற சிறிய சௌகரியத்தையும், நாகரிகத்தையும் தவிர்த்துவிட்டு, அவருடைய நன்மைக்காக உங்கள் உடலைக் கொஞ்சம் கண்ணியமாக மறைக்கக் கூடாதா?