1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகத்தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து, | யாத் 29:1-4 |
3 | சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார். | எண் 20:8 எண் 21:16 1நாளா 13:5 1நாளா 15:3 2நாளா 5:2 2நாளா 5:6 2நாளா 30:2 2நாளா 30:13 2நாளா 30:25 நெகே 8:1 சங் 22:25 அப் 2:1 |
4 | கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடினபோது, | லேவி 8:9 லேவி 8:13 லேவி 8:17 லேவி 8:29 லேவி 8:35 யாத் 39:1 யாத் 39:5 யாத் 39:7 யாத் 39:21 யாத் 39:26 யாத் 39:29 யாத் 39:31 யாத் 39:32 யாத் 39:42 யாத் 39:43 உபா 12:32 மத் 28:20 1கொரி 11:23 1கொரி 15:3 |
5 | மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி, | யாத் 29:4-37 |
6 | கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, | யாத் 29:4 யாத் 40:12 சங் 51:2 சங் 51:7 ஏசா 1:16 எசே 36:25 சகரி 13:1 யோவா 13:8-10 1கொரி 6:11 எபே 5:26 எபிரெ 9:10 எபிரெ 10:22 வெளிப் 1:5 வெளிப் 1:6 வெளிப் 7:14 |
7 | அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக்கட்டி, | யாத் 28:4 யாத் 29:5 யாத் 39:1-7 ஏசா 61:3 ஏசா 61:10 ரோம 3:22 ரோம 13:14 கலா 3:27 |
8 | அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து, | யாத் 28:15-29 யாத் 39:8-21 உன்ன 8:6 ஏசா 59:17 எபே 6:14 1தெச 5:8 |
9 | அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைத் கட்டினான். | யாத் 28:4 யாத் 28:36-38 யாத் 29:6 யாத் 39:28-30 சகரி 3:5 சகரி 6:11-14 பிலிப் 2:9-11 |
10 | பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி, | யாத் 30:23-29 யாத் 40:9-11 |
11 | அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி, | யாத் 4:6 யாத் 4:17 யாத் 16:14 யாத் 16:19 ஏசா 52:15 எசே 36:25 தீத் 3:6 |
12 | அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான். | லேவி 4:3 லேவி 21:10 லேவி 21:11 லேவி 21:12 யாத் 28:41 யாத் 29:7 யாத் 30:30 சங் 133:2 |
13 | பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக்கட்டி, குல்லாக்களைத் தரித்து, | யாத் 28:40 யாத் 28:41 யாத் 29:8 யாத் 29:9 யாத் 40:14 யாத் 40:15 சங் 132:9 ஏசா 61:6 ஏசா 61:10 1பேது 2:5 1பேது 2:9 வெளிப் 1:6 வெளிப் 5:10 |
14 | பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்; | லேவி 8:2 லேவி 4:3-12 லேவி 16:6 யாத் 29:10-14 ஏசா 53:10 எசே 43:19 ரோம 8:3 2கொரி 5:21 எபிரெ 7:26-28 1பேது 3:18 |
15 | அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான். | லேவி 1:5 லேவி 1:11 லேவி 3:2 லேவி 3:8 யாத் 29:10 யாத் 29:11 |
16 | பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து, | லேவி 3:3-5 லேவி 4:8 லேவி 4:9 யாத் 29:13 |
17 | காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான். | லேவி 4:11 லேவி 4:12 லேவி 4:21 லேவி 6:30 லேவி 16:27 யாத் 29:14 கலா 3:13 எபிரெ 13:11-13 |
18 | பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். | லேவி 1:4-13 யாத் 29:15-18 |
19 | அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். |
20 | ஆட்டுக்கடா சந்துசந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான். |
21 | குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான். | லேவி 1:17 லேவி 2:9 ஆதி 8:21 யாத் 29:18 எபே 5:2 |
22 | பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். | லேவி 8:2 லேவி 8:29 லேவி 7:37 யாத் 29:19-31 யோவா 17:19 1கொரி 1:30 2கொரி 5:21 எபே 5:25 எபே 5:27 வெளிப் 1:5 வெளிப் 1:6 |
23 | பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான். | லேவி 14:14 லேவி 14:17 லேவி 14:28 யாத் 29:20 ரோம 6:13 ரோம 6:19 ரோம 12:1 1கொரி 1:2 1கொரி 1:30 1கொரி 6:20 1தெச 5:22 பிலிப் 1:20 பிலிப் 2:17 எபிரெ 2:10 எபிரெ 5:8 |
24 | பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, | எபிரெ 9:22 |
25 | கொழுப்பையும், வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து, | லேவி 3:3-5 லேவி 3:9-5 யாத் 29:22-25 நீதி 23:26 ஏசா 53:10 |
26 | கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து, | யாத் 29:23 யோவா 1:14 அப் 5:12 1தீமோ 2:5 |
27 | அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, | யாத் 29:24-37 எரே 30:21 எபிரெ 9:14 |
28 | பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது. | யாத் 29:25 சங் 22:13 சங் 22:14 சகரி 13:7 எபிரெ 10:14-22 |
29 | பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று. | லேவி 7:30-34 யாத் 29:26 யாத் 29:27 ஏசா 66:20 1கொரி 10:31 1பேது 4:11 |
30 | மோசே அபிஷேகதைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான். | யாத் 29:21 யாத் 30:30 ஏசா 61:1 ஏசா 61:3 கலா 5:22-25 எபிரெ 2:11 1பேது 1:2 1யோவா 2:27 வெளிப் 7:14 |
31 | பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும், அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து, | லேவி 6:28 லேவி 7:15 யாத் 29:31 யாத் 29:32 உபா 12:6 உபா 12:7 1சாமு 2:13-17 எசே 46:20-24 |
32 | மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து, | லேவி 7:17 யாத் 12:10 யாத் 29:34 நீதி 27:1 பிரச 9:10 2கொரி 6:2 எபிரெ 3:13 எபிரெ 3:14 |
33 | பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள். | லேவி 14:8 யாத் 29:30 யாத் 29:35 எண் 19:12 எசே 43:25-27 |
34 | இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். | எபிரெ 7:16 எபிரெ 7:27 எபிரெ 10:11 எபிரெ 10:12 |
35 | நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான். | லேவி 14:8 யாத் 29:35 எண் 19:12 எசே 43:25 2கொரி 7:1 கொலோ 2:9 கொலோ 2:10 எபிரெ 7:28 எபிரெ 9:23 எபிரெ 9:24 |
36 | கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள். | யாத் 39:43 யாத் 40:16 உபா 4:2 உபா 12:32 1சாமு 15:22 |