1 | எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து, | லேவி 8:33 லேவி 14:10 லேவி 14:23 லேவி 15:14 லேவி 15:29 எண் 6:10 எசே 43:26 எசே 43:27 மத் 28:1 |
2 | ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய். | லேவி 9:7 லேவி 9:8 லேவி 4:3 லேவி 8:14 யாத் 29:1 2கொரி 5:21 எபிரெ 5:3 எபிரெ 7:27 எபிரெ 10:10-14 |
3 | மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும், | லேவி 4:23 லேவி 16:5 லேவி 16:15 எஸ்றா 6:17 எஸ்றா 10:19 ஏசா 53:10 ரோம 8:3 2கொரி 5:21 தீத் 2:14 எபிரெ 9:26-28 1பேது 2:24 1பேது 3:18 வெளிப் 5:9 |
4 | சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான். | லேவி 3:1-17 |
5 | மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள். | யாத் 19:17 உபா 31:12 1நாளா 15:3 2நாளா 5:2 2நாளா 5:3 நெகே 8:1 |
6 | அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான். | லேவி 9:23 யாத் 16:10 யாத் 24:16 யாத் 40:34 யாத் 40:35 1இரா 8:10-12 2நாளா 5:13 2நாளா 5:14 எசே 43:2 |
7 | மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான். | லேவி 9:2 லேவி 4:3 லேவி 4:20 லேவி 8:34 1சாமு 3:14 எபிரெ 5:3 எபிரெ 7:27 எபிரெ 7:28 எபிரெ 9:7 |
8 | அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான். | லேவி 1:4 லேவி 1:5 லேவி 4:4 லேவி 4:29 |
9 | ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, | லேவி 4:6 லேவி 4:7 லேவி 4:17 லேவி 4:18 லேவி 4:25 லேவி 4:30 லேவி 8:15 லேவி 16:18 எபிரெ 2:10 எபிரெ 9:22 எபிரெ 9:23 எபிரெ 10:4-19 |
10 | பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து, | லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 4:8-12 லேவி 4:34-12 லேவி 4:35-12 லேவி 8:16 லேவி 8:17 சங் 51:17 நீதி 23:26 ஏசா 53:10 ஏசா 57:15 ஏசா 66:2 |
11 | மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான். | லேவி 4:11 லேவி 4:12 லேவி 4:21 லேவி 8:17 லேவி 16:27 லேவி 16:28 எபிரெ 13:11 எபிரெ 13:12 |
12 | பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். | லேவி 1:1-17 லேவி 8:18-21 எபே 5:2 எபே 5:25-27 |
13 | சர்வாங்கதகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து, |
14 | குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான். | லேவி 8:21 |
15 | பின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக்கொன்று, முந்தினதைப் பலியிட்டது போல, அதைப் பாவநிவாரணபலியாக்கி, | லேவி 9:3 லேவி 4:27-31 லேவி 9:15 எண் 28:1-29 ஏசா 53:10 2கொரி 5:21 தீத் 2:14 எபிரெ 2:17 எபிரெ 5:3 |
16 | சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு, | லேவி 9:12-14 லேவி 1:3-10 லேவி 8:18-21 எபிரெ 10:1-22 |
17 | போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான். | லேவி 9:1 லேவி 2:1 லேவி 2:2 யாத் 29:38 யாத் 29:41 யோவா 6:53 கலா 2:20 |
18 | பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, | லேவி 3:1-17 லேவி 7:11-18 ரோம 5:1 ரோம 5:10 எபே 2:14-17 கொலோ 1:20 |
19 | காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து, | லேவி 9:10 லேவி 3:5 லேவி 3:16 |
20 | கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான். | லேவி 7:29-34 |
21 | மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். | லேவி 7:24 லேவி 7:26 லேவி 7:30-34 யாத் 29:27 யாத் 29:28 ஏசா 49:3 லூக் 2:13 1பேது 4:11 |
22 | பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான். | ஆதி 14:18-20 எண் 6:23-27 உபா 10:8 உபா 21:5 1இரா 8:55 1நாளா 23:13 2நாளா 6:3 சங் 72:17 மாற் 10:16 லூக் 24:50 அப் 3:26 2கொரி 13:14 எபிரெ 7:6 எபிரெ 7:7 1பேது 3:9 |
23 | பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது. | லூக் 1:21 லூக் 1:22 எபிரெ 9:24-28 |
24 | அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள். | லேவி 6:13 ஆதி 4:3 ஆதி 4:4 ஆதி 15:17 யாத் 3:2 நியா 6:21 நியா 13:19 நியா 13:20 நியா 13:23 1இரா 18:38 2இரா 19:15 1நாளா 21:26 2நாளா 6:2 2நாளா 7:1-3 சங் 20:3 சங் 20:4 சங் 80:1 |