இணை வசன வேதாகமம்

எண்ணாகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:எண் 10:11 எண் 10:12 யாத் 19:1 லேவி 27:34
2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.எண் 26:2-4 எண் 26:63-4 எண் 26:64-4 யாத் 30:12 யாத் 38:26 2சாமு 24:1-3 1நாளா 21:1 1நாளா 21:2 1நாளா 27:23 1நாளா 27:24
3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.எண் 14:29 எண் 32:11 யாத் 30:14
4ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.எண் 1:16 எண் 2:3-31 எண் 7:10-83 எண் 10:14-27 எண் 13:2-15 எண் 17:3 எண் 25:4 எண் 25:14 எண் 34:18-28 யாத் 18:25 யோசு 22:14 1நாளா 27:1-22
5உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.எண் 2:10 எண் 7:30 எண் 10:18 ஆதி 29:32-35 ஆதி 30:5-20 ஆதி 35:17-26 ஆதி 46:8-24 ஆதி 49:1-33 யாத் 1:2-5 உபா 33:1-29 வெளிப் 7:4-8
6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.எண் 2:12 எண் 7:36
7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.எண் 2:3 எண் 7:12 எண் 10:14 ரூத் 4:18 1நாளா 2:10 1நாளா 2:11 மத் 1:2-5 லூக் 3:32
8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.எண் 2:5 எண் 7:18 எண் 10:15
9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.எண் 2:7 எண் 7:24 எண் 10:16
10யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.எண் 2:18 எண் 7:48 எண் 10:22 1நாளா 7:26 1நாளா 7:27
11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.எண் 2:22 எண் 7:60 எண் 10:24
12தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் குமாரன் அகியேசேர்.எண் 2:25 எண் 7:66 எண் 10:25
13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.எண் 2:27 எண் 7:72 எண் 10:26
14காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.எண் 7:42 எண் 10:20
15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.எண் 2:29 எண் 7:78 எண் 10:27
16இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.எண் 2:3-31 எண் 7:2 எண் 7:10-83 எண் 10:14-27 எண் 11:17 எண் 16:2 எண் 26:9 நியா 6:15 1நாளா 27:16-22
17அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு,எண் 1:5-15 யோவா 10:3 வெளிப் 7:4-17
18இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.எஸ்றா 2:59 நெகே 7:61 எபிரெ 7:3 எபிரெ 7:6
19இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.எண் 1:2 எண் 26:1 எண் 26:2 2சாமு 24:1-10
20இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,எண் 2:10 எண் 2:11 எண் 26:5-7 ஆதி 29:32 ஆதி 46:9 ஆதி 49:3 ஆதி 49:4 1நாளா 5:1
21ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.எண் 2:10 எண் 2:11 எண் 26:7
22சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,எண் 2:12 எண் 2:13 எண் 26:12-14 ஆதி 29:33 ஆதி 34:25-30 ஆதி 42:24 ஆதி 46:10 ஆதி 49:5 ஆதி 49:6
23சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.எண் 2:13 எண் 25:8 எண் 25:9 எண் 25:14 எண் 26:14
24காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,எண் 2:14 எண் 2:15 எண் 26:15-18 ஆதி 30:10 ஆதி 30:11 ஆதி 46:16 ஆதி 49:19
25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.எண் 2:15 எண் 26:18
26யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,எண் 2:3 எண் 2:4 எண் 26:19-22 ஆதி 29:35 ஆதி 46:12 ஆதி 49:8-12 2சாமு 24:9 1நாளா 5:2 2நாளா 17:14-16
27யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.எண் 2:3 எண் 2:4 எண் 26:22 2சாமு 24:9 2நாளா 17:14-16
28இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,எண் 2:5 எண் 2:6 எண் 23:23-25 ஆதி 30:18 ஆதி 46:13 ஆதி 49:14 ஆதி 49:15
29இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.எண் 2:6 எண் 26:25
30செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,எண் 2:7 எண் 2:8 எண் 26:26 எண் 26:27 ஆதி 30:20 ஆதி 46:14 ஆதி 49:13
31செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.எண் 2:8 எண் 26:27
32யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,எண் 2:18 எண் 2:19 எண் 26:35-37 ஆதி 30:24 ஆதி 37:1-36 ஆதி 39:1-23 ஆதி 46:20 ஆதி 48:1-22 ஆதி 49:22-26 உபா 33:17
33எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.ஆதி 48:5 உபா 33:17
34மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
35மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.எண் 2:21 எண் 26:34 ஆதி 48:19 ஆதி 48:20
36பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,ஆதி 35:16-18 ஆதி 44:20 ஆதி 46:21 ஆதி 49:27
37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.எண் 2:23 எண் 26:41 நியா 20:44-46 2நாளா 17:17
38தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,ஆதி 30:5 ஆதி 30:6 ஆதி 46:23 ஆதி 49:16 ஆதி 49:17
39தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.எண் 2:26 எண் 26:43
40ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,ஆதி 30:12 ஆதி 30:13 ஆதி 46:27 ஆதி 49:20
41ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.எண் 2:28 எண் 26:47
42நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,ஆதி 30:7 ஆதி 30:8 ஆதி 46:24 ஆதி 49:21
43நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.எண் 2:30 எண் 26:50
44எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.எண் 1:2-16 எண் 26:64
45இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,
46ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.எண் 2:32 எண் 23:10 எண் 26:51 ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:6 ஆதி 22:17 ஆதி 26:3 ஆதி 28:14 ஆதி 46:3 ஆதி 46:4 யாத் 12:37 யாத் 38:26 உபா 10:22 1இரா 4:20 2சாமு 24:9 1நாளா 21:5 2நாளா 13:3 2நாளா 17:14-19 எபிரெ 11:11 எபிரெ 11:12 வெளிப் 7:4-9
47லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.எண் 1:3 எண் 1:50 எண் 2:33 எண் 3:1-51 எண் 4:1-49 எண் 8:1-26 எண் 26:57-62 1நாளா 6:1-81 1நாளா 21:6
48கர்த்தர் மோசேயை நோக்கி:
49நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,எண் 2:33 எண் 26:62
50லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.எண் 3:1-10 எண் 4:15 எண் 4:25-33 யாத் 31:18 யாத் 32:26-29 யாத் 38:21 1நாளா 23:1-32 1நாளா 25:1-26 எஸ்றா 8:25-30 எஸ்றா 8:33-30 எஸ்றா 8:34-30 நெகே 12:8 நெகே 12:22 நெகே 12:47 நெகே 13:5 நெகே 13:10-13 நெகே 13:22-13
51வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலை செய்யப்படக்கடவன்.எண் 4:5-33 எண் 10:11 எண் 10:17-21
52இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.எண் 2:2 எண் 2:34 எண் 10:1-36 எண் 24:2
53இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.எண் 1:50 எண் 3:7 எண் 18:3 1தீமோ 4:13-16 2தீமோ 4:2 2தீமோ 8:19 2தீமோ 16:46 2தீமோ 18:5 லேவி 10:6 1சாமு 6:19 எரே 5:31 எரே 23:15 அப் 20:28-31
54கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.எண் 2:34 யாத் 23:21 யாத் 23:22 யாத் 39:32 யாத் 39:43 யாத் 40:16 யாத் 40:32 உபா 12:32 1சாமு 15:22 மத் 28:20

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.