1 | குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. | லேவி 5:1-6 லேவி 14:12 லேவி 14:13 லேவி 19:21 லேவி 19:22 எண் 6:12 எசே 40:39 எசே 44:29 எசே 46:20 |
2 | சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, | லேவி 1:3 லேவி 1:5 லேவி 1:11 லேவி 4:24 லேவி 4:29 லேவி 4:33 லேவி 6:25 எண் 6:12 எசே 40:39 |
3 | அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், | லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:15-11 லேவி 3:16-11 லேவி 4:8-10 யாத் 29:13 சங் 51:6 சங் 51:17 |
4 | இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. |
5 | இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. | லேவி 1:9 லேவி 1:13 லேவி 2:2 லேவி 2:9 லேவி 2:16 லேவி 3:16 கலா 2:20 கலா 5:24 1பேது 4:1 1பேது 4:2 |
6 | ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. | லேவி 6:16-18 லேவி 6:29-18 எண் 18:9 எண் 18:10 |
7 | பாவநிவாரணபலி எப்படியோ குற்ற நிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும். | லேவி 6:25 லேவி 6:26 லேவி 14:13 |
8 | ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். | லேவி 1:6 லேவி 4:11 ஆதி 3:21 யாத் 29:14 எண் 19:5 ரோம 13:14 |
9 | அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும். | லேவி 2:4-7 எண் 18:9 எசே 44:29 |
10 | எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும். | யாத் 16:18 2கொரி 8:14 |
11 | கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால், | லேவி 3:1-17 லேவி 22:18-21 எசே 45:15 |
12 | அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன். | லேவி 22:29 2நாளா 29:31 2நாளா 33:16 நெகே 12:43 சங் 50:13 சங் 50:14 சங் 50:23 சங் 103:1 சங் 103:2 சங் 107:8 சங் 107:21 சங் 107:22 சங் 116:17 எரே 33:11 ஓசி 14:2 லூக் 17:16 லூக் 17:18 ரோம 1:21 2கொரி 9:11-15 எபே 5:20 எபிரெ 13:15 1பேது 2:5 |
13 | அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும். | லேவி 23:17 ஆமோ 4:5 மத் 13:33 1தீமோ 4:4 |
14 | அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும். | யாத் 29:27 யாத் 29:28 எண் 15:19-21 எண் 18:24-28 எண் 31:29 எண் 31:41 |
15 | சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது. |
16 | அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம். | லேவி 22:18-21 லேவி 23:38 எண் 15:3 உபா 12:6 உபா 12:11 உபா 12:17 உபா 12:26 சங் 66:13 சங் 116:14 சங் 116:18 நாகூ 1:15 |
17 | பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. | லேவி 19:7 ஆதி 22:4 யாத் 19:11 ஓசி 6:2 1கொரி 15:4 |
18 | சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். | லேவி 10:19 லேவி 19:7 லேவி 19:8 லேவி 22:23 லேவி 22:25 எரே 14:10 எரே 14:12 ஓசி 8:13 ஆமோ 5:22 மல்கி 1:10 மல்கி 1:13 |
19 | தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம். | லேவி 11:24-39 எண் 19:11-16 லூக் 11:41 அப் 10:15 அப் 10:16 அப் 10:28 ரோம 14:14 ரோம 14:20 2கொரி 6:17 தீத் 1:15 |
20 | ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். | லேவி 15:2 லேவி 15:3-33 1கொரி 11:28 |
21 | மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். | லேவி 5:2 லேவி 5:3 லேவி 12,1-13:59 லேவி 15:1-33 லேவி 22:4 எண் 19:11-16 |
22 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
23 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது. | லேவி 3:16 லேவி 3:17 லேவி 4:8-10 லேவி 17:6 உபா 32:38 1சாமு 2:15-17 1சாமு 2:29-17 அப் 28:27 ரோம 8:13 ரோம 13:13 |
24 | தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது. | லேவி 17:15 லேவி 22:8 யாத் 22:31 உபா 14:21 எசே 4:14 எசே 44:31 |
25 | கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். |
26 | உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது. | லேவி 3:17 லேவி 17:10-14 ஆதி 9:4 1சாமு 14:33 1சாமு 14:34 எசே 33:25 யோவா 6:53 அப் 15:20 அப் 15:29 எபே 1:7 1தீமோ 4:4 |
27 | எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார். | லேவி 7:20 லேவி 7:21 லேவி 7:25 எபிரெ 10:29 |
28 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
29 | நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக. | லேவி 3:1-17 கொலோ 1:20 1யோவா 1:7 |
30 | கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன். | லேவி 3:3 லேவி 3:4 லேவி 3:9 லேவி 3:14 சங் 110:3 யோவா 10:18 2கொரி 8:12 |
31 | அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும். | லேவி 3:5 லேவி 3:11 லேவி 3:16 |
32 | உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. | லேவி 7:34 லேவி 8:25 லேவி 8:26 லேவி 9:21 லேவி 10:14 எண் 6:20 எண் 18:18 எண் 18:19 உபா 18:3 1கொரி 9:13 1கொரி 9:14 |
33 | ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும். | லேவி 7:3 லேவி 6:1-30 லேவி 26:1-46 |
34 | இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார். | லேவி 7:30-32 லேவி 10:14 லேவி 10:15 யாத் 29:28 எண் 18:18 எண் 18:19 உபா 18:3 |
35 | கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை. | லேவி 8:10-12 லேவி 8:30-12 யாத் 29:7 யாத் 29:21 யாத் 40:13-15 ஏசா 10:27 ஏசா 61:1 யோவா 3:34 2கொரி 1:21 1யோவா 2:20 1யோவா 2:27 |
36 | இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார். | லேவி 8:12 லேவி 8:30 யாத் 40:13 யாத் 40:15 |
37 | சர்வாங்கதகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. | லேவி 1:1-17 லேவி 6:9-13 யாத் 29:38-42 |
38 | கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார். | லேவி 1:1 லேவி 1:2 |