1 | பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது: | லேவி 5:15 லேவி 5:17 எண் 15:22-29 உபா 19:4 1சாமு 14:27 சங் 19:12 1தீமோ 1:13 எபிரெ 5:2 எபிரெ 9:7 |
3 | அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். | லேவி 8:12 லேவி 21:10-12 யாத் 29:7 யாத் 29:21 |
4 | அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரவாசலில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன். | லேவி 1:3 யாத் 29:10 யாத் 29:11 |
5 | அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து, | லேவி 4:16 லேவி 4:17 லேவி 16:14 லேவி 16:19 எண் 19:4 1யோவா 1:7 |
6 | தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன். | லேவி 4:17 லேவி 4:25 லேவி 4:30 லேவி 4:34 லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:14 லேவி 16:19 எண் 19:4 |
7 | பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, | லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:18 யாத் 30:1-10 சங் 118:27 எபிரெ 9:21-15 |
8 | பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், | லேவி 4:19 லேவி 4:26 லேவி 4:31 லேவி 4:35 லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:14-16 லேவி 7:3-5 லேவி 16:25 ஏசா 53:10 யோவா 12:27 |
9 | இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும், |
10 | சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். |
11 | காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதன் குடல்களையும், அதன் சாணியையும், | லேவி 4:21 லேவி 6:30 லேவி 8:14-17 லேவி 9:8-11 லேவி 16:27 யாத் 29:14 எண் 19:5 சங் 103:12 எபிரெ 13:11-13 |
12 | காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன். | லேவி 13:46 எண் 5:3 எண் 15:35 எண் 19:3 |
13 | இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால், | லேவி 4:1 லேவி 4:2 லேவி 5:2-5 லேவி 5:17-5 எண் 15:24-29 யோசு 7:11 யோசு 7:24-26 1தீமோ 1:13 எபிரெ 10:26-29 |
14 | அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும். |
15 | சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும். | யாத் 24:1 யாத் 24:9 எண் 11:16 எண் 11:25 உபா 21:3-9 |
16 | அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவந்து, | லேவி 4:5-12 எபிரெ 9:12-14 |
17 | தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து, | லேவி 4:6 லேவி 4:7 |
18 | ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, |
19 | அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து, | லேவி 4:8-10 லேவி 4:26-10 லேவி 4:31-10 லேவி 4:35-10 லேவி 5:6 லேவி 6:7 லேவி 12:8 லேவி 14:18 எண் 15:25 சங் 22:14 எபிரெ 1:3 எபிரெ 9:14 |
20 | பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். | லேவி 4:26 லேவி 1:4 லேவி 5:6 லேவி 6:7 லேவி 12:8 லேவி 14:18 யாத் 32:30 எண் 15:25 தானி 9:24 ரோம 5:11 கலா 3:13 எபிரெ 1:3 எபிரெ 2:17 எபிரெ 9:14 எபிரெ 10:10-12 1யோவா 1:7 1யோவா 2:2 வெளிப் 1:5 |
21 | பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி. | லேவி 4:11 லேவி 4:12 |
22 | ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், | யாத் 18:21 எண் 16:2 2சாமு 21:1-3 2சாமு 24:10-17 |
23 | தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து, | லேவி 4:14 லேவி 5:4 2இரா 22:10-13 |
24 | அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக்கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி. | லேவி 4:4-35 ஏசா 53:6 |
25 | அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, | லேவி 4:7 லேவி 4:18 லேவி 4:30 லேவி 4:34 லேவி 8:10 லேவி 8:15 லேவி 9:9 லேவி 16:18 ஏசா 40:21 ரோம 3:24-26 ரோம 8:3 ரோம 8:4 ரோம 10:4 எபிரெ 2:10 எபிரெ 9:22 |
26 | அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். | லேவி 4:8-10 லேவி 4:35-10 |
27 | சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், | லேவி 4:2 எண் 15:27 |
28 | தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது. அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து, | லேவி 4:23 லேவி 4:32 லேவி 5:6 ஆதி 3:15 ஏசா 7:14 எரே 31:22 ரோம 8:3 கலா 4:4 கலா 4:5 |
29 | பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன். | லேவி 4:4 லேவி 4:15 லேவி 4:24 லேவி 4:33 எபிரெ 10:4-14 |
30 | அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, | லேவி 4:25 லேவி 4:34 ஏசா 42:21 ரோம 8:3 ரோம 8:4 ரோம 10:4 எபிரெ 2:10 |
31 | சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். | லேவி 4:8-10 லேவி 4:19-10 லேவி 4:26-10 லேவி 4:35-10 லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:14-16 |
32 | அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுகுட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து, | லேவி 4:28 லேவி 3:6 லேவி 3:7 லேவி 5:6 யாத் 12:3 யாத் 12:5 ஏசா 53:7 லூக் 1:35 யோவா 1:29 யோவா 1:36 எபிரெ 7:26 1பேது 1:18-20 1பேது 2:22 1பேது 2:24 1பேது 3:18 வெளிப் 5:6 வெளிப் 5:8 வெளிப் 5:9 |
33 | அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன். | லேவி 4:4 லேவி 4:29-31 |
34 | அப்பொழுது ஆசாரியன் அந்தப்பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, | லேவி 4:25 லேவி 4:30 ஏசா 42:21 யோவா 17:19 ரோம 8:1 ரோம 8:3 ரோம 10:4 2கொரி 5:21 எபிரெ 2:10 எபிரெ 10:29 1பேது 1:18-20 1பேது 2:24 1பேது 3:18 |
35 | சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதன் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். | லேவி 1:1-6 |