இணை வசன வேதாகமம்

லேவியராகமம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.லேவி 7:11-21 லேவி 7:29-34 லேவி 22:19-21 யாத் 20:24 யாத் 24:5 யாத் 29:28 எண் 6:14 எண் 7:17 நியா 20:26 நியா 21:4 1நாளா 21:26 நீதி 7:14 எசே 45:15 ஆமோ 5:22 ரோம 5:1 ரோம 5:2 கொலோ 1:20 1யோவா 1:3
2அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.லேவி 1:4 லேவி 1:5 லேவி 8:22 லேவி 16:21 லேவி 16:22 யாத் 29:10 ஏசா 53:6 2கொரி 5:21 1யோவா 1:9 1யோவா 1:10
3பின்பு சமாதான பலியிலே குடல்களைமூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,லேவி 3:16 லேவி 4:8 லேவி 4:9 லேவி 7:3 லேவி 7:4 யாத் 29:13 யாத் 29:22 உபா 30:6 சங் 119:70 நீதி 23:26 ஏசா 6:10 எசே 36:26 மத் 13:16 மத் 15:8 ரோம 5:5 ரோம 6:6
4இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.லேவி 3:10 லேவி 3:15 லேவி 4:9 லேவி 7:4 லேவி 8:16 லேவி 8:25 லேவி 9:10 லேவி 9:19 யாத் 29:13 யாத் 29:22
5அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.லேவி 1:9 லேவி 4:31 லேவி 4:35 லேவி 6:12 லேவி 9:9 லேவி 9:10 யாத் 29:13 1சாமு 2:15 1சாமு 2:16 1இரா 8:64 2நாளா 35:14 எசே 44:7 எசே 44:15
6அவன் கர்த்தருக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.கலா 4:4 எபே 1:10 எபே 2:13-22
7அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,லேவி 3:1 1இரா 8:62 எபே 5:2 எபே 5:12 எபிரெ 9:14
8தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.லேவி 3:2-5 லேவி 3:13-5 லேவி 4:4 லேவி 4:15 லேவி 4:24 ஏசா 53:6 ஏசா 53:11 ஏசா 53:12 2கொரி 5:21 1பேது 2:24
9பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,லேவி 3:3 லேவி 3:4 நீதி 23:26 ஏசா 53:10
10இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
11அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.லேவி 3:5 சங் 22:14 ஏசா 53:4-10 ரோம 8:32
12அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,லேவி 3:1 லேவி 3:7-17 லேவி 1:2 லேவி 1:6 லேவி 1:10 லேவி 9:3 லேவி 9:15 லேவி 10:16 லேவி 22:19-27 ஏசா 53:2 ஏசா 53:6 மத் 25:32 மத் 25:33 ரோம 8:3 2கொரி 5:21
13அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.லேவி 3:1-5 லேவி 3:8-5 ஏசா 53:6 ஏசா 53:11 ஏசா 53:12 2கொரி 5:21 1பேது 2:24 1பேது 3:18
14அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,லேவி 3:3-5 லேவி 3:9-11 சங் 22:14 சங் 22:15 நீதி 23:26 எரே 20:18 மத் 22:37 மத் 26:38 ரோம 12:1 ரோம 12:2
15இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
16ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.லேவி 3:3-5 லேவி 3:9-11 லேவி 3:14-11 லேவி 3:15-11 லேவி 4:8-19 லேவி 4:26-19 லேவி 4:31-19 லேவி 7:23-25 லேவி 8:25 லேவி 9:24 லேவி 17:6 யாத் 29:13 யாத் 29:22 1சாமு 2:15 1சாமு 2:16 2நாளா 7:7 ஏசா 53:10 மத் 22:37
17கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.லேவி 6:18 லேவி 7:36 லேவி 16:34 லேவி 17:7 லேவி 23:14 எண் 19:21

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.