இணை வசன வேதாகமம்

லேவியராகமம் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,லேவி 6:14-18 லேவி 6:20-23 லேவி 9:17 எண் 15:4-21 ஏசா 66:20 யோவா 6:35
2அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.லேவி 2:9 லேவி 5:12 லேவி 6:15 லேவி 24:7 யாத் 30:16 எண் 5:18 நெகே 13:14 நெகே 13:22 ஏசா 66:3 அப் 10:4
3அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.லேவி 6:16 லேவி 6:17 லேவி 6:26 லேவி 7:9 லேவி 10:12 லேவி 10:13 லேவி 21:22 எண் 18:9 1சாமு 2:28
4நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.1நாளா 23:28 1நாளா 23:29 சங் 22:14 எசே 46:20 மத் 26:38 யோவா 12:27
5நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
6அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.லேவி 1:6 சங் 22:1-21 மாற் 14:1-15 யோவா 18:1-19
7நீ படைப்பது பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.லேவி 2:1 லேவி 2:2
8இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,
9அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.லேவி 2:2 லேவி 6:15
10இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.லேவி 6:17 யாத் 12:19 யாத் 12:20 மத் 16:6 மத் 16:11 மத் 16:12 மாற் 8:15 லூக் 12:1 1கொரி 5:6-8 கலா 5:9
12முதற்கனிகளைக் காணிக்கையாகக்கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.ஆதி 23:10 ஆதி 23:11 ஆதி 23:17 யாத் 22:29 யாத் 23:10 யாத் 23:11 யாத் 23:19 எண் 15:20 உபா 26:10 2நாளா 31:5 1கொரி 15:20 வெளிப் 14:4
13நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.எஸ்றா 7:22 எசே 43:24 மத் 5:13 மாற் 9:49 மாற் 9:50 கொலோ 4:6
14முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.லேவி 22:29 லேவி 23:10 லேவி 23:14-17 லேவி 23:20-17 ஆதி 4:3 எண் 28:2 உபா 26:2 நீதி 3:9 நீதி 3:10 ஏசா 53:2-10 மல்கி 1:11 1கொரி 15:20 வெளிப் 14:4
15அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
16பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.லேவி 2:1 லேவி 2:2 லேவி 2:4-7 லேவி 2:9-7 லேவி 2:12-7 சங் 141:2 ஏசா 11:2-4 ஏசா 61:1 ரோம 8:26 ரோம 8:27 எபிரெ 5:7

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.