| 1 | அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்? | எரே 49:7 எரே 49:23 எரே 49:28 எரே 48:1 |
| 2 | ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 4:19 எசே 25:4-6 ஆமோ 1:14 |
| 3 | எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப்போவான். | எரே 48:20 எரே 51:8 ஏசா 13:6 ஏசா 14:31 ஏசா 15:2 ஏசா 16:7 ஏசா 23:1 ஏசா 23:6 யாக் 5:1 |
| 4 | எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது. | எரே 9:23 ஏசா 28:1-4 ஏசா 47:7 ஏசா 47:8 வெளிப் 18:7 |
| 5 | இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை. | எரே 49:29 எரே 15:8 எரே 20:4 எரே 48:41-44 யோசு 2:9 2இரா 7:6 2இரா 7:7 2இரா 19:7 யோபு 15:21 நீதி 28:1 |
| 6 | அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 49:39 எரே 46:26 எரே 48:47 ஏசா 19:18-23 ஏசா 23:18 எசே 16:53 |
| 7 | ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ? | எரே 25:9 எரே 25:21 ஆதி 25:30 ஆதி 27:41 ஆதி 36:8 எண் 20:14-21 எண் 24:17 எண் 24:18 உபா 23:7 சங் 83:4-10 சங் 137:7 ஏசா 34:1-17 ஏசா 63:1-6 எசே 25:12-14 எசே 35:1-15 தானி 11:41 யோவே 3:19 ஆமோ 1:11 ஆமோ 1:12 ஒபதி 1:1-9 மல்கி 1:3 மல்கி 1:4 |
| 8 | தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரப்பண்ணுவேன். | எரே 49:30 எரே 6:1 எரே 48:6 மத் 24:15-18 வெளிப் 6:15 |
| 9 | திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ? | ஏசா 17:6 ஒபதி 1:5 ஒபதி 1:6 |
| 10 | நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான். | மல்கி 1:3 மல்கி 1:4 ரோம 9:13 |
| 11 | திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக. | உபா 10:18 சங் 10:14-18 சங் 68:5 சங் 82:3 சங் 146:9 நீதி 23:10 நீதி 23:11 ஓசி 14:3 யோனா 4:11 மல்கி 3:5 யாக் 1:27 |
| 12 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய். | எரே 25:28 எரே 25:29 எரே 30:11 எரே 46:27 நீதி 17:5 புலம் 4:21 புலம் 4:22 ஒபதி 1:16 1பேது 4:17 1பேது 4:18 |
| 13 | போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 44:26 ஆதி 22:16 ஏசா 45:23 எசே 35:11 ஆமோ 6:8 |
| 14 | நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாதிபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன். | எரே 51:46 ஏசா 37:7 எசே 7:25 எசே 7:26 ஒபதி 1:1 மத் 24:6 |
| 15 | இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டை பண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார். | 1சாமு 2:7 1சாமு 2:8 1சாமு 2:30 சங் 53:5 ஒபதி 1:2 மீகா 7:10 லூக் 1:51 |
| 16 | கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 48:29 நீதி 16:18 நீதி 18:21 நீதி 29:23 ஏசா 25:4 ஏசா 25:5 ஏசா 49:25 ஒபதி 1:3 |
| 17 | அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான். | எரே 49:13 ஏசா 34:9-15 எசே 25:13 எசே 35:7 எசே 35:15 |
| 18 | சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை. | எரே 50:40 ஆதி 19:24 ஆதி 19:25 உபா 29:23 சங் 11:6 ஏசா 13:19-22 ஆமோ 4:11 செப் 2:9 2பேது 2:6 யூதா 1:7 |
| 19 | இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத்தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்? | எரே 4:7 எரே 50:44-46 சகரி 11:3 |
| 20 | ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார். | எரே 50:45 சங் 33:11 நீதி 19:21 ஏசா 14:24-27 ஏசா 46:10 ஏசா 46:11 அப் 4:28 எபே 1:11 |
| 21 | அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும். | எரே 50:46 ஏசா 14:4-15 எசே 26:15-18 எசே 21:16 எசே 32:10 வெளிப் 18:10 |
| 22 | இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார். | எரே 4:13 எரே 48:40 எரே 48:41 உபா 28:49 தானி 7:4 ஓசி 8:1 |
| 23 | தமஸ்குவைக்குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்துபோகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை. | ஆதி 14:15 ஆதி 15:2 1இரா 11:24 ஏசா 17:1-3 ஏசா 37:13 ஆமோ 1:3-5 சகரி 9:1 சகரி 9:2 2கொரி 11:32 |
| 24 | தமஸ்கு தளர்ந்துபோகும், புறங்காட்டி ஓடிப்போகும்; திகில் அதைப் பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது. |
| 25 | சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே! | எரே 33:9 எரே 48:2 எரே 48:39 எரே 51:41 சங் 37:35 சங் 37:36 ஏசா 1:26 ஏசா 14:4-6 தானி 4:30 வெளிப் 18:10 வெளிப் 18:16-19 |
| 26 | ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 9:21 எரே 11:22 எரே 50:30 எரே 51:3 எரே 51:4 புலம் 2:21 எசே 27:27 ஆமோ 4:10 |
| 27 | தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார். | ஆமோ 1:3-5 |
| 28 | பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய இராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழுப்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப் புத்திரரைப்பாழாக்குங்கள். | எரே 2:10 ஆதி 25:13 1நாளா 1:29 உன்ன 1:5 ஏசா 21:13 ஏசா 21:16 ஏசா 21:17 ஏசா 42:11 எசே 27:21 |
| 29 | அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள். | சங் 120:5 ஏசா 13:20 ஏசா 60:7 |
| 30 | காத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான். | எரே 25:9 எரே 25:24 எரே 25:25 எரே 27:6 ஏசா 10:7 |
| 31 | அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள். | எரே 48:11 சங் 123:4 ஏசா 32:9 ஏசா 32:11 |
| 32 | அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடுமாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 49:36 உபா 28:64 எசே 5:10 எசே 5:12 எசே 12:14 எசே 12:15 |
| 33 | ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே தங்குவதுமில்லையென்கிறார். | எரே 49:17 எரே 49:18 எரே 9:11 எரே 10:22 எரே 50:39 எரே 50:40 எரே 51:37 ஏசா 13:20-22 ஏசா 14:23 ஏசா 34:9-17 செப் 2:9 செப் 2:13-15 மல்கி 1:3 வெளிப் 18:2 வெளிப் 18:21 வெளிப் 18:22 |
| 34 | யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: | எரே 25:25 ஆதி 10:22 ஆதி 14:1 எஸ்றா 4:9 ஏசா 21:2 எசே 32:24 எசே 32:25 தானி 8:2 அப் 2:9 |
| 35 | சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு, | எரே 50:14 எரே 50:29 எரே 51:56 சங் 46:9 ஏசா 22:6 |
| 36 | வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின்மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத்திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள். | தானி 7:2 தானி 7:3 தானி 8:8 தானி 8:22 தானி 11:4 வெளிப் 7:1 |
| 37 | நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி, | எரே 49:5 எரே 49:22 எரே 49:24 எரே 49:29 எரே 48:39 எரே 50:36 சங் 48:4-6 எசே 32:23 |
| 38 | என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 43:10 தானி 7:9-14 |
| 39 | ஆனாலும் கடைசி நாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 48:47 ஏசா 2:2 எசே 38:16 தானி 2:28 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 |