| 1 | கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்: | எரே 25:26 எரே 25:27 எரே 27:7 எரே 51:1-14 சங் 137:8 சங் 137:9 ஏசா 13:1-3 ஏசா 14:4 ஏசா 21:1-10 ஏசா 47:1-15 ஆபகூ 2:5-20 வெளிப் 18:1-24 |
| 2 | பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள். | எரே 6:18 எரே 31:10 எரே 46:14 சங் 64:9 சங் 96:3 ஏசா 12:4 ஏசா 48:6 ஏசா 66:18 ஏசா 66:19 வெளிப் 14:6-8 |
| 3 | அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும். | எரே 50:9 எரே 50:41 எரே 51:11 எரே 51:27 எரே 51:48 ஏசா 13:5 ஏசா 13:17 ஏசா 13:18 ஏசா 13:20 |
| 4 | அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 50:20 எரே 3:16-18 எரே 33:15 எரே 51:47 எரே 51:48 ஏசா 63:4 |
| 5 | மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள். | எரே 6:16 சங் 25:8 சங் 25:9 சங் 84:7 ஏசா 35:8 யோவா 7:17 |
| 6 | என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். | எரே 50:17 சங் 119:176 ஏசா 53:6 மத் 9:36 மத் 10:6 மத் 15:24 மத் 18:11-13 லூக் 15:4-7 1பேது 2:25 |
| 7 | அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவஞ்செய்தார்கள் என்றார்கள். | எரே 50:17 எரே 50:33 எரே 12:7-11 சங் 79:7 ஏசா 9:12 ஏசா 56:9 |
| 8 | பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள். | எரே 51:6 எரே 51:45 எண் 16:26 ஏசா 48:20 ஏசா 52:1 சகரி 2:6 சகரி 2:7 2கொரி 6:17 வெளிப் 18:4 |
| 9 | இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை. | எரே 50:3 எரே 50:21 எரே 50:26 எரே 50:41 எரே 50:42 எரே 15:14 எரே 51:1-4 எரே 51:11-4 எரே 51:27-4 எரே 51:28-4 எஸ்றா 1:1 எஸ்றா 1:2 ஏசா 13:2-5 ஏசா 13:17-5 ஏசா 21:2 ஏசா 41:25 ஏசா 45:1-4 |
| 10 | கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 25:12 எரே 27:7 |
| 11 | என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே. | நீதி 17:5 புலம் 1:21 புலம் 2:15 புலம் 2:16 புலம் 4:21 புலம் 4:22 எசே 25:3-8 எசே 25:15-17 எசே 26:2 எசே 26:3 ஒபதி 1:12 |
| 12 | உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள். | எரே 49:2 கலா 4:26 வெளிப் 17:5 |
| 13 | கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான். | சகரி 1:15 |
| 14 | நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது. | எரே 50:9 எரே 51:2 எரே 51:11 எரே 51:12 எரே 51:27 1சாமு 17:20 2சாமு 10:9 ஏசா 13:4 ஏசா 13:17 ஏசா 13:18 |
| 15 | அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள். | எரே 51:14 யோசு 6:5 யோசு 6:20 எசே 21:22 |
| 16 | விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள். | எரே 51:23 யோவே 1:11 ஆமோ 5:16 |
| 17 | இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான். | எரே 50:6 எரே 23:1 எரே 23:2 எசே 34:5 எசே 34:6 எசே 34:12 யோவே 3:2 மத் 9:36-38 லூக் 15:4-6 யோவா 10:10-12 1பேது 2:25 |
| 18 | ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து, | ஏசா 37:36-38 எசே 31:3-17 நாகூ 1:1-3 செப் 2:13-15 |
| 19 | இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும். | எரே 50:4 எரே 50:5 எரே 3:18 எரே 23:3 எரே 24:6 எரே 24:7 எரே 30:10 எரே 30:18 எரே 31:8-10 எரே 32:37 எரே 33:7-12 ஏசா 65:9 ஏசா 65:10 எசே 11:17 எசே 34:13 எசே 34:14 எசே 36:24 எசே 36:33 எசே 37:21 எசே 37:22 எசே 38:8 எசே 39:25-29 ஆமோ 9:14 ஆமோ 9:15 ஒபதி 1:17-21 |
| 20 | அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 50:4 எரே 33:15 |
| 21 | மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 50:3 எரே 50:9 எரே 50:15 |
| 22 | தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு. | எரே 4:19-21 எரே 51:54-56 ஏசா 21:2-4 |
| 23 | சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று! | எரே 51:20-24 ஏசா 14:4-6 ஏசா 14:12-17 வெளிப் 18:16 |
| 24 | பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே. | பிரச 9:12 |
| 25 | கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை. | எரே 50:35-38 எரே 51:11 எரே 51:20 சங் 45:3 சங் 45:5 ஏசா 13:2-5 ஏசா 13:17-5 ஏசா 13:18-5 ஏசா 21:7-9 |
| 26 | கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள். | எரே 50:41 எரே 51:27 எரே 51:28 ஏசா 5:26 |
| 27 | அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே. | எரே 50:11 எரே 46:21 சங் 22:12 ஏசா 34:7 எசே 39:17-20 வெளிப் 19:17 |
| 28 | நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும். | எரே 51:50 எரே 51:51 ஏசா 48:20 |
| 29 | பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்பு செய்தது. | எரே 50:9 எரே 50:14 எரே 50:26 |
| 30 | ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 9:21 எரே 18:21 எரே 48:15 எரே 49:26 எரே 51:3 எரே 51:4 ஏசா 13:15-18 |
| 31 | இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது. | எரே 21:13 எரே 51:25 எசே 5:8 எசே 29:3 எசே 29:9 எசே 29:10 எசே 38:3 எசே 39:1 நாகூ 2:13 நாகூ 3:5 |
| 32 | இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும். | நீதி 16:18 நீதி 18:12 ஏசா 10:12-15 ஏசா 14:13-15 எசே 28:2-9 தானி 5:20 தானி 5:23-30 |
| 33 | சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள். | எரே 50:7 எரே 50:17 எரே 50:18 எரே 51:34-36 ஏசா 14:17 ஏசா 47:6 ஏசா 49:24-26 ஏசா 51:23 ஏசா 52:4-6 சகரி 1:15 சகரி 1:16 |
| 34 | அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார். | யாத் 6:6 நீதி 23:11 ஏசா 41:14 ஏசா 43:14 ஏசா 44:6 ஏசா 44:23 ஏசா 44:24 ஏசா 47:4 ஏசா 54:5 மீகா 4:10 வெளிப் 18:8 |
| 35 | பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 47:6 லேவி 26:25 ஏசா 66:16 எசே 14:2 ஓசி 11:6 சகரி 11:17 |
| 36 | பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள். | எரே 48:30 ஏசா 43:14 ஏசா 44:25 2தெச 2:9-11 1தீமோ 4:2 வெளிப் 19:20 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
| 37 | பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும். | எரே 51:21 சங் 20:7 சங் 20:8 சங் 46:9 சங் 76:6 எசே 39:20 நாகூ 2:2-4 நாகூ 2:13-4 ஆகா 2:22 |
| 38 | வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோகும்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள். | எரே 50:12 எரே 51:32-36 ஏசா 44:27 வெளிப் 16:12 வெளிப் 17:15 வெளிப் 17:16 |
| 39 | ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை. | எரே 50:12 எரே 50:13 எரே 25:12 எரே 51:26 எரே 51:37 எரே 51:38 எரே 51:43 எரே 51:62-64 ஏசா 13:20-22 ஏசா 14:23 ஏசா 34:11-17 வெளிப் 18:2 வெளிப் 18:21-24 |
| 40 | தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை. | எரே 49:18 எரே 51:26 ஆதி 19:24 ஆதி 19:25 உபா 29:23 ஏசா 1:9 ஏசா 13:19 ஏசா 13:20 ஓசி 11:8 ஓசி 11:9 ஆமோ 4:11 செப் 2:9 லூக் 17:28-30 2பேது 2:6 யூதா 1:7 வெளிப் 11:8 வெளிப் 18:8 வெளிப் 18:9 |
| 41 | இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள். | எரே 50:2 எரே 50:3 எரே 50:9 எரே 6:22 எரே 6:23 எரே 25:14 எரே 51:1 எரே 51:2 எரே 51:11 எரே 51:27 எரே 51:28 ஏசா 13:2-5 ஏசா 13:17-5 ஏசா 13:18-5 வெளிப் 17:16 |
| 42 | அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள். | எரே 6:22 எரே 6:23 |
| 43 | அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும். | எரே 51:31 ஏசா 13:6-8 ஏசா 21:3 ஏசா 21:4 தானி 5:5 தானி 5:6 |
| 44 | இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்? | எரே 25:38 எரே 49:19-21 |
| 45 | ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார். | எரே 51:10 எரே 51:11 சங் 33:10 சங் 33:11 ஏசா 14:24-27 ஏசா 46:10 ஏசா 46:11 அப் 4:28 எபே 1:11 வெளிப் 17:16 வெளிப் 17:17 |
| 46 | பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும். | எரே 49:21 ஏசா 14:9 ஏசா 14:10 எசே 26:18 எசே 31:16 எசே 32:10 வெளிப் 18:9-19 |