1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.சங் 33:3 சங் 96:1 சங் 149:1 ஏசா 42:10 வெளிப் 5:9 வெளிப் 14:3 2கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.ஏசா 45:21-23 ஏசா 49:6 ஏசா 52:10 மத் 28:19 மாற் 16:15 லூக் 2:30-32 லூக் 3:6 ரோம 10:18 தீத் 2:13 3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.சங் 106:45 லேவி 26:42 உபா 4:31 மீகா 7:20 லூக் 1:54 லூக் 1:55 லூக் 1:72 ரோம 15:8 ரோம 15:9 4பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.சங் 47:1-5 சங் 66:1 சங் 66:4 சங் 67:4 சங் 95:1 சங் 100:1 ஏசா 12:6 ஏசா 42:11 ஏசா 44:23 எரே 33:11 செப் 3:14 மத் 21:9 வெளிப் 19:1 வெளிப் 19:6 5சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.சங் 33:2 சங் 92:3 சங் 92:4 1நாளா 15:16 1நாளா 25:1-6 2நாளா 29:25 வெளிப் 5:8 வெளிப் 14:2 வெளிப் 14:3 6கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.சங் 47:5 சங் 81:2-4 எண் 10:1-10 1நாளா 15:28 2நாளா 5:12 2நாளா 5:13 2நாளா 29:27 7சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.சங் 96:11-99 8கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.சங் 47:1 2இரா 11:12 ஏசா 55:12 9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.சங் 96:10 சங் 96:13 வெளிப் 1:7