இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 97

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.சங் 93:1 சங் 96:10 சங் 96:11 சங் 99:1 ஒபதி 1:21 மத் 3:3 மத் 6:10 மத் 6:13 மாற் 11:10 கொலோ 1:13 வெளிப் 11:17
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.சங் 18:11 சங் 18:12 சங் 77:19 யாத் 20:21 யாத் 24:16-18 உபா 4:11 உபா 4:12 1இரா 8:10-12 நாகூ 1:3 ரோம 11:33
3அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.சங் 18:8 சங் 21:8 சங் 21:9 சங் 50:3 உபா 4:11 உபா 4:36 உபா 5:4 உபா 5:23 உபா 5:24 உபா 32:22 தானி 7:10 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:5 மல்கி 4:1 2தெச 1:8 எபிரெ 12:29 2பேது 3:10-12 வெளிப் 11:5 வெளிப் 20:15
4அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.சங் 77:18 சங் 144:5 சங் 144:6 யாத் 19:16-18
5கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.நியா 5:4 நியா 5:5 ஏசா 24:19 ஏசா 24:20 ஏசா 64:1 ஏசா 64:2 மீகா 1:3 மீகா 1:4 நாகூ 1:5 ஆபகூ 3:6
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.சங் 19:1 சங் 36:5 சங் 36:6 சங் 50:6 சங் 89:2 சங் 89:5 ஏசா 1:2 வெளிப் 19:2
7சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.யாத் 20:4 லேவி 26:1 உபா 5:8 உபா 27:15 ஏசா 37:18 ஏசா 37:19 ஏசா 41:29 ஏசா 42:17 ஏசா 44:9-11 எரே 10:14 வெளிப் 14:8-10
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.சங் 48:11 ஏசா 51:3 ஏசா 52:7-10 ஏசா 62:11 செப் 3:14-17 சகரி 9:9 மத் 21:4-9
9கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.சங் 83:18 எபே 1:21 பிலிப் 2:9-11
10கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.சங் 91:14 ரோம 8:28 1கொரி 8:3 யாக் 1:12 யாக் 2:5 1பேது 1:8 1யோவா 4:19 1யோவா 5:2 1யோவா 5:3
11நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.சங் 18:28 சங் 112:4 எஸ்தர் 8:16 யோபு 22:28 நீதி 4:18 ஏசா 60:1 ஏசா 60:2 ஏசா 62:1 மீகா 7:9 யோவா 12:46 வெளிப் 21:23 வெளிப் 22:5
12நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.சங் 32:11 சங் 33:1 ஆபகூ 3:17 ஆபகூ 3:18 செப் 3:14-17 பிலிப் 4:4
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.