| 1 | கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. | சங் 2:6 சங் 93:1 சங் 96:10 சங் 97:1 லூக் 19:12 லூக் 19:14 வெளிப் 11:17 |
| 2 | கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். | சங் 48:1-3 சங் 50:2 சங் 76:1 சங் 76:2 ஏசா 12:6 ஏசா 14:32 எபிரெ 12:22-24 வெளிப் 14:1-5 |
| 3 | மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. | சங் 66:3 சங் 76:12 உபா 7:21 உபா 28:58 நெகே 1:5 நெகே 4:14 நெகே 9:32 எரே 20:11 |
| 4 | ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். | சங் 45:6 சங் 45:7 சங் 72:1 சங் 72:2 உபா 32:3 உபா 32:4 2சாமு 23:3 2சாமு 23:4 யோபு 36:5-7 யோபு 37:23 ஏசா 11:3-5 எரே 23:5 வெளிப் 19:11 வெளிப் 19:16 |
| 5 | நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். | சங் 99:9 சங் 21:13 சங் 34:3 சங் 108:5 யாத் 15:2 ஏசா 12:4 ஏசா 25:1 ஓசி 11:7 |
| 6 | அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார். | யாத் 24:6-8 யாத் 29:11-37 யாத் 40:23-29 எண் 16:47 எண் 16:48 |
| 7 | மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். | யாத் 19:9 யாத் 33:9 எண் 12:5 |
| 8 | எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். | சங் 89:33 எண் 14:20 உபா 9:19 எரே 46:28 செப் 3:7 |
| 9 | நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். | சங் 2:6 சங் 48:1 சங் 48:2 சங் 87:1-3 |