| 1 | அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: | யோபு 37:1 யோபு 37:2 யோபு 37:9 யோபு 37:14 யாத் 19:16-19 உபா 4:11 உபா 4:12 உபா 5:22-24 1இரா 19:11 2இரா 2:1 2இரா 2:11 எசே 1:4 நாகூ 1:3 |
| 2 | அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? | யோபு 12:3 யோபு 23:4 யோபு 23:5 யோபு 24:25 யோபு 26:3 யோபு 27:11 யோபு 34:35 யோபு 35:16 யோபு 42:3 1தீமோ 1:7 |
| 3 | இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக்கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. | யோபு 40:7 யாத் 12:11 1இரா 18:46 எரே 1:17 1பேது 1:13 |
| 4 | நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. | நீதி 8:22 நீதி 8:29 நீதி 8:30 நீதி 30:4 |
| 5 | அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. | யோபு 11:9 யோபு 28:25 நீதி 8:27 ஏசா 40:12 ஏசா 40:22 |
| 6 | அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? | யோபு 26:7 1சாமு 2:8 சங் 24:2 சங் 93:1 சங் 104:5 சகரி 12:1 2பேது 3:5 |
| 7 | அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. | வெளிப் 2:28 வெளிப் 22:16 |
| 8 | கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? | யோபு 38:10 ஆதி 1:9 சங் 33:7 சங் 104:9 நீதி 8:29 எரே 5:22 |
| 9 | மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், | ஆதி 1:2 |
| 10 | நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: | யோபு 26:10 ஆதி 1:9 ஆதி 1:10 ஆதி 9:15 சங் 104:9 எரே 5:22 |
| 11 | இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? | சங் 65:6 சங் 65:7 சங் 93:3 சங் 93:4 நீதி 8:29 மாற் 4:39-41 |
| 12 | துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு, | ஆதி 1:5 சங் 74:16 சங் 136:7 சங் 136:8 சங் 148:3-5 |
| 13 | உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? | சங் 19:4-6 சங் 139:9-12 |
| 14 | பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறது போல் காணப்படும். | சங் 104:2 சங் 104:6 |
| 15 | துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும். | யோபு 5:14 யோபு 18:5 யோபு 18:18 யாத் 10:21-23 2இரா 6:18 நீதி 4:19 ஏசா 8:21 ஏசா 8:22 எரே 13:16 அப் 13:10 அப் 13:11 |
| 16 | நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? | சங் 77:19 நீதி 8:24 எரே 51:36 |
| 17 | மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? | சங் 9:13 சங் 107:18 சங் 116:3 |
| 18 | நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு. | சங் 74:17 சங் 89:11 சங் 89:12 ஏசா 40:28 எரே 31:37 வெளிப் 20:9 |
| 19 | வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே? | யோபு 38:12 யோபு 38:13 ஆதி 1:3 ஆதி 1:4 ஆதி 1:14-18 உபா 4:19 ஏசா 45:7 யோவா 1:9 யோவா 8:12 |
| 20 | அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? | ஆதி 10:19 ஆதி 23:17 |
| 21 | நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ? | யோபு 38:4 யோபு 38:12 யோபு 15:7 |
| 22 | உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிலிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? | யோபு 6:16 யோபு 37:6 சங் 33:7 சங் 135:7 |
| 23 | ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். | யோபு 36:31 யோபு 36:13 யாத் 9:18 யாத் 9:24 யோசு 10:11 ஏசா 30:30 எசே 13:11-13 மத் 7:27 வெளிப் 16:21 |
| 24 | வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே? | யோபு 38:12 யோபு 38:13 யோனா 4:8 மத் 24:27 |
| 25 | பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, | யோபு 28:26 யோபு 36:27 யோபு 36:28 யோபு 37:3-6 சங் 29:3-10 |
| 26 | பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, | சங் 104:10-14 சங் 107:35 சங் 147:8 சங் 147:9 ஏசா 35:1 ஏசா 35:2 ஏசா 41:18 ஏசா 41:19 ஏசா 43:19 ஏசா 43:20 எரே 14:22 எபிரெ 6:7 எபிரெ 6:8 |
| 27 | வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? |
| 28 | மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? | யோபு 38:8 யோபு 5:9 யோபு 5:10 1சாமு 12:17 1சாமு 12:18 சங் 65:9 சங் 65:10 எரே 5:24 எரே 10:13 எரே 14:22 யோவே 2:23 ஆமோ 4:7 மத் 5:45 |
| 29 | உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்? | யோபு 38:8 யோபு 6:16 யோபு 37:10 சங் 147:16 சங் 147:17 |
| 30 | ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே. | யோபு 37:10 |
| 31 | அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? | யோபு 9:9 ஆமோ 5:8 |
| 32 | இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? | 2இரா 23:5 |
| 33 | வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? | ஆதி 1:16 ஆதி 8:22 சங் 119:90 சங் 119:91 எரே 31:35 எரே 31:36 எரே 33:25 |
| 34 | ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள் பரியந்தம் உயர்த்துவாயோ? | 1சாமு 12:18 ஆமோ 5:8 சகரி 10:1 யாக் 5:18 |
| 35 | நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ? | யாத் 9:23-25 யாத் 9:29-25 லேவி 10:2 எண் 11:1 எண் 16:35 2இரா 1:10 2இரா 1:14 வெளிப் 11:5 வெளிப் 11:6 |
| 36 | அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? | யோபு 32:8 சங் 51:6 நீதி 2:6 பிரச 2:26 யாக் 1:5 யாக் 1:17 |
| 37 | ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்? | ஆதி 15:5 சங் 147:4 |
| 38 | தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்? |
| 39 | நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி, | யோபு 4:10 யோபு 4:11 சங் 34:10 சங் 104:21 சங் 145:15 சங் 145:16 |
| 40 | சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? | ஆதி 49:9 எண் 23:24 எண் 24:9 |
| 41 | காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்? | சங் 104:27 சங் 104:28 சங் 147:9 மத் 6:26 லூக் 12:24 |