| 1 | இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. | யோபு 4:14 யோபு 21:6 யோபு 38:1 யாத் 19:16 சங் 89:7 சங் 119:120 எரே 5:22 தானி 10:7 தானி 10:8 ஆபகூ 3:16 மத் 28:2-4 அப் 16:26 அப் 16:29 |
| 2 | அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள். | யோபு 37:5 யோபு 36:29 யோபு 36:33 யோபு 38:1 யாத் 19:16-19 சங் 104:7 |
| 3 | அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். | சங் 77:13 சங் 97:4 மத் 24:27 வெளிப் 11:19 |
| 4 | அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. | சங் 29:3-9 சங் 68:33 |
| 5 | தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். | 2சாமு 22:14 2சாமு 22:15 |
| 6 | அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். | யோபு 38:22 சங் 147:16-18 சங் 148:8 |
| 7 | தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார். | யோபு 5:12 யோபு 9:7 |
| 8 | அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும். | சங் 104:22 |
| 9 | தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும். | யோபு 9:9 சங் 104:3 |
| 10 | தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோகும். | யோபு 38:29 யோபு 38:30 சங் 78:47 சங் 147:16-18 |
| 11 | அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். | யோபு 36:27 யோபு 36:28 |
| 12 | அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். | சங் 65:9 சங் 65:10 சங் 104:24 எரே 14:22 யோவே 2:23 ஆமோ 4:7 |
| 13 | ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார். | யோபு 37:6 யோபு 36:31 யோபு 38:37 யோபு 38:38 யாத் 9:18-25 1சாமு 12:18 1சாமு 12:19 எஸ்றா 10:9 |
| 14 | யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். | யாத் 14:13 சங் 46:10 ஆபகூ 2:20 |
| 15 | தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? | யோபு 28:24-27 யோபு 34:13 யோபு 38:4-41 சங் 119:90 சங் 119:91 ஏசா 40:26 |
| 16 | மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், | யோபு 26:8 யோபு 36:29 சங் 104:2 சங் 104:3 ஏசா 40:22 எரே 10:13 |
| 17 | தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ? | யோபு 6:17 யோபு 38:31 சங் 147:18 லூக் 12:55 |
| 18 | வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ? | யோபு 9:8 யோபு 9:9 ஆதி 1:6-8 சங் 104:2 சங் 148:4-6 சங் 150:1 நீதி 8:27 ஏசா 40:12 ஏசா 40:22 ஏசா 44:24 |
| 19 | அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம். | யோபு 12:3 யோபு 13:3 யோபு 13:6 |
| 20 | நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே. | சங் 139:4 மத் 12:36 மத் 12:37 |
| 21 | இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிறசமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது, | யோபு 26:9 யோபு 36:32 யோபு 38:25 |
| 22 | ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. | நீதி 25:23 |
| 23 | சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். | யோபு 37:19 யோபு 11:7 யோபு 26:14 யோபு 36:26 நீதி 30:3 நீதி 30:4 பிரச 3:11 லூக் 10:22 ரோம 11:33 1தீமோ 6:16 |
| 24 | ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான். | சங் 130:4 எரே 32:39 எரே 33:9 ஓசி 3:5 மத் 10:28 லூக் 12:4 லூக் 12:5 ரோம 2:4 ரோம 11:20-22 |