இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 36

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் எலிகூ:
2நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன் பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.யோபு 21:3 யோபு 33:31-33 எபிரெ 13:22
3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.யோபு 28:12 யோபு 28:13 யோபு 28:20-24 யோபு 32:8 நீதி 2:4 நீதி 2:5 மத் 2:1 மத் 2:2 மத் 12:42 அப் 8:27-40 ரோம 10:6-8 யாக் 1:5 யாக் 1:17 யாக் 3:17
4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.யோபு 13:4 யோபு 13:7 யோபு 21:27 யோபு 21:34 யோபு 22:6-30 நீதி 8:7 நீதி 8:8 2கொரி 2:17
5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.யோபு 10:3 யோபு 31:13 சங் 22:24 சங் 138:6
6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.யோபு 21:7-9 யோபு 21:30-9 சங் 55:23 எரே 12:1 எரே 12:2 2பேது 2:9
7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடே கூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.2நாளா 16:9 சங் 33:18 சங் 34:15 செப் 3:17 1பேது 3:12
8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,யோபு 13:27 யோபு 19:6 யோபு 33:18 யோபு 33:19 சங் 18:5 சங் 107:10 சங் 116:3 புலம் 3:9
9அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,யோபு 10:2 உபா 4:21 உபா 4:22 2நாளா 33:11-13 சங் 94:12 சங் 119:67 சங் 119:71 புலம் 3:39 புலம் 3:40 லூக் 15:17-19 1கொரி 11:32
10அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.யோபு 36:15 யோபு 33:16-23 சங் 40:6 ஏசா 48:8 ஏசா 48:17 ஏசா 50:5 அப் 16:14
11அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.யோபு 22:21 உபா 4:30 எரே 7:23 எரே 26:13 ரோம 6:17 எபிரெ 11:8
12அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.உபா 18:15-22 உபா 29:15-20 ஏசா 1:20 ஏசா 3:11 ரோம 2:8 ரோம 2:9
13மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.எண் 32:14 2நாளா 28:13 2நாளா 28:22 ரோம 2:5
14அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.யோபு 15:32 யோபு 21:23-25 யோபு 22:16 ஆதி 38:7-10 லேவி 10:1 லேவி 10:2 சங் 55:23
15சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.யோபு 36:10 2நாளா 12:8
16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.யோபு 19:8 யோபு 42:10-17 சங் 18:19 சங் 31:8 சங் 40:1-3 சங் 118:5
17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.யோபு 16:5 யோபு 34:8 யோபு 34:36 ரோம 1:32 வெளிப் 18:4
18உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.சங் 2:5 சங் 2:12 சங் 110:5 மத் 3:7 ரோம 1:18 ரோம 2:5 எபே 5:6
19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.நீதி 10:2 நீதி 11:4 ஏசா 2:20 செப் 1:18 யாக் 5:3
20ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.யோபு 3:20 யோபு 3:21 யோபு 6:9 யோபு 7:15 யோபு 14:13 யோபு 17:13 யோபு 17:14
21அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.சங் 66:18 எசே 14:4 மத் 5:29 மத் 5:30
22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?1சாமு 2:7 1சாமு 2:8 சங் 75:7 ஏசா 14:5 எரே 27:5-8 தானி 4:25 தானி 4:32 தானி 5:18 லூக் 1:52 ரோம 13:1
23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?யோபு 34:13-33 ஏசா 40:13 ஏசா 40:14 ரோம 11:34 1கொரி 2:16 எபே 1:11
24மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.யோபு 12:13-25 யோபு 26:5-14 சங் 28:5 சங் 34:3 சங் 72:18 சங் 86:8-10 சங் 92:4 சங் 92:5 சங் 104:24 சங் 107:8 சங் 107:15 சங் 111:2-4 சங் 111:8-4 சங் 145:10-12 எரே 10:12 தானி 4:3 தானி 4:37 லூக் 1:46
25எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.யோபு 37:5 சங் 145:3
27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.யோபு 5:9 யோபு 38:25-28 யோபு 38:34-28 ஆதி 2:5 ஆதி 2:6 சங் 65:9-13 ஏசா 5:6 எரே 14:22
28அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.யோபு 37:11-13 ஆதி 7:11 ஆதி 7:12 நீதி 3:20
29மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?யோபு 37:16 யோபு 38:9 யோபு 38:37 1இரா 18:44 1இரா 18:45 சங் 104:3
30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.யோபு 38:25 யோபு 38:34 யோபு 38:35 லூக் 17:24
31அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.யோபு 37:13 யோபு 38:22 யோபு 38:23 ஆதி 6:17 ஆதி 7:17-24 ஆதி 19:24 யாத் 9:23-25 உபா 8:2 உபா 8:15 யோசு 10:11 1சாமு 2:10 1சாமு 7:10 1சாமு 12:18
32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.யோபு 26:9 யாத் 10:21-23 சங் 18:11 சங் 135:7 சங் 147:8 சங் 147:9 சங் 148:8 அப் 27:20
33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.யோபு 36:29 யோபு 37:2 2சாமு 22:14 1இரா 18:41-45
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.