இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 35

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
2என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?மத் 12:36 மத் 12:37 லூக் 19:22
3நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.யோபு 9:21 யோபு 9:22 யோபு 10:15 யோபு 21:15 யோபு 31:2 யோபு 34:9 சங் 73:13 மல்கி 3:14
4உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.யோபு 34:8 நீதி 13:20
5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.யோபு 22:12 யோபு 25:5 யோபு 25:6 யோபு 36:26-33 யோபு 37:1-5 யோபு 37:22-5 யோபு 37:23-5 1இரா 8:27 சங் 8:3 சங் 8:4 ஏசா 40:22 ஏசா 40:23 ஏசா 55:9
6நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?நீதி 8:36 நீதி 9:12 எரே 7:19
7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?யோபு 22:2 யோபு 22:3 1நாளா 29:14 சங் 16:2 நீதி 9:12 ரோம 11:35
8உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.யோசு 7:1-5 யோசு 22:20 பிரச 9:18 யோனா 1:12
9அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.யோபு 24:12 யோபு 34:28 யாத் 2:23 யாத் 3:7 யாத் 3:9 நெகே 5:1-5 சங் 12:5 சங் 43:2 சங் 55:2 சங் 55:3 சங் 56:1 சங் 56:2 லூக் 18:3-7
10பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,யோபு 36:13 1நாளா 10:13 1நாளா 10:14 2நாளா 28:22 2நாளா 28:23 ஏசா 8:21
11என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.யோபு 32:8 ஆதி 1:26 ஆதி 2:7 சங் 94:12
12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.சங் 18:41 நீதி 1:28 யோவா 9:31
13தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.யோபு 22:22-27 யோபு 27:8 யோபு 27:9 நீதி 15:8 நீதி 15:29 நீதி 28:9 பிரச 5:1-3 ஏசா 1:15 எரே 11:11 ஓசி 7:14 ஓசி 8:2 ஓசி 8:3 மத் 6:7 மத் 20:21 மத் 20:22 யாக் 4:3
14அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.யோபு 9:11 யோபு 23:3 யோபு 23:8-10
15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.யோபு 9:14 யோபு 13:15 எண் 20:12 லூக் 1:20
16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.யோபு 3:1 யோபு 33:2 யோபு 33:8-12 யோபு 34:35-37 யோபு 38:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.