| 1 | யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். | யோபு 13:6 யோபு 34:2 சங் 49:1-3 மாற் 4:9 |
| 2 | இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். | யோபு 3:1 சங் 78:2 மத் 5:2 |
| 3 | என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும். | யோபு 27:4 நீதி 8:7 நீதி 8:8 1தெச 2:3 1தெச 2:4 |
| 4 | தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. | யோபு 10:12 யோபு 32:8 ஆதி 2:7 சங் 33:6 ரோம 8:2 1கொரி 15:45 |
| 5 | உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும். | யோபு 33:32 யோபு 33:33 யோபு 32:1 யோபு 32:12 |
| 6 | இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். | யோபு 9:32-35 யோபு 13:3 யோபு 20:22 யோபு 23:3 யோபு 23:4 யோபு 31:35 |
| 7 | இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது. | யோபு 9:34 யோபு 13:21 சங் 88:16 |
| 8 | நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: | உபா 13:14 எரே 29:23 |
| 9 | நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை. | யோபு 9:17 யோபு 10:7 யோபு 11:4 யோபு 16:17 யோபு 23:11 யோபு 23:12 யோபு 27:5 யோபு 27:6 யோபு 29:14 |
| 10 | இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார். | யோபு 9:30 யோபு 9:31 யோபு 10:15-17 யோபு 13:25 யோபு 14:16 யோபு 34:5 |
| 11 | அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர். | யோபு 13:27 சங் 105:18 எரே 20:2 அப் 16:24 |
| 12 | இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார். | யோபு 1:22 யோபு 34:10-12 யோபு 34:17-19 யோபு 34:23-19 யோபு 35:2 யோபு 36:22 யோபு 36:23 எசே 18:25 ரோம 9:19-21 |
| 13 | அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்? | யோபு 9:14 யோபு 15:25 யோபு 15:26 ஏசா 45:9 எரே 50:24 எசே 22:14 அப் 5:39 அப் 9:4 அப் 9:5 1கொரி 10:22 |
| 14 | தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே. | யோபு 40:5 சங் 62:11 |
| 15 | கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், | யோபு 4:13 ஆதி 20:3 ஆதி 31:24 எண் 12:6 எரே 23:28 தானி 4:5 எபிரெ 1:1 |
| 16 | அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, | யோபு 36:10 யோபு 36:15 2சாமு 7:27 சங் 40:6 ஏசா 6:10 ஏசா 48:8 ஏசா 50:5 லூக் 24:45 அப் 16:14 |
| 17 | மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். | யோபு 17:11 ஆதி 20:6 ஏசா 23:9 ஓசி 2:6 மத் 27:19 அப் 9:2-6 |
| 18 | இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். | அப் 16:27-33 ரோம 2:4 2பேது 3:9 2பேது 3:15 |
| 19 | அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான். | யோபு 5:17 யோபு 5:18 உபா 8:5 சங் 94:12 சங் 119:67 சங் 119:71 ஏசா 27:9 1கொரி 11:32 வெளிப் 3:19 |
| 20 | அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும். | சங் 107:17 சங் 107:18 |
| 21 | அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது. | யோபு 7:5 யோபு 13:28 யோபு 14:20 யோபு 14:22 யோபு 19:20 சங் 32:3 சங் 32:4 சங் 39:11 சங் 102:3-5 நீதி 5:11 |
| 22 | அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது. | யோபு 7:7 யோபு 17:1 யோபு 17:13-16 1சாமு 2:6 சங் 30:3 சங் 88:3-5 ஏசா 38:10 |
| 23 | ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில், | நியா 2:1 2நாளா 36:15 2நாளா 36:16 ஆகா 1:13 மல்கி 2:7 மல்கி 3:1 2கொரி 5:20 |
| 24 | அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். | யோபு 33:18 யோபு 22:21 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 சங் 86:5 சங் 86:15 ஓசி 14:2 ஓசி 14:4 மீகா 7:18-20 ரோம 5:20 ரோம 5:21 |
| 25 | அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான். | 2இரா 5:14 |
| 26 | அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். | 2இரா 20:2-5 2நாளா 33:12 2நாளா 33:13 2நாளா 33:19 சங் 6:1-9 சங் 28:1 சங் 28:2 சங் 28:6 சங் 30:7-11 சங் 41:8-11 சங் 50:15 சங் 91:15 சங் 116:1-6 ஏசா 30:19 எரே 33:3 யோனா 2:2-7 அப் 9:11 |
| 27 | அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை. | ஆதி 16:13 2நாளா 16:9 சங் 11:4 சங் 14:2 சங் 139:1-4 நீதி 5:21 நீதி 15:3 எரே 23:24 |
| 28 | என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். | யோபு 33:18 யோபு 33:24 யோபு 17:16 சங் 55:23 சங் 69:15 ஏசா 38:17 ஏசா 38:18 வெளிப் 20:1-3 |
| 29 | இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும், | யோபு 33:14-17 1கொரி 12:6 2கொரி 5:5 எபே 1:11 பிலிப் 2:13 கொலோ 1:29 எபிரெ 13:21 |
| 30 | அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். | யோபு 33:24 யோபு 33:28 சங் 40:1 சங் 40:2 சங் 118:17 சங் 118:18 |
| 31 | யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். | யோபு 13:6 யோபு 18:2 யோபு 21:2 யோபு 32:11 |
| 32 | சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு. | யோபு 15:4 யோபு 15:5 யோபு 21:27 யோபு 22:5-9 யோபு 27:5 |
| 33 | ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான். | சங் 34:11 நீதி 4:1 நீதி 4:2 நீதி 5:1 நீதி 5:2 |