| 1 | யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். | யோபு 6:29 யோபு 10:2 யோபு 10:7 யோபு 13:15 யோபு 23:7 யோபு 27:4-6 யோபு 29:11-17 யோபு 31:1-40 யோபு 33:9 |
| 2 | அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது, யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. | சங் 69:9 மாற் 3:5 எபே 4:26 |
| 3 | கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. | யோபு 32:1 யோபு 24:25 யோபு 25:2-6 யோபு 26:2-4 |
| 4 | அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான். | யோபு 32:11 யோபு 32:12 நீதி 18:13 |
| 5 | அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. | யோபு 32:2 யாத் 32:19 |
| 6 | ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன். | லேவி 19:32 ரோம 13:7 1தீமோ 5:1 தீத் 2:6 1பேது 5:5 |
| 7 | முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். | யோபு 8:8-10 யோபு 12:12 1இரா 12:6-8 சங் 34:11 சங் 34:12 நீதி 1:1-4 நீதி 16:31 எபிரெ 5:12 |
| 8 | ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். | யோபு 4:12-21 யோபு 33:16 யோபு 35:11 யோபு 38:36 ஆதி 41:39 1இரா 3:12 1இரா 3:28 1இரா 4:29 நீதி 2:6 பிரச 2:26 தானி 1:17 தானி 2:21 1கொரி 2:10-12 1கொரி 12:8 2தீமோ 3:16 யாக் 1:5 |
| 9 | பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல. | எரே 5:5 மத் 11:25 யோவா 7:48 1கொரி 1:26 1கொரி 1:27 1கொரி 2:7 1கொரி 2:8 யாக் 2:6 யாக் 2:7 |
| 10 | ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன். | 1கொரி 7:25 1கொரி 7:40 |
| 11 | இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன். | யோபு 32:4 யோபு 29:21 யோபு 29:23 |
| 12 | நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை. | யோபு 32:3 1தீமோ 1:7 |
| 13 | ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும். | ஆதி 14:23 நியா 7:2 ஏசா 48:5 ஏசா 48:7 சகரி 12:7 |
| 14 | அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை. |
| 15 | அவர்கள் கலங்கி அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்கு பேச்சு அற்றுப் போயிற்று. | யோபு 6:24 யோபு 6:25 யோபு 29:22 மத் 7:23 மத் 22:22 மத் 22:26 மத் 22:34 மத் 22:46 |
| 16 | அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால், | யோபு 13:5 நீதி 17:28 ஆமோ 5:13 யாக் 1:19 |
| 17 | நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன். | யோபு 32:10 யோபு 33:12 யோபு 35:3 யோபு 35:4 |
| 18 | வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது. | சங் 39:3 எரே 20:9 எசே 3:14-27 அப் 4:20 2கொரி 5:13 2கொரி 5:14 |
| 19 | இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புதுரசத்தைப் போலிருக்கிறது. | மத் 9:17 |
| 20 | நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன். | யோபு 13:13 யோபு 13:19 யோபு 20:2 யோபு 21:3 |
| 21 | நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக. | யோபு 13:8 யோபு 34:19 லேவி 19:15 உபா 1:17 உபா 16:19 நீதி 24:23 மத் 22:16 |
| 22 | நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார். | யோபு 17:5 சங் 12:2 சங் 12:3 நீதி 29:5 1தெச 2:5 கலா 1:10 |