| 1 | என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? | ஆதி 6:2 2சாமு 11:2-4 சங் 119:37 நீதி 4:25 நீதி 23:31-33 மத் 5:28 மத் 5:29 1யோவா 2:16 |
| 2 | அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ? | யோபு 20:29 யோபு 27:13 எபிரெ 13:4 |
| 3 | மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும். | யோபு 21:30 சங் 55:23 சங் 73:18 நீதி 1:27 நீதி 10:29 நீதி 21:15 மத் 7:13 ரோம 9:22 1தெச 5:3 2தெச 1:9 2பேது 2:1 |
| 4 | அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ? | யோபு 14:16 யோபு 34:21 ஆதி 16:13 2நாளா 16:9 சங் 44:21 சங் 139:1-3 நீதி 5:21 நீதி 15:3 எரே 16:17 எரே 32:19 யோவா 1:48 எபிரெ 4:13 |
| 5 | நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று, | சங் 7:3-5 |
| 6 | சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக. | 1சாமு 2:3 சங் 7:8 சங் 7:9 சங் 17:2 சங் 17:3 சங் 26:1 நீதி 16:11 ஏசா 26:7 தானி 5:27 மீகா 6:11 |
| 7 | என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால், | சங் 44:20 சங் 44:21 |
| 8 | அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது. | யோபு 5:5 யோபு 24:6 லேவி 26:16 உபா 28:30-33 உபா 28:38-33 உபா 28:51-33 நியா 6:3-6 மீகா 6:15 |
| 9 | என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால், | நியா 16:5 1இரா 11:4 நெகே 13:26 நீதி 2:16-19 நீதி 5:3-23 நீதி 6:25 நீதி 7:21 நீதி 22:14 பிரச 7:26 |
| 10 | அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக. | யாத் 11:5 ஏசா 47:2 மத் 24:41 |
| 11 | அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே. | ஆதி 20:9 ஆதி 26:10 ஆதி 39:9 யாத் 20:14 நீதி 6:29-33 |
| 12 | அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும். | நீதி 3:33 நீதி 6:27 எரே 5:7-9 மல்கி 3:5 எபிரெ 13:4 |
| 13 | என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால், | யாத் 21:20 யாத் 21:21 யாத் 21:26 யாத் 21:27 லேவி 25:43 லேவி 25:46 உபா 15:12-15 எரே 34:14-17 எபே 6:9 கொலோ 4:1 |
| 14 | தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன். | யோபு 9:32 யோபு 10:2 சங் 7:6 சங் 9:12 சங் 9:19 சங் 10:12-15 சங் 44:21 சங் 76:9 சங் 143:2 ஏசா 10:3 சகரி 2:13 |
| 15 | தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? | யோபு 34:19 நெகே 5:5 நீதி 14:31 நீதி 22:2 ஏசா 58:7 மல்கி 2:10 மல்கி 10:8-12 சங் 139:14-16 |
| 16 | எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி, | யோபு 22:7-9 உபா 15:7-10 சங் 112:9 லூக் 16:21 அப் 11:29 கலா 2:10 |
| 17 | தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? | உபா 15:11 உபா 15:14 நெகே 8:10 லூக் 11:41 யோவா 13:29 அப் 4:32 |
| 18 | என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன். |
| 19 | ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது, | யோபு 22:6 2நாளா 28:15 ஏசா 58:7 மத் 25:36 மத் 25:43 லூக் 3:11 அப் 9:39 யாக் 2:16 1யோவா 3:18 |
| 20 | அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும், | யோபு 29:11 உபா 24:13 |
| 21 | ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால், | யோபு 6:27 யோபு 22:9 யோபு 24:9 யோபு 29:12 நீதி 23:10 நீதி 23:11 எரே 5:28 எசே 22:7 |
| 22 | என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக. | யோபு 31:10 யோபு 31:40 யோசு 22:22 யோசு 22:23 சங் 7:4 சங் 7:5 சங் 137:6 |
| 23 | தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது. | யோபு 20:23 யோபு 21:20 ஆதி 39:9 சங் 119:120 ஏசா 13:6 யோவே 1:15 2கொரி 5:11 |
| 24 | நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், | ஆதி 31:1 உபா 8:12-14 சங் 49:6 சங் 49:7 சங் 49:17 சங் 52:7 சங் 62:10 நீதி 10:15 நீதி 11:28 நீதி 30:9 மாற் 10:24 லூக் 12:15 கொலோ 3:5 1தீமோ 6:10 1தீமோ 6:17 |
| 25 | என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், | எஸ்தர் 5:11 நீதி 23:5 எரே 9:23 எசே 28:5 லூக் 12:19 லூக் 16:19 லூக் 16:25 |
| 26 | சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி: | ஆதி 1:16-18 உபா 4:19 உபா 11:16 உபா 17:3 2இரா 23:5 2இரா 23:11 எரே 8:2 எசே 8:16 |
| 27 | என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால், | உபா 11:16 உபா 13:6 ஏசா 44:20 ரோம 1:21 ரோம 1:28 |
| 28 | இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே. | யோபு 31:11 யோபு 9:15 யோபு 23:7 ஆதி 18:25 உபா 17:2-7 உபா 17:9-7 நியா 11:27 சங் 50:6 எபிரெ 12:23 |
| 29 | என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ? | 2சாமு 1:12 2சாமு 4:10 2சாமு 4:11 2சாமு 16:5-8 சங் 35:13 சங் 35:14 சங் 35:25 சங் 35:26 நீதி 17:5 நீதி 24:17 நீதி 24:18 |
| 30 | அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. | யாத் 23:4 யாத் 23:5 மத் 5:43 மத் 5:44 ரோம 12:14 1பேது 2:22 1பேது 2:23 1பேது 3:9 |
| 31 | அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ? | 1சாமு 24:4 1சாமு 24:10 1சாமு 26:8 2சாமு 16:9 2சாமு 16:10 2சாமு 19:21 2சாமு 19:22 எரே 40:15 எரே 40:16 லூக் 9:54 லூக் 9:55 லூக் 22:50 லூக் 22:51 |
| 32 | பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். | யோபு 31:17 யோபு 31:18 ஆதி 19:2 ஆதி 19:3 நியா 19:15 நியா 19:20 நியா 19:21 ஏசா 58:7 மத் 25:35 மத் 25:40 மத் 25:44 மத் 25:45 ரோம 12:13 1தீமோ 5:10 எபிரெ 13:2 1பேது 4:9 |
| 33 | நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? | ஆதி 3:7 ஆதி 3:8 ஆதி 3:12 யோசு 7:11 நீதி 28:13 ஓசி 6:7 அப் 5:8 1யோவா 1:8-10 |
| 34 | திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியை விட்டுப் புறப்படாதிருந்தேனோ? | யாத் 23:2 நீதி 29:25 எரே 38:4 எரே 38:5 எரே 38:16 எரே 38:19 மத் 27:20-26 |
| 35 | ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. | யோபு 13:3 யோபு 17:3 யோபு 23:3-7 யோபு 33:6 யோபு 38:1-3 யோபு 40:4 யோபு 40:5 |
| 36 | அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே. | யாத் 28:12 ஏசா 22:22 |
| 37 | அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். | யோபு 9:3 யோபு 13:15 யோபு 14:16 யோபு 42:3-6 சங் 19:12 |
| 38 | எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும், | யோபு 20:27 ஆபகூ 2:11 யாக் 5:4 |
| 39 | கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், | ஆதி 4:12 |
| 40 | அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது. | ஆதி 3:17 ஆதி 3:18 ஏசா 7:23 செப் 2:9 மல்கி 1:3 |