| 1 | வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு. | ஆதி 2:11 ஆதி 2:12 ஆதி 23:15 ஆதி 24:22 1இரா 7:48-50 1இரா 10:21 1நாளா 29:2-5 |
| 2 | இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். | ஆதி 4:22 எண் 31:22 உபா 8:9 1நாளா 22:14 |
| 3 | மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான். | நீதி 2:4 பிரச 1:13 ஆபகூ 2:13 மத் 6:33 லூக் 16:8 |
| 4 | கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான். |
| 5 | பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும். | ஆதி 1:11 ஆதி 1:12 ஆதி 1:29 சங் 104:14 சங் 104:15 ஏசா 28:25-29 |
| 6 | அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். | யோபு 28:16 யாத் 24:10 உன்ன 5:14 ஏசா 54:11 வெளிப் 21:19 |
| 7 | ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை; | யோபு 28:21-23 யோபு 11:6 யோபு 38:19 யோபு 38:24 ரோம 11:33 |
| 8 | துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை. |
| 9 | அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான். | நாகூ 1:4-6 |
| 10 | கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். | நீதி 14:23 நீதி 24:4 ஆபகூ 3:9 |
| 11 | ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான். | யோபு 26:8 ஏசா 37:25 ஏசா 44:27 |
| 12 | ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது? | யோபு 28:20 யோபு 28:28 1இரா 3:9 சங் 51:6 நீதி 2:4-6 நீதி 3:19 பிரச 7:23-25 1கொரி 1:19 1கொரி 1:20 கொலோ 2:3 யாக் 1:5 யாக் 1:17 |
| 13 | அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை. | யோபு 28:15-19 சங் 19:10 சங் 119:72 நீதி 3:14 நீதி 3:15 நீதி 8:11 நீதி 8:18 நீதி 8:19 நீதி 16:16 நீதி 23:23 பிரச 8:16 பிரச 8:17 |
| 14 | ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. | ரோம 11:33 ரோம 11:34 |
| 15 | அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது. | யோபு 28:18 நீதி 3:13-15 நீதி 8:10 நீதி 8:17 நீதி 8:19 நீதி 16:16 |
| 16 | ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. | 1நாளா 29:4 சங் 45:9 ஏசா 13:12 |
| 17 | பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது. | எசே 1:22 வெளிப் 4:6 வெளிப் 21:11 வெளிப் 22:1 |
| 18 | பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது. | எசே 27:16 |
| 19 | எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. | யாத் 28:17 யாத் 39:10 எசே 28:13 வெளிப் 21:20 |
| 20 | இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? | யோபு 28:12 நீதி 2:6 பிரச 7:23 பிரச 7:24 1கொரி 2:6-15 யாக் 1:5 யாக் 1:17 |
| 21 | அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. | சங் 49:3 சங் 49:4 மத் 11:25 மத் 13:17 மத் 13:35 1கொரி 2:7-10 கொலோ 2:3 |
| 22 | நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. | யோபு 28:14 சங் 83:10-12 |
| 23 | தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும். | சங் 19:7 சங் 147:5 நீதி 2:6 நீதி 8:14 மத் 11:27 லூக் 10:21 லூக் 10:22 அப் 15:18 ரோம 11:33 1கொரி 1:30 யூதா 1:25 |
| 24 | அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். | 2நாளா 16:9 நீதி 15:3 சகரி 4:10 வெளிப் 5:6 |
| 25 | அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, | சங் 135:7 ஏசா 40:12 |
| 26 | மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். | யோபு 36:26 யோபு 36:32 யோபு 38:25 சங் 148:8 எரே 14:22 ஆமோ 4:7 சகரி 10:1 |
| 27 | அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, | சங் 19:1 நீதி 8:22-29 |
| 28 | மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான். | உபா 29:29 நீதி 8:4 நீதி 8:5 நீதி 8:26-32 |