| 1 | யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: | எண் 23:7 எண் 24:3 எண் 24:15 சங் 49:4 சங் 78:2 நீதி 26:7 |
| 2 | என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், | எண் 14:21 ரூத் 3:13 1சாமு 14:39 1சாமு 14:45 1சாமு 20:21 1சாமு 25:26 1சாமு 25:34 2சாமு 2:27 1இரா 17:1 1இரா 18:15 எரே 4:2 எரே 5:2 எரே 12:16 எசே 33:11 |
| 3 | என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று, | ஆதி 2:7 ஏசா 2:22 அப் 17:25 |
| 4 | என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். | யோபு 13:7 யோபு 34:6 யோவா 8:55 2கொரி 11:10 |
| 5 | நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன். | யோபு 32:3 யோபு 42:7 உபா 25:1 நீதி 17:15 கலா 2:11 |
| 6 | என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது. | யோபு 2:3 சங் 18:20-23 நீதி 4:13 |
| 7 | என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக. | 1சாமு 25:26 2சாமு 18:32 தானி 4:19 |
| 8 | மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன? | யோபு 11:20 யோபு 13:16 யோபு 15:34 யோபு 20:5 யோபு 31:3 ஏசா 33:14 ஏசா 33:15 மத் 16:26 மத் 23:14 மாற் 8:36 மாற் 8:37 லூக் 9:25 லூக் 12:20 லூக் 12:21 1தீமோ 6:9 1தீமோ 6:10 யாக் 5:1-3 |
| 9 | ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ? | யோபு 35:12 யோபு 35:13 சங் 18:41 சங் 66:18 சங் 109:7 நீதி 1:28 நீதி 28:9 ஏசா 1:15 எரே 11:11 எரே 14:12 எசே 8:18 மீகா 3:4 சகரி 7:13 யோவா 9:31 யாக் 4:3 |
| 10 | அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? | யோபு 22:26 யோபு 22:27 சங் 37:4 சங் 43:4 ஆபகூ 3:18 |
| 11 | தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். | யோபு 4:3 யோபு 4:4 யோபு 6:10 ஏசா 8:11 |
| 12 | இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? | யோபு 21:28-30 பிரச 8:14 பிரச 9:1-3 |
| 13 | பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில், | யோபு 20:29 யோபு 31:3 சங் 11:6 பிரச 8:13 ஏசா 3:11 2பேது 2:9 |
| 14 | அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. | யோபு 21:11 யோபு 21:12 உபா 28:32 உபா 28:41 2இரா 9:7 2இரா 9:8 2இரா 10:6-10 எஸ்தர் 5:11 எஸ்தர் 9:5-10 சங் 109:13 ஓசி 9:13 ஓசி 9:14 லூக் 23:29 |
| 15 | அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை. | 1இரா 14:10 1இரா 14:11 1இரா 16:3 1இரா 16:4 1இரா 21:21-24 |
| 16 | அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும், | யோபு 22:24 1இரா 10:27 ஆபகூ 2:6 சகரி 9:3 |
| 17 | அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். | நீதி 13:22 நீதி 28:8 பிரச 2:26 |
| 18 | அவனுடைய வீடு பொட்டுப்பூச்சிகட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலுமாகும். | யோபு 8:14 யோபு 8:15 ஏசா 51:8 |
| 19 | அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதே போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். | யோபு 14:13-15 யோபு 21:23-26 யோபு 21:30-26 யோபு 30:23 |
| 20 | வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். | யோபு 15:21 யோபு 18:11 யோபு 22:16 சங் 18:4 சங் 42:7 சங் 69:14 சங் 69:15 யோனா 2:3 |
| 21 | கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். | எரே 18:17 ஓசி 13:15 |
| 22 | அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான். | யாத் 9:14 உபா 32:23 யோசு 10:11 |
| 23 | ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள். | எஸ்தர் 9:22-25 நீதி 11:10 புலம் 2:15 வெளிப் 18:20 |