1யோபு மறுமொழியாக:2திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?யோபு 12:2 1இரா 18:27 3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?யோபு 6:13 யோபு 12:3 யோபு 13:5 யோபு 15:8-10 யோபு 17:10 யோபு 32:11-13 4யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?யோபு 20:3 யோபு 32:18 1இரா 22:23 1இரா 22:24 பிரச 12:7 1கொரி 12:3 1யோவா 4:1-3 வெளிப் 16:13 வெளிப் 16:14 5ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.யோபு 41:1-34 ஆதி 6:4 சங் 104:25 சங் 104:26 எசே 29:3-5 6அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.யோபு 11:8 சங் 139:8 சங் 139:11 நீதி 15:11 ஏசா 14:9 ஆமோ 9:2 எபிரெ 4:13 7அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.யோபு 9:8 ஆதி 1:1 ஆதி 1:2 சங் 24:2 சங் 104:2-5 நீதி 8:23-27 ஏசா 40:22 ஏசா 40:26 ஏசா 42:5 8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.யோபு 36:29 யோபு 38:9 யோபு 38:37 ஆதி 1:6 ஆதி 1:7 சங் 135:7 நீதி 30:4 எரே 10:13 9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.யாத் 20:21 யாத் 33:20-23 யாத் 34:3 1இரா 8:12 சங் 97:2 ஆபகூ 3:3-5 1தீமோ 6:16 10அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.யோபு 38:8-11 சங் 33:7 சங் 104:6-9 நீதி 8:29 எரே 5:22 11அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.1சாமு 2:8 சங் 18:7 ஆகா 2:21 எபிரெ 12:26 எபிரெ 12:27 2பேது 3:10 வெளிப் 20:11 12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.யாத் 14:21-31 சங் 29:10 சங் 74:13 சங் 93:3 சங் 93:4 சங் 114:2-7 ஏசா 51:15 எரே 31:35 13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.ஆதி 1:2 சங் 33:6 சங் 33:7 சங் 104:30 14இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.யோபு 11:7-9 சங் 139:6 சங் 145:3 ஏசா 40:26-29 ரோம 11:33 1கொரி 13:9-12