1 | ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான். | ஆதி 13:1 ஆதி 18:1 ஆதி 24:62 |
2 | அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். | ஆதி 12:11-13 ஆதி 26:7 2நாளா 19:2 2நாளா 20:37 2நாளா 32:31 நீதி 24:16 பிரச 7:20 கலா 2:11 கலா 2:12 எபே 4:25 கொலோ 3:9 |
3 | தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். | ஆதி 28:12 ஆதி 31:24 ஆதி 37:5 ஆதி 37:9 ஆதி 40:8 ஆதி 41:1-36 யோபு 4:12 யோபு 4:13 யோபு 33:15 மத் 1:20 மத் 2:12 மத் 2:13 மத் 27:19 |
4 | அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? | ஆதி 20:6 ஆதி 20:18 |
5 | இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். | யோசு 22:22 1இரா 9:4 2இரா 20:3 1நாளா 29:17 சங் 7:8 சங் 25:21 சங் 78:72 நீதி 11:3 நீதி 20:7 2கொரி 1:12 1தெச 2:10 1தீமோ 1:13 |
6 | அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. | ஆதி 20:18 ஆதி 31:7 ஆதி 35:5 யாத் 34:24 1சாமு 25:26 1சாமு 25:34 சங் 84:11 நீதி 21:1 ஓசி 2:6 ஓசி 2:7 |
7 | அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். | 1இரா 18:1-46 1கொரி 14:4 யாத் 4:16 யாத் 7:1 யாத் 12:1-3 யாத் 18:17 யாத் 7:1 1நாளா 16:22 சங் 25:14 சங் 105:9-15 எபிரெ 1:1 |
8 | அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள். |
9 | அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான். | ஆதி 12:18 ஆதி 26:10 யாத் 32:21 யாத் 32:35 யோசு 7:25 1சாமு 26:18 1சாமு 26:19 நீதி 28:10 |
10 | பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான். |
11 | அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். | ஆதி 22:12 ஆதி 42:18 நெகே 5:15 யோபு 1:1 யோபு 28:28 சங் 14:4 சங் 36:1-4 நீதி 1:7 நீதி 2:5 நீதி 8:13 நீதி 16:6 ரோம 3:18 |
12 | அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள். | ஆதி 11:29 ஆதி 12:13 1தெச 5:22 |
13 | என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான். | ஆதி 12:1 ஆதி 12:9 ஆதி 12:11-20 அப் 7:3-5 எபிரெ 11:8 |
14 | அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். | ஆதி 20:11 ஆதி 12:16 |
15 | பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான். | ஆதி 13:9 ஆதி 34:10 ஆதி 47:6 |
16 | பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள். | ஆதி 20:5 நீதி 27:5 |
17 | ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், | ஆதி 20:7 ஆதி 29:31 1சாமு 5:11 1சாமு 5:12 எஸ்றா 6:10 யோபு 42:9 யோபு 42:10 நீதி 15:8 நீதி 15:29 ஏசா 45:11 மத் 7:7 மத் 21:22 அப் 3:24 பிலிப் 4:6 1தெச 5:25 யாக் 5:16 |
18 | ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார். | ஆதி 20:7 ஆதி 12:17 ஆதி 16:2 ஆதி 30:2 1சாமு 1:6 1சாமு 5:10 |