இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:ஆதி 18:1-3 ஆதி 18:22-3
2ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.எபிரெ 13:2
3அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.2இரா 4:8 லூக் 11:8 லூக் 14:23 லூக் 24:28 லூக் 24:29 2கொரி 5:14
4அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,நீதி 4:16 நீதி 6:18 மீகா 7:3 ரோம 3:15
5லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள்.லேவி 18:22 லேவி 20:13 நியா 19:22 ஏசா 1:9 ஏசா 3:9 எரே 3:3 எரே 6:15 எசே 16:49 எசே 16:51 மத் 11:23 மத் 11:24 ரோம 1:23 ரோம 1:24 ரோம 1:26 ரோம 1:27 1கொரி 6:9 1தீமோ 1:10 2தீமோ 3:13 யூதா 1:7
6அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:நியா 19:23
7சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.ஆதி 19:4 லேவி 18:22 லேவி 20:13 உபா 23:17 நியா 19:23 1சாமு 30:23 1சாமு 30:24 அப் 17:26 ரோம 1:24 1கொரி 6:9-11 யூதா 1:7
8இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.யாத் 32:22
9அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.1சாமு 17:44 1சாமு 25:17 நீதி 9:7 நீதி 9:8 ஏசா 65:5 எரே 3:3 எரே 6:15 எரே 8:12 மத் 7:6
10அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி,
11தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.2இரா 6:18 அப் 13:11
12பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.ஆதி 7:1 எண் 16:26 யோசு 6:22 யோசு 6:23 எரே 32:39 2பேது 2:7 2பேது 2:9
13நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.ஆதி 13:13 ஆதி 18:20 யாக் 5:4
14அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.மத் 1:18
15கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.ஆதி 19:17 ஆதி 19:22 எண் 16:24-27 நீதி 6:4 நீதி 6:5 லூக் 13:24 லூக் 13:25 2கொரி 6:2 எபிரெ 3:7 எபிரெ 3:8 வெளிப் 18:4
16அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.சங் 119:60 யோவா 6:44
17அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.ஆதி 18:22
18அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,ஆதி 32:26 2இரா 5:11 2இரா 5:12 ஏசா 45:11 யோவா 13:6-8 அப் 9:13 அப் 10:14
19உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.சங் 18:1-50 சங் 40:1-17 சங் 103:1-22 சங் 106:1-107 சங் 116:1-19 1தீமோ 1:14-16
20அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.ஆதி 19:30 நீதி 3:5-7 ஆமோ 3:6
21அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்.ஆதி 4:7 யோபு 42:8 யோபு 42:9 சங் 34:15 சங் 102:17 சங் 145:19 எரே 14:10 மத் 12:20 லூக் 11:8 எபிரெ 2:17 எபிரெ 4:15 எபிரெ 4:16
22தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.ஆதி 32:25-28 யாத் 32:10 உபா 9:14 சங் 91:1-10 ஏசா 65:8 மாற் 6:5 2தீமோ 2:13 தீத் 1:2
23லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
24அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,உபா 29:23 யோபு 18:15 சங் 11:6 ஏசா 1:9 ஏசா 13:19 எரே 20:16 எரே 49:18 எரே 50:40 புலம் 4:6 எசே 16:49 எசே 16:50 ஓசி 11:8 ஆமோ 4:11 செப் 2:9 மத் 11:23 மத் 11:24 லூக் 17:28 லூக் 17:29 2பேது 2:6 யூதா 1:7
25அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.ஆதி 13:10 ஆதி 14:3 சங் 107:34
26அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.ஆதி 19:17 நீதி 14:14 லூக் 17:31 லூக் 17:32 எபிரெ 10:38
27விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,சங் 5:3
28சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.சங் 107:34 2பேது 2:7 யூதா 1:7 வெளிப் 14:10 வெளிப் 14:11 வெளிப் 18:9 வெளிப் 18:18 வெளிப் 19:3 வெளிப் 21:8
29தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்.ஆதி 8:1 ஆதி 12:2 ஆதி 18:23-33 ஆதி 30:22 உபா 9:5 நெகே 13:14 நெகே 13:22 சங் 25:7 சங் 105:8 சங் 105:42 சங் 106:4 சங் 136:23 சங் 145:20 எசே 36:31 எசே 36:32 ஓசி 11:8
30பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.ஆதி 49:4 எரே 2:36 எரே 2:37 யாக் 1:8
31அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப்பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.ஆதி 19:28 மாற் 9:6
32நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.ஆதி 11:3
33அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.லேவி 18:6 லேவி 18:7 நீதி 20:1 நீதி 23:29-35 ஆபகூ 2:15 ஆபகூ 2:16
34மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.ஏசா 3:9 எரே 3:3 எரே 5:3 எரே 6:15 எரே 8:12
35அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.சங் 8:4 நீதி 24:16 பிரச 7:26 லூக் 21:34 1கொரி 10:11 1கொரி 10:12 1பேது 4:7
36இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.ஆதி 19:8 லேவி 18:6 லேவி 18:7 நியா 1:7 1சாமு 15:33 ஆபகூ 2:15 மத் 7:2
37மூத்தவள் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.எண் 21:29 எண் 22:1-41 எண் 24:1-25 உபா 2:9 உபா 2:19 உபா 23:3 நியா 3:1-31 ரூத் 4:10 2சாமு 8:1-18 2இரா 3:1-27
38இளையவளும் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.உபா 2:9 உபா 2:19 உபா 23:3 நியா 10:6-18 நியா 11:1-40 1சாமு 11:1-15 2சாமு 10:1-19 நெகே 13:1-3 நெகே 13:23-28 சங் 83:4-8 ஏசா 11:14 செப் 2:9

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.