இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 21

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.ஆதி 50:24 யாத் 3:16 யாத் 4:31 யாத் 20:5 ரூத் 1:6 1சாமு 2:21 சங் 106:4 லூக் 1:68 லூக் 19:44 ரோம 4:17-20
2ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.2இரா 4:16 2இரா 4:17 லூக் 1:24 லூக் 1:25 லூக் 1:36 அப் 7:8 கலா 4:22 எபிரெ 11:11
3அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.ஆதி 21:6 ஆதி 21:12 ஆதி 17:19 ஆதி 22:2 யோசு 24:3 மத் 1:2 அப் 7:8 ரோம 9:7 எபிரெ 11:18
4தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.ஆதி 17:10-12 யாத் 12:48 லேவி 12:3 உபா 12:32 லூக் 1:6 லூக் 1:59 லூக் 2:21 யோவா 7:22 யோவா 7:23 அப் 7:8
5தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறுவயதாயிருந்தான்.ஆதி 17:1 ஆதி 17:17 ரோம 4:19
6அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிற யாவரும் என்னோடகூட நகைப்பார்கள்.ஆதி 17:17 ஆதி 18:12-15 1சாமு 1:26-28 1சாமு 2:1-10 சங் 113:9 சங் 126:2 ஏசா 49:15 ஏசா 49:21 ஏசா 54:1 லூக் 1:46-55 யோவா 16:21 யோவா 16:22 கலா 4:27 கலா 4:28 எபிரெ 11:11
7சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.எண் 23:23 உபா 4:32-34 சங் 86:8 சங் 86:10 ஏசா 49:21 ஏசா 66:8 எபே 3:10 2தெச 1:10
8பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து பண்ணினான்.1சாமு 1:22 சங் 131:2 ஓசி 1:8
9பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,ஆதி 16:3-6 ஆதி 16:15-6 ஆதி 17:20
10ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.ஆதி 25:6 ஆதி 25:19 ஆதி 17:19 ஆதி 17:21 ஆதி 20:11 ஆதி 22:10 ஆதி 36:6 ஆதி 36:7 மத் 8:11 மத் 8:12 மத் 22:13 யோவா 8:35 கலா 4:22-31 1யோவா 2:19
11தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.ஆதி 17:18 ஆதி 22:1 ஆதி 22:2 2சாமு 18:33 மத் 10:37 எபிரெ 12:11
12அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.1சாமு 8:7 1சாமு 8:9 ஏசா 46:10
13அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.ஆதி 21:18 ஆதி 16:10 ஆதி 17:20 ஆதி 25:12-18
14ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.ஆதி 19:27 ஆதி 22:3 ஆதி 24:54 ஆதி 26:31 சங் 119:60 நீதி 27:14 பிரச 9:10
15துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு,ஆதி 21:14 யாத் 15:22-25 யாத் 17:1-3 2இரா 3:9 சங் 63:1 ஏசா 44:12 எரே 14:3
16பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.ஆதி 44:34 1இரா 3:26 எஸ்தர் 8:6 ஏசா 49:15 சகரி 12:10 லூக் 15:20
17தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.ஆதி 16:11 யாத் 3:7 யாத் 22:23 யாத் 22:27 2இரா 13:4 2இரா 13:23 சங் 50:15 சங் 65:2 சங் 91:15 மத் 15:32
18நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.ஆதி 21:13 ஆதி 16:10 ஆதி 17:20 ஆதி 25:12-18 1நாளா 1:29-31
19தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.எண் 22:31 2இரா 6:17-20 ஏசா 35:5 ஏசா 35:6 லூக் 24:16-31
20தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.ஆதி 17:20 ஆதி 28:15 ஆதி 39:2 ஆதி 39:3 ஆதி 39:21 நியா 6:12 நியா 13:24 நியா 13:25 லூக் 1:80 லூக் 2:40
21அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.எண் 10:12 எண் 12:16 எண் 13:3 எண் 13:26 1சாமு 25:1
22அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.ஆதி 20:2 ஆதி 26:26
23ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.ஆதி 14:22 ஆதி 14:23 ஆதி 24:3 ஆதி 26:28 ஆதி 31:44 ஆதி 31:53 உபா 6:13 யோசு 2:12 1சாமு 20:13 1சாமு 20:17 1சாமு 20:42 1சாமு 24:21 1சாமு 24:22 1சாமு 30:15 எரே 4:2 2கொரி 1:23 எபிரெ 6:16
24அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான்.ஆதி 14:13 ரோம 12:18 எபிரெ 6:16
25ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.ஆதி 26:15-22 ஆதி 29:8 யாத் 2:15-17 நியா 1:15 நீதி 17:10 நீதி 25:9 நீதி 27:5 மத் 18:15
26அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக்கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.ஆதி 13:7 2இரா 5:20-24
27அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.ஆதி 14:22 ஆதி 14:23 நீதி 17:8 நீதி 18:16 நீதி 18:24 நீதி 21:14 ஏசா 32:8
28ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.
29அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான்.ஆதி 33:8 யாத் 12:26 1சாமு 15:14
30அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.ஆதி 31:44-48 ஆதி 31:52-48 யோசு 22:27 யோசு 22:28 யோசு 24:27
31அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது.ஆதி 26:33
32அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.ஆதி 21:27 ஆதி 14:13 ஆதி 31:53 1சாமு 18:3
33ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.ஆமோ 8:14
34ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.ஆதி 20:1 1நாளா 29:15 சங் 39:12 எபிரெ 11:9 எபிரெ 11:13 1பேது 2:11

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.