இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.ஆதி 15:2 ஆதி 15:3 ஆதி 21:10 ஆதி 21:12 ஆதி 25:21 நியா 13:2 லூக் 1:7 லூக் 1:36
2சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.ஆதி 17:16 ஆதி 18:10 ஆதி 20:18 ஆதி 25:21 ஆதி 30:2 ஆதி 30:3 ஆதி 30:9 ஆதி 30:22 சங் 127:3
3ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.ஆதி 12:4 ஆதி 12:5
4அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.1சாமு 1:6-8 2சாமு 6:16 நீதி 30:20 நீதி 30:21 நீதி 30:23 1கொரி 4:6 1கொரி 13:4 1கொரி 13:5
5அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்பாராக என்றாள்.லூக் 10:40 லூக் 10:41
6அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.ஆதி 13:8 ஆதி 13:9 நீதி 14:29 நீதி 15:1 நீதி 15:17 நீதி 15:18 1பேது 3:7
7கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:நீதி 15:3
8சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.ஆதி 16:1 ஆதி 16:4 எபே 6:5-8 1தீமோ 6:1 1தீமோ 6:2
9அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.பிரச 10:4 எபே 5:21 எபே 6:5 எபே 6:6 தீத் 2:9 1பேது 2:18-25 1பேது 5:5 1பேது 5:6
10பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.ஆதி 22:15-18 ஆதி 31:11-13 ஆதி 32:24-30 ஆதி 48:15 ஆதி 48:16 யாத் 3:2-6 நியா 2:1-3 நியா 6:11 நியா 6:16 நியா 6:21-24 நியா 13:16-22 ஏசா 63:9 ஓசி 12:3-5 சகரி 2:8 சகரி 2:9 மல்கி 3:1 யோவா 1:18 அப் 7:30-38 1தீமோ 6:16
11பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.ஆதி 17:19 ஆதி 29:32-35 ஏசா 7:14 மத் 1:21-23 லூக் 1:13 லூக் 1:31 லூக் 1:63
12அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.ஆதி 21:20 யோபு 11:12 யோபு 39:5-8
13அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.ஆதி 16:7 ஆதி 16:9 ஆதி 16:10 ஆதி 22:14 ஆதி 28:17 ஆதி 32:30 நியா 6:24
14ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.ஆதி 21:31 ஆதி 24:62 ஆதி 25:11
15ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.ஆதி 16:11 ஆதி 25:12 1நாளா 1:28 கலா 4:22 கலா 4:23
16ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.