இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 15

                   
புத்தகங்களைக் காட்டு
1இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.ஆதி 46:2 எண் 12:6 1சாமு 9:9 எசே 1:1 எசே 3:4 எசே 11:24 தானி 10:1-16 அப் 10:10-17 அப் 10:22 எபிரெ 1:1
2அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.ஆதி 12:1-3
3பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.ஆதி 12:2 ஆதி 13:16 நீதி 13:12 எரே 12:1 எபிரெ 10:35 எபிரெ 10:36
4அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,ஆதி 17:16 ஆதி 21:12 2சாமு 7:12 2சாமு 16:11 2நாளா 32:21 பிலேமோ 1:12
5அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.உபா 1:10 சங் 147:4 எரே 33:22 ரோம 9:7 ரோம 9:8
6அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.ரோம 4:3-6 ரோம 4:9-6 ரோம 4:20-25 கலா 3:6-14 எபிரெ 11:8 யாக் 2:23
7பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார்.ஆதி 11:28-31 ஆதி 12:1 நெகே 9:7 அப் 7:2-4
8அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான்.ஆதி 24:2-4 ஆதி 24:13-4 ஆதி 24:14-4 நியா 6:17-24 நியா 6:36-40 1சாமு 14:9 1சாமு 14:10 2இரா 20:8 சங் 86:17 ஏசா 7:11 லூக் 1:18 லூக் 1:34
9அதற்கு அவர்: மூன்றுவயதுக் கிடாரியையும், மூன்றுவயது வெள்ளாட்டையும், மூன்றுவயது ஆட்டுக்கிடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.ஆதி 22:13 லேவி 1:3 லேவி 1:10 லேவி 1:14 லேவி 3:1 லேவி 3:6 லேவி 9:2 லேவி 9:4 லேவி 12:8 லேவி 14:22 லேவி 14:30 சங் 50:5 ஏசா 15:5 லூக் 2:24
10அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.எரே 34:18 எரே 34:19 2தீமோ 2:15
11பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.எசே 17:3 எசே 17:7 மத் 13:4
12சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.ஆதி 2:21 1சாமு 26:12 யோபு 4:13 யோபு 4:14 யோபு 33:15 தானி 10:8 தானி 10:9 அப் 20:9
13அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.ஆதி 17:8 யாத் 1:1-2 யாத் 5:1-23 யாத் 22:21 யாத் 23:9 லேவி 19:34 உபா 10:19 சங் 105:11 சங் 105:12 சங் 105:23-25 அப் 7:6 அப் 7:7 எபிரெ 11:8-13
14இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.ஆதி 46:1-34 யாத் 6:5 யாத் 6:6 யாத் 7:1-14 உபா 4:20 உபா 6:22 உபா 7:18 உபா 7:19 உபா 11:2-4 யோசு 24:4-7 யோசு 24:17-7 1சாமு 12:8 நெகே 9:9-11 சங் 51:4 சங் 78:43-51 சங் 105:27-37 சங் 135:9 சங் 135:14
15நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.ஆதி 25:8 எண் 20:24 எண் 27:13 நியா 2:10 யோபு 5:26 பிரச 12:7 அப் 13:36
16நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.யாத் 12:40
17சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.யாத் 3:2 யாத் 3:3 உபா 4:20 நியா 6:21 நியா 13:20 1நாளா 21:26 ஏசா 62:1 எரே 11:4
18அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,ஆதி 9:8-17 ஆதி 17:1-27 ஆதி 24:7 2சாமு 23:5 ஏசா 55:3 எரே 31:31-34 எரே 32:40 எரே 33:20-26 கலா 3:15-17 எபிரெ 13:20
19கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,எண் 24:21 எண் 24:22
20ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,ஆதி 14:5 ஏசா 17:5
21எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.ஆதி 10:15-19 யாத் 23:23-28 யாத் 33:2 யாத் 34:11 உபா 7:1

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.