1 | ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. | ஆதி 16:16 |
2 | நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். | ஆதி 17:4-6 ஆதி 9:9 ஆதி 15:18 சங் 105:8-11 கலா 3:17 கலா 3:18 |
3 | அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: | ஆதி 17:17 யாத் 3:6 லேவி 9:23 லேவி 9:24 எண் 14:5 எண் 16:22 எண் 16:45 யோசு 5:14 நியா 13:20 1இரா 18:39 எசே 1:28 எசே 3:23 எசே 9:8 தானி 8:17 தானி 8:18 தானி 10:9 மத் 17:6 வெளிப் 1:17 |
4 | நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். | ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 16:10 ஆதி 22:17 ஆதி 25:1-18 ஆதி 32:12 ஆதி 35:11 ஆதி 36:1-43 எண் 1:1-54 எண் 26:1-65 ரோம 4:11-18 கலா 3:28 கலா 3:29 |
5 | இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். | ஆதி 17:15 ஆதி 32:28 எண் 13:16 2சாமு 12:25 நெகே 9:7 ஏசா 62:2-4 ஏசா 65:15 எரே 20:3 எரே 23:6 மத் 1:21-23 யோவா 1:42 வெளிப் 2:17 |
6 | உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். | ஆதி 17:4 ஆதி 17:20 ஆதி 35:11 |
7 | உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். | ஆதி 15:18 ஆதி 26:24 யாத் 6:4 சங் 105:8-11 மீகா 7:20 லூக் 1:54 லூக் 1:55 லூக் 1:72-75 ரோம 9:4 ரோம 9:8 ரோம 9:9 கலா 3:17 எபே 2:2 |
8 | நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். | ஆதி 12:7 ஆதி 13:15 ஆதி 13:17 ஆதி 15:7-21 சங் 105:9 சங் 105:11 |
9 | பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். | சங் 25:10 சங் 103:18 ஏசா 56:4 ஏசா 56:5 |
10 | எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; | ஆதி 17:11 ஆதி 34:15 யாத் 4:25 யாத் 12:48 உபா 10:16 உபா 30:6 யோசு 5:2 யோசு 5:4 எரே 4:4 எரே 9:25 எரே 9:26 அப் 7:8 ரோம 2:28 ரோம 2:29 ரோம 3:1 ரோம 3:25 ரோம 3:28 ரோம 3:30 ரோம 4:9-11 1கொரி 7:18 1கொரி 7:19 கலா 3:28 கலா 5:3-6 கலா 6:12 எபே 2:11 பிலிப் 3:3 கொலோ 2:11 கொலோ 2:12 |
11 | உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். | யாத் 4:25 யோசு 5:3 1சாமு 18:25-27 2சாமு 3:14 |
12 | உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். | ஆதி 21:4 லேவி 12:3 லூக் 1:59 லூக் 2:21 யோவா 7:22 யோவா 7:23 அப் 7:8 ரோம 2:28 பிலிப் 3:5 |
13 | உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. | ஆதி 14:14 ஆதி 15:3 யாத் 12:44 யாத் 21:4 |
14 | நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். | யாத் 4:24-26 யாத் 12:15 யாத் 12:19 யாத் 30:33 யாத் 30:38 லேவி 7:20 லேவி 7:21 லேவி 7:25 லேவி 7:27 லேவி 18:29 லேவி 19:8 எண் 15:30 எண் 15:31 யோசு 5:2-12 |
15 | பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். | ஆதி 17:5 ஆதி 32:28 2சாமு 12:25 |
16 | நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். | ஆதி 1:28 ஆதி 12:2 ஆதி 24:60 ரோம 9:9 |
17 | அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, | ஆதி 17:3 லேவி 9:24 எண் 14:5 எண் 16:22 எண் 16:45 உபா 9:18 உபா 9:25 யோசு 5:14 யோசு 7:6 நியா 13:20 1நாளா 21:16 யோபு 1:20 எசே 1:28 தானி 8:17 மத் 2:11 வெளிப் 5:8 வெளிப் 11:16 |
18 | இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான். | எரே 32:39 அப் 2:39 |
19 | அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். | ஆதி 17:21 ஆதி 18:10-14 ஆதி 21:2 ஆதி 21:3 ஆதி 21:6 2இரா 4:16 2இரா 4:17 லூக் 1:13-20 ரோம 9:6-9 கலா 4:28-31 |
20 | இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். | ஆதி 16:10-12 |
21 | வருகிற வருஷத்தில் குறித்தக்காலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். | ஆதி 21:10-12 ஆதி 26:2-5 ஆதி 46:1 ஆதி 48:15 யாத் 2:24 யாத் 3:6 லூக் 1:55 லூக் 1:72 ரோம 9:5 ரோம 9:6 ரோம 9:9 கலா 3:29 எபிரெ 11:9 |
22 | தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார். | ஆதி 17:3 ஆதி 18:33 ஆதி 35:9-15 யாத் 20:22 எண் 12:6-8 உபா 5:4 நியா 6:21 நியா 13:20 யோவா 1:18 யோவா 10:30 |
23 | அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான். | ஆதி 17:10-14 ஆதி 17:26-14 ஆதி 17:27-14 ஆதி 18:19 ஆதி 34:24 யோசு 5:2-9 சங் 119:60 நீதி 27:1 பிரச 9:10 அப் 16:3 ரோம 2:25-29 ரோம 4:9-12 1கொரி 7:18 1கொரி 7:19 கலா 5:6 கலா 6:15 |
24 | ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான். | ஆதி 17:1 ஆதி 17:17 ஆதி 12:4 ரோம 4:11 ரோம 4:19 ரோம 4:20 |
25 | அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான். |
26 | ஒரே நாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள். | ஆதி 12:4 ஆதி 22:3 ஆதி 22:4 சங் 119:60 |
27 | வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள். | ஆதி 18:19 |