இணை வசன வேதாகமம்

உபாகமம் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,உபா 4:1 உபா 4:5 உபா 4:14 உபா 4:45 உபா 5:31 உபா 12:1 லேவி 27:34 எண் 36:13 எசே 37:24
2நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.உபா 4:10 உபா 10:12 உபா 10:13 உபா 10:20 உபா 13:4 ஆதி 22:12 யாத் 20:20 யோபு 28:28 சங் 111:10 சங் 128:1 நீதி 16:6 பிரச 12:13 லூக் 12:5 1பேது 1:17
3இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.உபா 4:6 உபா 5:32 பிரச 8:12 ஏசா 3:10
4இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.உபா 4:35 உபா 4:36 உபா 5:6 1இரா 18:21 2இரா 19:5 1நாளா 29:10 ஏசா 42:8 ஏசா 44:6 ஏசா 44:8 ஏசா 45:5 ஏசா 45:6 எரே 10:10 எரே 10:11 மாற் 12:29-32 யோவா 17:3 1கொரி 8:4-6 1தீமோ 2:5
5நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புக்கூருவாயாக.உபா 10:12 உபா 11:13 உபா 30:6 மத் 22:37 மாற் 12:30 மாற் 12:33 லூக் 10:27 1யோவா 5:3
6இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.உபா 11:18 உபா 32:46 சங் 37:31 சங் 40:8 சங் 119:11 சங் 119:98 நீதி 2:10 நீதி 2:11 நீதி 3:1-3 நீதி 3:5-3 நீதி 7:3 ஏசா 51:7 எரே 31:33 லூக் 2:51 லூக் 8:15 2கொரி 3:3 கொலோ 3:16 2யோவா 1:2
7நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,உபா 6:2 உபா 4:9 உபா 4:10 உபா 11:19 ஆதி 18:19 யாத் 12:26 யாத் 12:27 யாத் 13:14 யாத் 13:15 சங் 78:4-6 எபே 6:4
8அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபக்குறியாய் இருக்கக்கடவது.உபா 11:18 யாத் 13:9 யாத் 13:16 எண் 15:38 எண் 15:39 நீதி 3:3 நீதி 6:21 நீதி 7:3 மத் 23:5 எபிரெ 2:1
9அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.உபா 11:20 யாத் 12:7 யோபு 19:23-25 ஏசா 30:8 ஏசா 57:8 ஆபகூ 2:2
10உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,ஆதி 13:15-17 ஆதி 15:18 ஆதி 26:3 ஆதி 28:13
11நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும்,உபா 7:12-18 உபா 8:10-20 உபா 32:15 நியா 3:7 நீதி 30:8 நீதி 30:9 எரே 2:31 எரே 2:32 எசே 16:10-20 மத் 19:23 மத் 19:24
12நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
13உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.உபா 6:2 உபா 5:29 உபா 10:12 உபா 10:20 உபா 13:4 மத் 4:10 லூக் 4:8
14உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.உபா 8:19 உபா 11:28 யாத் 34:14-16 எரே 25:6 1யோவா 5:21
15உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.உபா 4:24 யாத் 20:5 ஆமோ 3:2 1கொரி 10:22
16நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.மத் 4:7 லூக் 4:12
17உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக.உபா 6:1 உபா 6:2 உபா 11:13 உபா 11:22 யாத் 15:26 சங் 119:4 1கொரி 15:58 தீத் 3:8 எபிரெ 6:11 2பேது 1:5-10 2பேது 3:14
18நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,உபா 8:11 உபா 12:25 உபா 12:28 உபா 13:18 யாத் 15:26 சங் 19:11 ஏசா 3:10 எசே 18:5 எசே 18:19 எசே 18:21 எசே 18:27 எசே 33:14 எசே 33:16 எசே 33:19 ஓசி 14:9 யோவா 8:29 ரோம 12:2
19கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.யாத் 23:28-30 எண் 33:52 எண் 33:53 நியா 2:1-3 நியா 3:1-4
20நாளைக்கு உன் புத்திரன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;உபா 6:7 யாத் 12:26 யாத் 13:14 யோசு 4:6 யோசு 4:7 யோசு 4:21-24 நீதி 22:6
21நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.உபா 5:6 உபா 5:15 உபா 15:15 உபா 26:5-9 யாத் 20:2 நெகே 9:9 நெகே 9:10 சங் 136:10-12 ஏசா 51:1 எரே 32:20 எரே 32:21 ரோம 6:17 ரோம 6:18 எபே 2:11 எபே 2:12
22கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,உபா 4:34 யாத் 7:1-12 யாத் 14:1-31 சங் 135:9
23தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.உபா 6:10 உபா 6:18 உபா 1:8 உபா 1:35 யாத் 13:5
24இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.உபா 10:13 யோபு 35:7 யோபு 35:8 நீதி 9:12 ஏசா 3:10 எரே 32:39 மத் 6:33 ரோம 6:21 ரோம 6:22
25நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமூகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.உபா 24:13 லேவி 18:5 சங் 106:30 சங் 106:31 சங் 119:6 நீதி 12:28 எசே 20:11 லூக் 10:28 லூக் 10:29 ரோம 10:3 ரோம 10:5 ரோம 10:6 கலா 3:12 யாக் 2:10

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.