1 | கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: | யோசு 12:6 உபா 33:1 உபா 34:5 அப் 13:36 அப் 13:37 ரோம 1:1 தீத் 1:1 யாக் 1:1 வெளிப் 1:18 |
2 | என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். | யோசு 1:1 ஏசா 42:1 எபிரெ 3:5 எபிரெ 3:6 எபிரெ 7:23 எபிரெ 7:24 |
3 | நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். | யோசு 14:9 உபா 11:24 தீத் 1:2 |
4 | வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். | ஆதி 15:18-21 யாத் 23:31 எண் 34:2-18 உபா 1:7 உபா 3:25 உபா 11:24 1நாளா 5:9 1நாளா 18:3 |
5 | நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. | உபா 7:24 உபா 20:4 சங் 46:11 ரோம 8:31 ரோம 8:37 |
6 | பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். | யோசு 1:7 யோசு 1:9 1சாமு 4:9 1இரா 2:2 1நாளா 22:13 1நாளா 28:10 2நாளா 32:7 2நாளா 32:8 சங் 27:14 ஏசா 35:3 ஏசா 35:4 தானி 10:19 ஆகா 2:4 சகரி 8:9 1கொரி 16:13 எபே 6:10 2தீமோ 2:1 |
7 | என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. | யோசு 1:1 யோசு 11:15 எண் 27:23 உபா 31:7 |
8 | இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். | உபா 6:6-9 உபா 11:18 உபா 11:19 உபா 17:18 உபா 17:19 உபா 30:14 உபா 31:11 சங் 37:30 சங் 37:31 சங் 40:10 சங் 119:42 சங் 119:43 ஏசா 59:21 மத் 12:35 எபே 4:29 |
9 | நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். | உபா 31:7 உபா 31:8 உபா 31:28 நியா 6:14 2சாமு 13:28 அப் 4:19 |
10 | அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி: |
11 | நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்து போவீர்கள் என்று சொல்லச்சொன்னான். | யோசு 3:2 யாத் 19:11 2இரா 20:5 ஓசி 6:2 |
12 | பின்பு யோசுவா; ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி: |
13 | கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே. | யோசு 22:1-4 எண் 32:20-28 உபா 3:18 |
14 | உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய், | யாத் 13:18 |
15 | கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்களாக என்றான். | எண் 32:17-22 கலா 5:13 கலா 6:2 பிலிப் 1:21-26 பிலிப் 2:4 |
16 | அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். | எண் 32:25 உபா 5:27 ரோம 13:1-5 தீத் 3:1 1பேது 2:13-15 |
17 | நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. | யோசு 1:5 1சாமு 20:13 1இரா 1:37 1நாளா 28:20 சங் 20:1 சங் 20:4 சங் 20:9 சங் 118:25 சங் 118:26 மத் 21:9 1தீமோ 2:1 1தீமோ 2:2 |
18 | நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலை செய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய் மாத்திரம் இரும் என்றார்கள். | உபா 17:12 1சாமு 11:12 சங் 2:1-6 லூக் 19:27 எபிரெ 10:28 எபிரெ 10:29 எபிரெ 12:25 |