1 | மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். | உபா 1:1 உபா 29:2 உபா 29:10 |
2 | நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார். | உபா 4:23 யாத் 19:5-8 யாத் 24:8 எபிரெ 8:6-13 எபிரெ 9:19-23 |
3 | அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார். | உபா 29:10-15 ஆதி 17:7 ஆதி 17:21 சங் 105:8-10 எரே 32:38-40 மத் 13:17 கலா 3:17-21 எபிரெ 8:8 எபிரெ 8:9 |
4 | கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார். | உபா 5:24-26 உபா 4:33 உபா 4:36 உபா 34:10 யாத் 19:9 யாத் 19:18 யாத் 19:19 யாத் 20:18-22 யாத் 33:11 எண் 12:8 |
5 | கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: | உபா 5:27 ஆதி 18:22 யாத் 19:16 யாத் 20:18-21 யாத் 24:2 யாத் 24:3 எண் 16:48 சங் 106:23 எரே 30:21 சகரி 3:1-5 கலா 3:19 எபிரெ 9:24 எபிரெ 12:18-24 |
6 | உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. | உபா 4:4 யாத் 20:2-17 லேவி 26:1 லேவி 26:2 |
7 | என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். | யாத் 20:3 மத் 4:10 யோவா 5:23 1யோவா 5:21 |
8 | மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். | உபா 4:15-19 யாத் 20:4 |
9 | நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். | யாத் 20:4-6 |
10 | என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். | ஏசா 1:16-19 எரே 32:18 தானி 9:4 மத் 7:21-27 கலா 5:6 1யோவா 1:7 |
11 | உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். | உபா 6:13 யாத் 20:7 லேவி 19:12 சங் 139:20 எரே 4:2 மத் 5:33 மத் 5:34 யாக் 5:12 |
12 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. | யாத் 20:8-11 ஏசா 56:6 ஏசா 58:13 |
13 | ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. | யாத் 23:12 யாத் 35:2 யாத் 35:3 எசே 20:12 லூக் 13:14-16 லூக் 23:56 |
14 | ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; | ஆதி 2:2 யாத் 16:29 யாத் 16:30 எபிரெ 4:4 |
15 | நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். | உபா 15:15 உபா 16:12 உபா 24:18-22 ஏசா 51:1 ஏசா 51:2 எபே 2:11 எபே 2:12 |
16 | உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. | யாத் 20:12 லேவி 19:3 மத் 15:4-6 கொலோ 3:20 |
17 | கொலை செய்யாதிருப்பாயாக. | யாத் 20:13 மத் 5:21 மத் 5:22 |
18 | விபசாரம் செய்யாதிருப்பாயாக. | யாத் 20:14 நீதி 6:32 நீதி 6:33 மத் 5:27 மத் 5:28 லூக் 18:20 யாக் 2:10 யாக் 2:11 |
19 | களவு செய்யாதிருப்பாயாக. | யாத் 20:15 ரோம 13:9 எபே 4:28 |
20 | பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. | உபா 19:16-21 யாத் 20:16 யாத் 23:1 1இரா 21:13 நீதி 6:19 நீதி 19:5 நீதி 19:9 மல்கி 3:5 |
21 | பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். | யாத் 20:17 1இரா 21:1-4 மீகா 2:2 ஆபகூ 2:9 லூக் 12:15 ரோம 7:7 ரோம 7:8 ரோம 13:9 1தீமோ 6:9 1தீமோ 6:10 எபிரெ 13:5 |
22 | இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். | உபா 5:4 உபா 4:12-15 உபா 4:36-15 யாத் 19:18 யாத் 19:19 |
23 | மலை அக்கினியாய் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: | யாத் 20:18 யாத் 20:19 எபிரெ 12:18-21 |
24 | இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம். | உபா 5:4 உபா 5:5 யாத் 19:19 |
25 | இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம். | உபா 18:16 உபா 33:2 2கொரி 3:7-9 கலா 3:10 கலா 3:21 கலா 3:22 எபிரெ 12:29 |
26 | நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ? | உபா 4:33 |
27 | நீரோ சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள். | யாத் 20:19 எபிரெ 12:19 |
28 | நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி; இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள். | உபா 18:17 எண் 27:7 எண் 36:5 |
29 | அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். | உபா 32:29 உபா 32:30 சங் 81:13-15 ஏசா 48:18 எரே 44:4 எசே 33:31 எசே 33:32 மத் 23:37 லூக் 19:42 2கொரி 5:20 2கொரி 6:1 எபிரெ 12:25 எபிரெ 11:1 சங் 106:3 சங் 119:1-5 லூக் 11:28 யோவா 15:14 வெளிப் 22:14 வெளிப் 22:16 வெளிப் 4:40 வெளிப் 6:3 வெளிப் 6:18 வெளிப் 12:25 வெளிப் 12:28 வெளிப் 19:13 வெளிப் 22:7 ரூத் 3:1 சங் 19:11 ஏசா 3:10 எரே 22:14 எரே 22:15 எபே 6:3 யாக் 1:25 |
30 | நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். |
31 | நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். | உபா 5:1 உபா 4:1 உபா 4:5 உபா 4:45 உபா 6:1 உபா 11:1 உபா 12:1 எசே 20:11 மல்கி 4:4 கலா 3:19 |
32 | உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக. | உபா 6:3 உபா 6:25 உபா 8:1 உபா 11:32 உபா 24:8 2இரா 21:8 எசே 37:24 |
33 | நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்து சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள். | உபா 10:12 சங் 119:6 எரே 7:23 லூக் 1:6 ரோம 2:7 |