1 | அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி: | எண் 25:9 |
2 | இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார். | எண் 1:2 எண் 1:3 யாத் 30:12 யாத் 38:25 யாத் 38:26 |
3 | அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி: | எண் 26:63 எண் 22:1 எண் 31:12 எண் 33:48 எண் 35:1 உபா 4:46-49 உபா 34:1 உபா 34:6 உபா 34:8 |
4 | கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள். | எண் 1:1 1நாளா 21:1 |
5 | ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்: ரூபனுடைய குமாரர், ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும், | ஆதி 29:32 ஆதி 49:2 ஆதி 49:3 1நாளா 5:1 |
6 | எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே. |
7 | இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர். | எண் 26:1 எண் 26:21 எண் 2:11 ஆதி 46:9 |
8 | பல்லூவின் குமாரன் எலியாப். |
9 | எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம்பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள். | எண் 1:16 எண் 16:1 எண் 16:2-35 சங் 106:17 யூதா 1:11 |
10 | பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பதுபேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள். | எண் 16:2 எண் 16:31-35 எண் 16:38-35 எண் 27:3 யாத் 16:35 சங் 106:17 சங் 106:18 |
11 | கோராகின் குமாரரோ சாகவில்லை. | எண் 16:5 யாத் 6:24 1நாளா 6:22-28 சங் 42:1 சங் 44:1 சங் 45:1 சங் 46:1 சங் 47:1 சங் 48:1 சங் 49:1 சங் 50:1 |
12 | சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும், | ஆதி 46:10 யாத் 6:15 |
13 | சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியரின் குடும்பமுமே. | ஆதி 46:10 |
14 | இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர். | எண் 1:22 எண் 1:23 எண் 2:12 எண் 2:13 |
15 | காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும், | எண் 2:14 ஆதி 46:16 |
16 | ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும், | ஆதி 46:16 |
17 | ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே. | ஆதி 46:16 |
18 | இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். | எண் 1:24 எண் 1:25 எண் 2:14 எண் 2:15 |
19 | யூதாவின் குமாரர் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள். | ஆதி 38:1-10 ஆதி 46:12 1நாளா 2:3-8 |
20 | யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே. | ஆதி 38:5 ஆதி 38:11 ஆதி 38:14 ஆதி 38:26-30 1நாளா 4:21 |
21 | பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே. |
22 | இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். | எண் 1:26 எண் 1:27 எண் 2:3 எண் 2:4 ஆதி 49:8 1நாளா 5:2 சங் 115:14 எபிரெ 7:14 |
23 | இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும், | எண் 2:5 ஆதி 30:17 ஆதி 30:18 ஆதி 46:13 1நாளா 7:1 |
24 | யாசூபின் சந்ததியான யாசூபியரின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியரின் குடும்பமுமே. | ஆதி 46:13 |
25 | இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர். | எண் 1:28 எண் 1:29 எண் 2:5 எண் 2:6 |
26 | செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே. | ஆதி 30:19 ஆதி 30:20 ஆதி 46:14 |
27 | இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர். | எண் 1:30 எண் 1:31 எண் 2:7 எண் 2:8 |
28 | யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன: | ஆதி 41:51 ஆதி 41:52 ஆதி 46:20 ஆதி 48:5 ஆதி 48:13-20 |
29 | மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும், | எண் 32:39 எண் 32:40 எண் 36:1 ஆதி 48:14 உபா 3:15 யோசு 17:1 நியா 5:14 1நாளா 7:14-19 |
30 | கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேரியரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும், | யோசு 17:2 நியா 6:11 நியா 6:24 நியா 6:34 நியா 8:2 |
31 | அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும், |
32 | செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், எப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே. |
33 | எப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். | எண் 27:1 எண் 36:10-12 |
34 | இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர். | எண் 1:34 எண் 1:35 எண் 2:20 எண் 2:21 |
35 | எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும், | 1நாளா 7:20 1நாளா 7:21 |
36 | சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே. |
37 | இவைகளே எப்பீராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள். | எண் 1:32 எண் 1:33 எண் 2:18 எண் 2:19 |
38 | பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும், | 1நாளா 7:6-12 |
39 | சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும், | ஆதி 46:21 |
40 | பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே. | 1நாளா 8:3 |
41 | இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர். | எண் 1:36 எண் 1:37 எண் 2:22 எண் 2:23 ஆதி 46:21 |
42 | தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம். | ஆதி 46:23 |
43 | சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர். | எண் 1:38 எண் 1:39 எண் 2:25 எண் 2:26 |
44 | ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும், | ஆதி 46:17 |
45 | பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே. |
46 | ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள். | ஆதி 46:17 |
47 | இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். | எண் 1:40 எண் 1:41 எண் 2:27 எண் 2:28 |
48 | நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும், | ஆதி 46:24 1நாளா 7:13 |
49 | எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே. | 1நாளா 7:13 |
50 | இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர். | எண் 1:42 எண் 1:43 எண் 2:29 எண் 2:30 |
51 | இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேராயிருந்தார்கள். | எண் 1:46 எண் 2:32 நெகே 9:23 யோபு 12:9 யோபு 12:10 யோபு 12:14 யோபு 12:20-23 சங் 77:20 |
52 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
53 | இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத் தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும். | ஆதி 12:2 ஆதி 12:7 யோசு 11:23 யோசு 14:1 சங் 49:14 சங் 105:44 எசே 47:22 தானி 7:27 மத் 5:5 வெளிப் 5:10 வெளிப் 21:27 |
54 | அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத் தக்கதாக அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். | எண் 32:3 எண் 32:5 எண் 33:54 யோசு 17:14 |
55 | ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள். | எண் 26:56 எண் 33:54 எண் 34:13 யோசு 11:23 யோசு 14:2 யோசு 17:14 யோசு 18:6 யோசு 18:10 யோசு 18:11 யோசு 19:1 யோசு 19:10 யோசு 19:17 யோசு 19:24 யோசு 19:32 யோசு 19:40 நீதி 16:33 நீதி 18:18 அப் 1:26 கொலோ 1:12 வெளிப் 7:4-8 |
56 | அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார். | ரோம 11:7 1கொரி 12:4 |
57 | எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்; | எண் 35:2 எண் 35:3 ஆதி 46:11 யாத் 6:16-19 1நாளா 6:1 1நாளா 6:16-30 |
58 | லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான். | எண் 3:17-21 எண் 16:1 |
59 | அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள். | யாத் 2:1 யாத் 2:2 யாத் 6:20 லேவி 18:12 |
60 | ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள். | எண் 3:2 எண் 3:8 |
61 | நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள். | எண் 3:4 லேவி 10:1 லேவி 10:2 1நாளா 24:1 1நாளா 24:2 |
62 | அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை. | எண் 1:49 எண் 3:39 எண் 4:27 எண் 4:48 எண் 18:20-24 எண் 35:2-8 உபா 10:9 உபா 14:27-29 உபா 18:1 உபா 18:2 யோசு 13:14 யோசு 13:33 யோசு 14:3 |
63 | மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே. |
64 | முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. | எண் 1:1-2 உபா 2:14 உபா 2:15 உபா 4:3 உபா 4:4 1கொரி 10:5 |
65 | வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை. | எண் 14:23 எண் 14:24 எண் 14:28-30 எண் 14:35-30 எண் 14:38-30 யாத் 12:37 உபா 2:14 உபா 2:15 உபா 32:49 உபா 32:50 சங் 90:3-7 ரோம 11:22 1கொரி 10:5 1கொரி 10:6 எபிரெ 3:17 எபிரெ 3:18 யூதா 1:5 |