| 1 | நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: | எரே 39:1 எரே 39:2 எரே 52:4 எரே 52:5 2இரா 25:1 2இரா 25:2 2நாளா 36:11 |
| 2 | அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; ஏரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான். | எரே 32:3 எரே 32:8 எரே 33:1 எரே 36:5 எரே 37:21 எரே 38:6 எரே 39:13-15 மத் 5:12 |
| 3 | ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், | எரே 2:30 எரே 5:3 2இரா 6:31 2இரா 6:32 2நாளா 28:22 |
| 4 | யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும். | எரே 37:17 எரே 38:18 எரே 38:23 எரே 39:4-7 எரே 52:8-11 2இரா 25:4-7 எசே 12:12 எசே 12:13 எசே 17:13-21 எசே 21:25 எசே 21:26 |
| 5 | அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்து வைத்தான். | எரே 27:22 எரே 34:4 எரே 34:5 |
| 6 | அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: |
| 7 | இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்வான் என்று உரைத்தார். | 1இரா 14:5 மாற் 11:2-6 மாற் 14:13-16 |
| 8 | அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன். | எரே 32:2 எரே 33:1 |
| 9 | ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன். | ஆதி 23:15 ஆதி 23:16 1இரா 20:39 எஸ்தர் 3:9 ஏசா 55:2 |
| 10 | நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு, | எரே 32:12 எரே 32:44 ஏசா 44:5 |
| 11 | நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, | லூக் 2:27 அப் 26:3 1கொரி 11:16 |
| 12 | என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து, | எரே 32:16 எரே 36:4 எரே 36:5 எரே 36:16-19 எரே 36:26-19 எரே 43:3-6 எரே 45:1-5 |
| 13 | அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி: |
| 14 | இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை. |
| 15 | ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன். | எரே 32:37 எரே 32:43 எரே 32:44 எரே 30:18 எரே 31:5 எரே 31:12 எரே 31:24 எரே 33:12 எரே 33:13 ஆமோ 9:14 ஆமோ 9:15 சகரி 3:10 |
| 16 | நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது: | எரே 12:1 ஆதி 32:9-12 2சாமு 7:18-25 எசே 36:35-37 பிலிப் 4:6 பிலிப் 4:7 |
| 17 | ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. | எரே 1:6 எரே 4:10 எரே 14:13 எசே 9:8 எசே 11:13 |
| 18 | ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே, | யாத் 20:5 யாத் 20:6 யாத் 34:7 எண் 14:18 உபா 5:9 உபா 5:10 உபா 7:9 உபா 7:10 |
| 19 | யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. | ஏசா 9:6 ஏசா 28:29 ஏசா 40:13 ஏசா 46:10 ஏசா 46:11 ரோம 11:33 ரோம 11:34 எபே 1:11 |
| 20 | இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி, | யாத் 7:3 யாத் 10:2 உபா 4:34 உபா 6:22 உபா 7:19 நெகே 9:10 சங் 78:43-51 சங் 105:27-36 சங் 135:9 அப் 7:36 |
| 21 | இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, | யாத் 6:6 யாத் 13:14 சங் 105:37 சங் 105:43 சங் 106:8-11 |
| 22 | அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர். | ஆதி 13:15 ஆதி 15:18-21 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 24:7 ஆதி 28:13-15 ஆதி 35:11 ஆதி 35:12 ஆதி 50:24 யாத் 13:5 எண் 14:16 எண் 14:30 உபா 1:8 உபா 1:35 உபா 6:10 உபா 6:18 உபா 6:23 உபா 7:13 உபா 8:1 யோசு 1:6 யோசு 21:43 நெகே 9:15 சங் 105:9-11 |
| 23 | அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர். | நெகே 9:15 நெகே 9:22-25 சங் 44:2 சங் 44:3 சங் 78:54 சங் 78:55 சங் 105:44 சங் 105:45 |
| 24 | இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர். | எரே 33:4 எசே 21:22 |
| 25 | கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன். | எரே 32:24 சங் 77:19 சங் 97:2 யோவா 13:7 ரோம 11:33 ரோம 11:34 |
| 26 | அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: |
| 27 | இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? | எண் 16:22 எண் 27:16 சங் 65:2 ஏசா 64:8 லூக் 3:6 யோவா 17:2 ரோம 3:29 ரோம 3:30 |
| 28 | ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 32:3 எரே 32:24 எரே 32:36 எரே 19:7-12 எரே 20:5 |
| 29 | இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள். | எரே 17:27 எரே 21:10 எரே 27:8-10 எரே 37:7-10 எரே 39:8 எரே 52:13 2இரா 25:9 2நாளா 36:19 ஏசா 64:10 ஏசா 64:11 புலம் 4:11 மத் 22:7 |
| 30 | இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்து வந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளின் செய்கையினாலே எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 2:7 எரே 3:25 எரே 7:22-26 உபா 9:7-12 உபா 9:22-24 2இரா 17:9-20 நெகே 9:16-37 சங் 106:6 சங் 106:7 ஏசா 63:10 எசே 16:15-22 எசே 20:8 எசே 20:28 எசே 23:43 எசே 23:44 அப் 7:51-53 |
| 31 | அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள்முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாக்கவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது. | எரே 5:9-11 எரே 6:6 எரே 6:7 எரே 23:14 எரே 23:15 1இரா 11:7 1இரா 11:8 2இரா 21:4-7 2இரா 21:16-7 2இரா 22:16 2இரா 22:17 2இரா 23:15 எசே 22:2-22 மத் 23:37 லூக் 13:33 லூக் 13:34 |
| 32 | எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும். | எரே 2:26 எஸ்றா 9:7 நெகே 9:32-34 ஏசா 1:4-6 ஏசா 1:23-6 ஏசா 9:14 ஏசா 9:15 எசே 22:6 எசே 22:25-29 தானி 9:6 தானி 9:8 மீகா 3:1-5 மீகா 3:9-12 செப் 3:1-4 |
| 33 | முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள். | எரே 2:27 எரே 7:24 எரே 18:17 எசே 8:16 ஓசி 11:2 சகரி 7:11 |
| 34 | அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள். | எரே 7:30 எரே 23:11 2இரா 21:4-7 2இரா 23:6 2நாளா 33:4-7 2நாளா 33:15-7 எசே 8:5-16 |
| 35 | அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை. | எரே 7:31 எரே 19:5 எரே 19:6 2இரா 23:10 2நாளா 28:2 2நாளா 28:3 2நாளா 33:6 சங் 106:37 சங் 106:38 ஏசா 57:5 எசே 16:20 எசே 16:21 எசே 23:37 |
| 36 | இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போகும் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: | எரே 16:12-15 ஏசா 43:24 ஏசா 43:25 ஏசா 57:17 ஏசா 57:18 எசே 36:31 எசே 36:32 ஓசி 2:14 ரோம 5:20 எபே 2:3-5 |
| 37 | இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். | எரே 23:3 எரே 23:8 எரே 29:14 எரே 30:18 எரே 31:10 எரே 33:7 உபா 30:3-6 சங் 106:47 ஏசா 11:11-16 எசே 11:17 எசே 34:12-14 எசே 36:24 எசே 37:21-25 எசே 39:25-29 ஓசி 1:11 ஓசி 3:5 ஆமோ 9:14 ஆமோ 9:15 ஒபதி 1:17-21 செப் 3:20 |
| 38 | அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். | எரே 24:7 எரே 30:22 எரே 31:1 எரே 31:33 ஆதி 17:7 உபா 26:17-19 சங் 144:15 எசே 11:19 எசே 11:20 எசே 36:28 எசே 37:27 எசே 39:22 எசே 39:28 சகரி 13:9 எபிரெ 8:10 எபிரெ 11:16 வெளிப் 21:7 |
| 39 | அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, | 2நாளா 30:12 ஏசா 52:8 எசே 11:19 எசே 11:20 எசே 36:26 எசே 37:22 யோவா 17:21 அப் 4:32 2கொரி 13:11 பிலிப் 2:1 பிலிப் 2:2 |
| 40 | அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப் பயப்படும்பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, | எரே 31:31-33 எரே 50:5 ஆதி 17:7-13 2சாமு 23:4 ஏசா 24:5 ஏசா 55:3 ஏசா 61:8 லூக் 1:72-75 கலா 3:14-17 எபிரெ 6:13-18 எபிரெ 7:24 எபிரெ 13:20 |
| 41 | அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். | உபா 30:9 ஏசா 62:5 ஏசா 65:19 செப் 3:17 |
| 42 | நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 31:28 யோசு 23:14 யோசு 23:15 சகரி 8:14 சகரி 8:15 மத் 24:35 |
| 43 | மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும். | எரே 32:36 எசே 37:11-14 |
| 44 | பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். | எரே 17:26 |