| 1 | அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 30:24 |
| 2 | பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம்பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | யாத் 1:16 யாத் 1:22 யாத் 2:23 யாத் 5:21 யாத் 12:37 யாத் 14:8-12 யாத் 15:9 யாத் 15:10 யாத் 17:8-13 |
| 3 | பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். | உபா 7:7-9 உபா 10:15 உபா 33:3 உபா 33:26 ஓசி 11:1 மல்கி 1:2 ரோம 9:13 1யோவா 4:19 |
| 4 | இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். | எரே 1:10 எரே 30:18 எரே 33:7 சங் 51:18 சங் 69:35 ஆமோ 9:11 அப் 15:16 எபே 2:20-22 வெளிப் 21:10-27 |
| 5 | மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். | உபா 28:30 ஏசா 62:8 ஏசா 62:9 ஏசா 65:21 ஏசா 65:22 ஆமோ 9:14 மீகா 4:4 சகரி 3:10 |
| 6 | எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும். | எரே 6:17 ஏசா 40:9 ஏசா 52:7 ஏசா 52:8 ஏசா 62:6 எசே 3:17 எசே 33:2 ஓசி 9:8 |
| 7 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள். | உபா 32:43 சங் 67:1 சங் 96:1-3 சங் 98:1-4 சங் 117:1 சங் 117:2 சங் 138:4 சங் 138:5 ஏசா 12:4-6 ஏசா 24:14-16 ஏசா 42:10-12 ஏசா 44:23 செப் 3:14-20 |
| 8 | இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள். | எரே 3:12 எரே 23:8 எரே 29:14 சங் 107:3 சகரி 2:6 |
| 9 | அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான். | எரே 3:4 எரே 50:4 சங் 126:5 சங் 126:6 ஓசி 12:4 சகரி 12:10 தானி 9:17 தானி 9:18 மத் 5:4 லூக் 6:21 ரோம 8:26 2கொரி 7:9-11 எபிரெ 5:7 |
| 10 | ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள். | ஆதி 10:5 சங் 72:10 ஏசா 24:14 ஏசா 41:1 ஏசா 42:4 ஏசா 42:10 ஏசா 60:9 ஏசா 66:19 செப் 2:11 |
| 11 | கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார். | எரே 15:21 எரே 50:33 ஏசா 44:23 ஏசா 48:20 ஏசா 49:24 ஓசி 13:14 மத் 20:28 தீத் 2:14 எபிரெ 2:14 எபிரெ 2:15 |
| 12 | அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை. | எரே 31:4 எரே 33:9-11 ஏசா 12:1-6 ஏசா 35:10 ஏசா 51:11 |
| 13 | அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். | எரே 31:4 நெகே 12:27 நெகே 12:43 சங் 30:11 சங் 149:3 சகரி 8:4 சகரி 8:5 சகரி 8:19 |
| 14 | ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | உபா 33:8-11 2நாளா 6:41 நெகே 10:39 சங் 132:9 சங் 132:16 ஏசா 61:6 1பேது 2:9 வெளிப் 5:10 |
| 15 | ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 40:1 யோசு 18:25 1சாமு 7:17 மத் 2:18 |
| 16 | நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். | ஆதி 43:31 ஆதி 45:1 சங் 30:5 மாற் 5:38 மாற் 5:39 யோவா 20:13-15 1தெச 4:14 |
| 17 | உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 29:11-16 எரே 46:27 எரே 46:28 சங் 102:13 சங் 102:14 ஏசா 6:13 ஏசா 11:11-16 புலம் 3:18 புலம் 3:21 புலம் 3:26 எசே 37:11-14 எசே 37:25-14 எசே 39:28 ஓசி 2:15 ஓசி 3:5 ஆமோ 9:8 ஆமோ 9:9 மத் 24:22 ரோம 11:23-26 |
| 18 | நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர். | யோபு 33:27 யோபு 33:28 சங் 102:19 சங் 102:20 ஏசா 57:15-18 ஓசி 5:15 ஓசி 6:1 ஓசி 6:2 லூக் 15:20 |
| 19 | நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன். | உபா 30:2 உபா 30:6-8 எசே 36:26 எசே 36:31 சகரி 12:10 லூக் 15:17-19 யோவா 6:44 யோவா 6:45 எபே 2:3-5 2தீமோ 2:25 தீத் 3:3-7 |
| 20 | எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 31:9 எரே 3:19 சங் 103:13 நீதி 3:12 லூக் 15:24 லூக் 15:32 |
| 21 | உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு. | ஏசா 57:14 ஏசா 62:10 |
| 22 | சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள். | எரே 2:18 எரே 2:23 எரே 2:36 எரே 4:14 எரே 13:27 ஓசி 8:5 |
| 23 | இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள். | எரே 23:5-8 எரே 33:15-26 ஏசா 1:26 ஏசா 60:21 சகரி 8:3 |
| 24 | அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத்திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள். | எரே 33:11-13 எசே 36:10 சகரி 2:4 சகரி 8:4-8 |
| 25 | நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். | எரே 31:14 சங் 107:9 ஏசா 32:2 ஏசா 50:4 மத் 5:6 மத் 11:28 லூக் 1:53 யோவா 4:14 2கொரி 7:6 |
| 26 | இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. | சங் 127:2 சகரி 4:1 சகரி 4:2 |
| 27 | இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும் மிருகவித்தினாலும் விதைப்பேன். | எரே 30:19 எசே 36:9 ஓசி 2:23 சகரி 10:9 |
| 28 | அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள் பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 44:27 தானி 9:14 |
| 29 | பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். | எரே 31:30 புலம் 5:7 எசே 18:2 எசே 18:3 |
| 30 | அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். | உபா 24:16 ஏசா 3:11 எசே 3:18 எசே 3:19 எசே 3:24 எசே 18:4 எசே 18:20 எசே 33:8 எசே 33:13 எசே 33:18 கலா 6:5 கலா 6:7 கலா 6:8 யாக் 1:15 |
| 31 | இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன். | எரே 31:27 எரே 23:5 எரே 30:3 எரே 33:14-16 ஆமோ 9:13 |
| 32 | நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்தநாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 31:1 எரே 34:14 யாத் 19:5 யாத் 24:6-8 உபா 5:3 உபா 29:1 1இரா 8:9 எசே 16:8 எசே 16:60-62 எபிரெ 9:18-22 |
| 33 | அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 32:40 |
| 34 | இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். | 1தெச 4:9 எபிரெ 5:12 1யோவா 2:27 |
| 35 | சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நிமயங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: | ஆதி 1:14-18 உபா 4:19 யோபு 38:33 சங் 19:1-6 சங் 72:5 சங் 72:17 சங் 74:16 சங் 89:2 சங் 89:36 சங் 89:37 சங் 119:89 சங் 136:7-9 மத் 5:45 |
| 36 | இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 33:20-26 சங் 72:5 சங் 72:17 சங் 89:36 சங் 89:37 சங் 102:28 சங் 119:89 சங் 148:6 ஏசா 54:9 ஏசா 54:10 |
| 37 | கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 33:22 யோபு 11:7-9 சங் 89:2 நீதி 30:4 ஏசா 40:12 |
| 38 | இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும். | எரே 31:27 எரே 23:5 |
| 39 | அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும். | எசே 40:8 சகரி 2:1 சகரி 2:2 |
| 40 | பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார். | எரே 7:32 எரே 19:11-13 எரே 32:36 எசே 37:2 |