இணை வசன வேதாகமம்

Click to Subscribe

எரேமியா 30

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:எரே 1:1 எரே 1:2 எரே 26:15
2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.எரே 36:2-4 எரே 36:32-4 எரே 51:60-64 யாத் 17:14 உபா 31:19 உபா 31:22-27 யோபு 19:23 யோபு 19:24 ஏசா 8:1 ஏசா 30:8 தானி 12:4 ஆபகூ 2:2 ஆபகூ 2:3 ரோம 15:4 1கொரி 10:11 2பேது 1:21 வெளிப் 1:11 வெளிப் 1:19
3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத்திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 23:5 எரே 23:7 எரே 31:27 எரே 31:31 எரே 31:38 எரே 33:14 எரே 33:15 லூக் 17:22 லூக் 19:43 லூக் 21:6 எபிரெ 8:8
4இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்னவார்த்தைகளே.
5கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.எரே 4:15-20 எரே 6:23 எரே 6:24 எரே 8:19 எரே 9:19 எரே 25:36 எரே 31:15 எரே 31:16 ஏசா 5:30 ஏசா 59:11 ஆமோ 5:16-18 ஆமோ 8:10 செப் 1:10 செப் 1:11 லூக் 19:41-44 லூக் 21:25 லூக் 21:26 லூக் 23:29-30
6ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?எரே 4:31 எரே 6:24 எரே 13:21 எரே 22:23 எரே 49:24 எரே 50:43 சங் 48:6 ஏசா 13:6-9 ஏசா 21:3 தானி 5:6 ஓசி 13:13 மீகா 4:9 மீகா 4:10 யோவா 16:21 யோவா 16:22 1தெச 5:3
7ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.ஏசா 2:12-22 எசே 7:6-12 ஓசி 1:11 யோவே 2:11 யோவே 2:31 ஆமோ 5:18-20 செப் 1:14-18 சகரி 14:1 சகரி 14:2 மல்கி 4:1 அப் 2:20 வெளிப் 6:17
8அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.எரே 27:2 எரே 28:4 எரே 28:10 எரே 28:13 ஏசா 9:4 ஏசா 10:27 ஏசா 14:25 எசே 34:27 நாகூ 1:13
9தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.ஏசா 55:3-5 எசே 34:23 எசே 37:23-25 ஓசி 3:5 லூக் 1:69 அப் 2:30 அப் 13:34
10ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.எரே 46:27 எரே 46:28 ஆதி 15:1 உபா 31:6-8 ஏசா 41:10-15 ஏசா 43:5 ஏசா 44:2 ஏசா 54:4 செப் 3:16 செப் 3:17 யோவா 12:15
11உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.எரே 1:8 எரே 1:19 எரே 15:20 எரே 46:28 ஏசா 8:10 ஏசா 43:25 எசே 11:16 எசே 11:17 மத் 1:23 மத் 28:20 அப் 18:10 2தீமோ 4:17 2தீமோ 4:18 2தீமோ 4:22
12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது.எரே 30:15 எரே 14:17 எரே 15:18 2நாளா 36:16 ஏசா 1:5 ஏசா 1:6 எசே 37:11
13உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களுமில்லை.சங் 106:23 சங் 142:4 ஏசா 59:16 எசே 22:30 1தீமோ 2:5 1தீமோ 2:6 1யோவா 2:1
14உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும்வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிறவண்ணமாகவும் நான் உன்னை தண்டித்தேன்.எரே 2:36 எரே 4:30 எரே 22:20 எரே 22:22 எரே 38:22 புலம் 1:2 புலம் 1:19 எசே 23:9 எசே 23:22 ஓசி 2:5 ஓசி 2:10-16 வெளிப் 17:12-18
15உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.எரே 15:18 யோசு 9:10 யோசு 9:11 புலம் 3:39 மீகா 7:9
16ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.எரே 10:25 எரே 12:14 எரே 25:12 எரே 25:26-29 எரே 50:7-11 எரே 50:17-11 எரே 50:18-11 எரே 50:28-11 எரே 50:33-40 எரே 51:34-37 யாத் 23:22 சங் 129:5 சங் 137:8 சங் 137:9 ஏசா 14:2 ஏசா 33:1 ஏசா 41:11 ஏசா 41:12 ஏசா 47:5 ஏசா 47:6 ஏசா 54:15 ஏசா 54:17 புலம் 1:21 புலம் 4:21 புலம் 4:22 எசே 25:3-7 எசே 26:2-21 எசே 29:6 எசே 35:5 மீகா 4:11 மீகா 7:10 நாகூ 1:8 ஆபகூ 2:16 செப் 2:8 சகரி 1:14 சகரி 2:8 சகரி 12:2 சகரி 14:2 வெளிப் 13:10
17அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.எரே 30:13 எரே 3:22 எரே 33:6 யாத் 15:26 சங் 23:3 சங் 103:3 சங் 107:20 ஏசா 30:26 எசே 34:16 ஓசி 6:1 மல்கி 4:2 1பேது 2:24 வெளிப் 22:2
18கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும்.எரே 30:3 எரே 23:3 எரே 29:14 எரே 33:7 எரே 33:11 எரே 46:27 எரே 49:6 எரே 49:39 சங் 85:1 சங் 102:13
19அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.எரே 31:4 எரே 31:12 எரே 31:13 எரே 33:10 எரே 33:11 எஸ்றா 3:10-13 எஸ்றா 6:22 நெகே 8:12 நெகே 8:17 நெகே 12:43-46 சங் 53:6 சங் 126:1 சங் 126:2 ஏசா 12:1 ஏசா 35:10 ஏசா 51:11 ஏசா 52:9 செப் 3:14-20 சகரி 8:19
20அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.எரே 32:39 ஆதி 17:5-9 சங் 90:16 சங் 90:17 சங் 102:18 சங் 102:28 ஏசா 1:26 ஏசா 1:27
21அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்துவரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.ஆதி 49:10 எஸ்றா 2:2 எஸ்றா 7:25 எஸ்றா 7:26 நெகே 2:9 நெகே 2:10 நெகே 7:2
22நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.எரே 24:7 எரே 31:1 எரே 31:33 உபா 26:17-19 உன்ன 2:16 எசே 11:20 எசே 36:28 எசே 37:27 ஓசி 2:23 சகரி 13:9 மத் 22:32 எபிரெ 8:10 வெளிப் 21:3
23இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.எரே 23:19 எரே 23:20 எரே 25:32 சங் 58:9 நீதி 1:27 சகரி 9:14
24கர்த்தர் நம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.எரே 4:28 1சாமு 3:12 யோபு 23:13 யோபு 23:14 ஏசா 14:24 ஏசா 14:26 ஏசா 14:27 ஏசா 46:11 எசே 20:47 எசே 20:48 எசே 21:5-7
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.