| 1 | யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது. | யோபு 19:23 யோபு 19:24 |
| 2 | உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது. | எரே 7:18 ஓசி 4:13 ஓசி 4:14 |
| 3 | வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன். | எரே 26:18 ஏசா 2:2 ஏசா 2:3 புலம் 5:17 புலம் 5:18 மீகா 3:12 மீகா 4:1 மீகா 4:2 |
| 4 | அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே. | எரே 16:13 எரே 25:9-11 லேவி 26:31-34 உபா 4:26 உபா 4:27 உபா 28:25 யோசு 23:15 யோசு 23:16 1இரா 9:7 2இரா 25:21 |
| 5 | மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | சங் 62:9 சங் 118:8 சங் 118:9 சங் 146:3 சங் 146:4 ஏசா 2:22 ஏசா 30:1-7 ஏசா 31:1-9 ஏசா 36:6 எசே 29:6 எசே 29:7 |
| 6 | அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். | எரே 48:6 யோபு 8:11-13 யோபு 15:30-34 சங் 1:4 சங் 92:7 சங் 129:6-8 ஏசா 1:30 |
| 7 | கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். | சங் 2:12 சங் 34:8 சங் 84:12 சங் 125:1 சங் 146:5 நீதி 16:20 ஏசா 26:3 ஏசா 26:4 ஏசா 30:18 எபே 1:12 |
| 8 | அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். | யோபு 8:16 சங் 1:3 சங் 92:10-15 ஏசா 58:11 எசே 31:4-10 எசே 47:12 |
| 9 | எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? | எரே 16:12 ஆதி 6:5 ஆதி 8:21 யோபு 15:14-16 சங் 51:5 சங் 53:1-3 நீதி 28:26 பிரச 9:3 மத் 15:19 மாற் 7:21 மாற் 7:22 எபிரெ 3:12 யாக் 1:14 யாக் 1:15 |
| 10 | கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். | எரே 11:20 எரே 20:12 1சாமு 16:7 1நாளா 28:9 1நாளா 29:17 2நாளா 6:30 சங் 7:9 சங் 139:1 சங் 139:2 சங் 139:23 சங் 139:24 நீதி 17:3 யோவா 2:25 ரோம 8:27 எபிரெ 4:12 எபிரெ 4:13 வெளிப் 2:23 |
| 11 | அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான். | எரே 5:27 எரே 5:28 எரே 22:13 எரே 22:17 நீதி 1:18 நீதி 1:19 நீதி 13:11 நீதி 15:27 நீதி 21:6 நீதி 28:8 நீதி 28:16 நீதி 28:20 நீதி 28:22 ஏசா 1:23 ஏசா 1:24 எசே 22:12 எசே 22:13 ஓசி 12:7 ஓசி 12:8 ஆமோ 3:10 ஆமோ 8:4-6 மீகா 2:1 மீகா 2:2 மீகா 2:9 மீகா 6:10-12 மீகா 7:3 ஆபகூ 2:6-12 செப் 1:9 சகரி 5:4 சகரி 7:9-13 மல்கி 3:5 மத் 23:14 1தீமோ 6:9 தீத் 1:11 யாக் 5:3-5 2பேது 2:3 2பேது 2:14 |
| 12 | எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது. | எரே 3:17 எரே 14:21 2நாளா 2:5 2நாளா 2:6 சங் 96:6 சங் 103:19 ஏசா 6:1 ஏசா 66:1 எசே 1:26 எசே 43:7 மத் 25:31 எபிரெ 4:16 எபிரெ 12:2 வெளிப் 3:21 |
| 13 | இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிறயாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும். | எரே 17:17 எரே 14:8 சங் 22:4 யோவே 3:16 அப் 28:20 1தீமோ 1:1 |
| 14 | கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி. | எரே 31:18 உபா 32:39 சங் 6:2 சங் 6:4 சங் 12:4 ஏசா 6:10 ஏசா 57:18 ஏசா 57:19 லூக் 4:18 |
| 15 | இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள். | எரே 20:7 எரே 20:8 ஏசா 5:19 எசே 12:22 எசே 12:27 எசே 12:28 ஆமோ 5:18 2பேது 3:3 2பேது 3:4 |
| 16 | நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது. | எரே 1:4-10 எரே 20:9 எசே 3:14-19 எசே 33:7-9 ஆமோ 7:14 ஆமோ 7:15 யாக் 1:19 யாக் 3:1 |
| 17 | நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம். | யோபு 31:23 சங் 77:2-9 சங் 88:15 சங் 88:16 |
| 18 | நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும். | எரே 20:11 சங் 35:4 சங் 35:26 சங் 35:27 சங் 40:14 சங் 70:2 சங் 83:17 சங் 83:18 |
| 19 | கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு, | எரே 7:2 எரே 19:2 எரே 26:2 எரே 36:6 எரே 36:10 நீதி 1:20-22 நீதி 8:1 நீதி 9:3 அப் 5:20 |
| 20 | அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். | எரே 13:18 எரே 19:3 எரே 22:2 சங் 49:1 சங் 49:2 எசே 2:7 எசே 3:17 ஓசி 5:1 ஆமோ 4:1 மீகா 3:1 வெளிப் 2:29 |
| 21 | நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும். | உபா 4:9 உபா 4:15 உபா 4:23 உபா 11:16 யோசு 23:11 நீதி 4:23 மாற் 4:24 லூக் 8:18 அப் 20:28 எபிரெ 2:1-3 எபிரெ 12:15 எபிரெ 12:16 |
| 22 | ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | ஆதி 2:2 ஆதி 2:3 யாத் 16:23-29 யாத் 20:8-10 யாத் 23:12 யாத் 31:13-17 லேவி 19:3 லேவி 23:3 உபா 5:12-15 ஏசா 56:2-6 ஏசா 58:13 எசே 20:12 எசே 20:20 எசே 20:21 எசே 22:8 லூக் 6:5 லூக் 23:56 வெளிப் 1:10 |
| 23 | அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய்க் கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள். | எரே 7:24-26 எரே 11:10 எரே 16:11 எரே 16:12 எரே 19:15 ஏசா 48:4 எசே 20:13 எசே 20:16 எசே 20:21 சகரி 7:11 சகரி 7:12 அப் 7:51 |
| 24 | நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் என் சொல்லைக் கேட்பீர்களானால், | யாத் 15:26 உபா 11:13 உபா 11:22 ஏசா 21:7 ஏசா 55:2 சகரி 6:15 2பேது 1:5-10 |
| 25 | அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும். | எரே 22:4 |
| 26 | யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான சீமையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், போஜனபலிகளையும், தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள். | எரே 32:44 எரே 33:13 யோசு 15:21-63 |
| 27 | நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்து போகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 17:24 எரே 6:17 எரே 26:4-6 எரே 44:16 ஏசா 1:20 சகரி 7:11-14 எபிரெ 12:25 |