| 1 | கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: |
| 2 | நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். | எரே 13:1 எரே 19:1 எரே 19:2 ஏசா 20:2 எசே 4:1-5 ஆமோ 7:7 எபிரெ 1:1 |
| 3 | அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். | யோனா 1:3 யோவா 15:14 அப் 26:19 |
| 4 | குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான். | எரே 18:6 ஏசா 45:9 ரோம 9:20-23 |
| 5 | அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: |
| 6 | இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். | எரே 18:4 ஏசா 64:8 தானி 4:23 மத் 20:15 ரோம 11:34 |
| 7 | பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில், | எரே 1:10 எரே 12:14-17 எரே 25:9-14 எரே 45:4 ஆமோ 9:8 யோனா 3:4 |
| 8 | நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். | எரே 7:3-7 எரே 36:3 நியா 10:15 நியா 10:16 1இரா 8:33 1இரா 8:34 2நாளா 12:6 ஏசா 1:16-19 எசே 18:21 எசே 33:11 எசே 33:13 யோனா 2:5-10 லூக் 13:3-5 |
| 9 | கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. | எரே 1:10 எரே 11:17 எரே 30:18 எரே 31:4 எரே 31:28 எரே 31:38 எரே 32:41 பிரச 3:2 ஆமோ 9:11-15 |
| 10 | அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். | எரே 7:23-28 சங் 125:5 எசே 18:24 எசே 33:18 எசே 45:20 செப் 1:6 |
| 11 | இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத்திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்களென்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல். | ஆதி 11:3 ஆதி 11:4 ஆதி 11:7 2இரா 5:5 ஏசா 5:5 யாக் 4:13 யாக் 5:1 |
| 12 | ஆனாலும் அவர்கள்: அது கூடாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள். | எரே 2:25 2இரா 6:33 ஏசா 57:10 எசே 37:11 |
| 13 | ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள். | எரே 2:10-13 |
| 14 | லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ? | யோவா 6:68 |
| 15 | என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது. | எரே 2:13 எரே 2:19 எரே 2:32 எரே 3:21 எரே 13:25 எரே 17:13 |
| 16 | நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான். | எரே 9:11 எரே 19:8 எரே 25:9 எரே 49:13 எரே 50:13 லேவி 26:33 லேவி 26:34 லேவி 26:43 உபா 29:23 ஏசா 6:11 எசே 6:14 எசே 12:19 எசே 33:28 எசே 33:29 |
| 17 | கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார். | எரே 13:24 உபா 28:25 உபா 28:64 யோபு 27:21 சங் 48:7 ஓசி 13:15 |
| 18 | அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள். | எரே 18:11 எரே 11:19 சங் 21:11 ஏசா 32:7 மீகா 2:1-3 |
| 19 | கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும். | எரே 20:12 சங் 55:16 சங் 55:17 சங் 64:1-4 சங் 56:1-3 சங் 109:4 சங் 109:28 மீகா 7:8 லூக் 6:11 லூக் 6:12 |
| 20 | நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களை விட்டுத் திருப்பும்படிக்கு நான்அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும். | 1சாமு 24:17-19 சங் 35:12 சங் 38:20 சங் 109:4 சங் 109:5 நீதி 17:13 யோவா 10:32 யோவா 15:25 |
| 21 | ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள். | எரே 11:20-23 எரே 12:3 எரே 20:1-6 எரே 20:11-6 எரே 20:12-6 சங் 109:9-20 2தீமோ 4:14 |
| 22 | நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே. | எரே 4:19 எரே 4:20 எரே 4:31 எரே 6:26 எரே 9:20 எரே 9:21 எரே 25:34-36 எரே 47:2 எரே 47:3 எரே 48:3-5 ஏசா 10:30 ஏசா 22:1-4 செப் 1:10 செப் 1:11 செப் 1:16 |
| 23 | ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும். | எரே 18:18 எரே 11:18-20 எரே 15:15 சங் 37:32 சங் 37:33 |