| 1 | கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: | எரே 1:2 எரே 1:4 எரே 2:1 |
| 2 | நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார். | ஆதி 19:14 மத் 24:19 லூக் 21:23 லூக் 23:29 1கொரி 7:26 1கொரி 7:27 |
| 3 | இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், | எரே 16:5 எரே 16:9 |
| 4 | மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்து போவார்கள்; அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். | எரே 14:16 எரே 15:2 எரே 15:3 சங் 78:64 |
| 5 | ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும் அவர்களுக்கு பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 16:6 எரே 16:7 எசே 24:16-23 |
| 6 | இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள்நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை. | எரே 13:13 ஏசா 9:14-17 ஏசா 24:2 எசே 9:5 எசே 9:6 ஆமோ 6:11 வெளிப் 6:15 வெளிப் 20:12 |
| 7 | செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை. | உபா 26:14 யோபு 42:11 எசே 24:17 ஓசி 9:4 |
| 8 | நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக. | எரே 15:17 சங் 26:4 பிரச 7:2-4 ஏசா 22:12-14 ஆமோ 6:4-6 மத் 24:38 லூக் 17:27-29 1கொரி 5:11 எபே 5:11 |
| 9 | ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். | எரே 7:34 எரே 25:10 ஏசா 24:7-12 எசே 26:13 ஓசி 2:11 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
| 10 | நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேனென்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால், | எரே 2:35 எரே 5:19 எரே 13:22 எரே 22:8 எரே 22:9 உபா 29:24 உபா 29:25 1இரா 9:8 1இரா 9:9 ஓசி 12:8 |
| 11 | நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே. | எரே 2:8 எரே 5:7-9 நியா 2:12 நியா 2:13 நியா 10:13 நியா 10:14 நெகே 9:26-29 சங் 106:35-41 தானி 9:10-12 |
| 12 | நீங்கள் உங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதய கடினத்தின்படி நடக்கிறீர்கள். | எரே 7:26 எரே 13:10 2தீமோ 3:13 |
| 13 | ஆதலால், உங்களை இந்த தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை. | எரே 6:15 எரே 15:4 எரே 15:14 எரே 17:4 லேவி 18:27 லேவி 18:28 உபா 4:26-28 உபா 28:36 உபா 28:63-65 உபா 29:28 உபா 30:17 உபா 30:18 யோசு 23:15 யோசு 23:16 2நாளா 7:20 |
| 14 | ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், | எரே 23:7 எரே 23:8 ஏசா 43:18 ஏசா 43:19 ஓசி 3:4 ஓசி 3:5 |
| 15 | இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக்கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 3:18 எரே 24:6 எரே 30:3 எரே 30:10 எரே 31:8 எரே 32:37 எரே 50:19 உபா 30:3-5 சங் 106:47 ஏசா 11:11-16 ஏசா 13:5 ஏசா 13:6 ஏசா 14:1 ஏசா 27:12 ஏசா 27:13 எசே 34:12-14 எசே 36:24 எசே 37:21 எசே 37:22 எசே 39:28 ஆமோ 9:14 |
| 16 | இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள். | எரே 25:9 ஆமோ 4:2 ஆபகூ 1:14 ஆபகூ 1:15 |
| 17 | என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை. | எரே 23:24 எரே 32:19 2நாளா 16:9 யோபு 34:21 யோபு 34:22 சங் 90:8 சங் 139:3 நீதி 5:21 நீதி 15:3 ஏசா 29:15 எசே 8:12 எசே 9:9 லூக் 12:1 லூக் 12:2 1கொரி 4:5 எபிரெ 4:13 |
| 18 | முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைச் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். | எரே 17:18 ஏசா 40:2 ஏசா 61:7 வெளிப் 18:6 |
| 19 | என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புற ஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள். | எரே 17:17 சங் 18:1 சங் 18:2 சங் 19:14 சங் 27:5 சங் 46:1 சங் 46:7 சங் 46:11 சங் 62:2 சங் 62:7 சங் 91:1 சங் 91:2 சங் 144:1 சங் 144:2 நீதி 18:10 ஏசா 25:4 ஏசா 32:2 எசே 11:16 நாகூ 1:7 ஆபகூ 3:19 |
| 20 | மனுஷன் தனக்கு தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே. | சங் 115:4-8 சங் 135:14-18 ஏசா 36:19 ஏசா 37:19 ஓசி 8:4-6 அப் 19:26 கலா 1:8 கலா 4:8 |
| 21 | ஆதலால். இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள். | யாத் 9:14-18 யாத் 14:4 சங் 9:16 எசே 6:7 எசே 24:24 எசே 24:27 எசே 25:14 |