| 1 | சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன். | ஏசா 62:6 ஏசா 62:7 சங் 51:18 சங் 102:13-16 சங் 122:6-9 சங் 137:6 சகரி 2:12 லூக் 10:2 2தெச 3:1 எபிரெ 7:25 |
| 2 | ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். | ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 60:1-3 ஏசா 61:9 ஏசா 66:12 ஏசா 66:19 மீகா 5:8 அப் 9:15 அப் 26:23 கொலோ 1:23 |
| 3 | நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். | சகரி 9:16 லூக் 2:14 1தெச 2:19 |
| 4 | நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். | ஏசா 62:12 ஏசா 32:14 ஏசா 32:15 ஏசா 49:14 ஏசா 54:1 ஏசா 54:6 ஏசா 54:7 ஓசி 1:9 ஓசி 1:10 ரோம 9:25-27 எபிரெ 13:5 1பேது 2:10 |
| 5 | வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். | ஏசா 49:18-22 சங் 45:11-16 எரே 32:41 |
| 6 | எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. | ஏசா 52:8 ஏசா 56:10 2நாளா 8:14 உன்ன 3:3 உன்ன 5:7 எரே 6:17 எசே 3:17-21 எசே 33:2-9 1கொரி 12:28 எபே 4:11 எபே 4:12 எபிரெ 13:17 |
| 7 | அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். | ஏசா 62:1-3 ஏசா 61:11 எரே 33:9 செப் 3:19 செப் 3:20 மத் 6:9 மத் 6:10 மத் 6:13 வெளிப் 11:15 |
| 8 | இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார். | உபா 32:40 எசே 20:5 |
| 9 | அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள். | உபா 12:7 உபா 12:12 உபா 14:23-29 உபா 16:11 உபா 16:14 |
| 10 | வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள். | ஏசா 18:3 ஏசா 40:3 ஏசா 48:20 ஏசா 52:11 ஏசா 57:14 யாத் 17:15 மத் 22:9 எபிரெ 12:13 |
| 11 | நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார். | சங் 98:1-3 மாற் 16:15 ரோம 10:11-18 |
| 12 | அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய். | ஏசா 60:21 உபா 7:6 உபா 26:19 உபா 28:9 1பேது 2:9 |