1 | அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். | நியா 5:1-31 2சாமு 22:1-51 சங் 106:12 சங் 107:8 சங் 107:15 சங் 107:21 சங் 107:22 ஏசா 12:1-6 ஏசா 51:10 ஏசா 51:11 வெளிப் 15:3 |
2 | கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; | சங் 18:1 சங் 18:2 சங் 27:1 சங் 28:8 சங் 59:17 சங் 62:6 சங் 62:7 சங் 118:14 ஆபகூ 3:17-19 பிலிப் 4:13 |
3 | கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். | சங் 24:8 சங் 45:3 வெளிப் 19:11-21 |
4 | பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள். | யாத் 14:13-28 |
5 | ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். | யாத் 14:28 எசே 27:34 யோனா 2:2 மீகா 7:19 மத் 18:6 |
6 | கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. | யாத் 15:11 1நாளா 29:11 1நாளா 29:12 சங் 17:7 சங் 44:3 சங் 60:5 சங் 74:11 சங் 77:10 சங் 89:8-13 சங் 98:1 சங் 118:15 சங் 118:16 ஏசா 51:9 ஏசா 52:10 மத் 6:13 |
7 | உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது. | யாத் 9:16 உபா 33:26 சங் 68:33 சங் 148:13 ஏசா 5:16 எரே 10:6 |
8 | உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று. | யாத் 14:21 2சாமு 22:16 யோபு 4:9 ஏசா 11:4 ஏசா 37:7 2தெச 2:8 |
9 | தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான். | ஆதி 49:27 நியா 5:30 1இரா 19:2 1இரா 20:10 ஏசா 10:8-13 ஏசா 36:20 ஏசா 53:12 ஆபகூ 3:14 லூக் 11:22 |
10 | உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். | யாத் 14:21 ஆதி 8:1 சங் 74:13 சங் 74:14 சங் 135:7 சங் 147:18 ஏசா 11:15 எரே 10:13 ஆமோ 4:13 மத் 8:27 |
11 | கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? | உபா 3:24 உபா 33:26 1சாமு 2:2 2சாமு 7:22 1இரா 8:23 சங் 35:10 சங் 77:19 சங் 86:8 சங் 89:6-8 ஏசா 40:18 ஏசா 40:25 எரே 10:6 எரே 10:16 எரே 49:19 |
12 | நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது. |
13 | நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழி நடத்தினீர். | ஆதி 19:16 எபே 2:4 |
14 | ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும். | எண் 14:14 எண் 22:5 உபா 2:4 உபா 2:5 யோசு 2:9 யோசு 2:10 யோசு 9:24 சங் 48:6 |
15 | ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள். | ஆதி 36:40 எண் 20:14-21 உபா 2:4 1நாளா 1:51-54 |
16 | பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள். | உபா 2:25 உபா 11:25 யோசு 2:9 |
17 | நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். | சங் 44:2 சங் 78:54 சங் 78:55 சங் 80:8 ஏசா 5:1-4 எரே 2:21 எரே 32:41 |
18 | கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்பண்ணுவார். | சங் 10:16 சங் 29:10 சங் 146:10 ஏசா 57:15 தானி 2:44 தானி 4:3 தானி 7:14 தானி 7:27 மத் 6:13 வெளிப் 11:15-17 |
19 | பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள். | யாத் 14:23 நீதி 21:31 |
20 | ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். | நியா 4:4 1சாமு 10:5 2இரா 22:14 லூக் 2:36 அப் 21:9 1கொரி 11:5 1கொரி 14:34 |
21 | மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். | 1சாமு 18:7 2நாளா 5:13 சங் 24:7-10 சங் 134:1-3 |
22 | பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். | ஆதி 16:7 ஆதி 25:18 1சாமு 15:7 |
23 | அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. | எண் 33:8 |
24 | அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். | யாத் 14:11 யாத் 16:2 யாத் 16:8 யாத் 16:9 யாத் 17:3 யாத் 17:4 எண் 11:1-6 எண் 14:1-4 எண் 16:11 எண் 16:41 எண் 17:10 எண் 20:2-5 எண் 21:5 1கொரி 10:10 பிலிப் 2:14 யூதா 1:16 |
25 | மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும், ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: | யாத் 14:10 யாத் 17:4 சங் 50:15 சங் 91:15 சங் 99:6 எரே 15:1 |
26 | நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். | லேவி 26:3 லேவி 26:13 உபா 7:12 உபா 7:13 உபா 7:15 உபா 28:1-15 |
27 | பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள். | எண் 33:9 ஏசா 12:3 எசே 47:12 வெளிப் 7:17 வெளிப் 22:2 |