1 | கர்த்தர் மோசேயை நோக்கி: | யாத் 12:1 யாத் 13:1 |
2 | நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. | யாத் 14:9 யாத் 13:17 யாத் 13:18 எண் 33:7 எண் 33:8 |
3 | அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். | யாத் 7:3 யாத் 7:4 உபா 31:21 சங் 139:2 சங் 139:4 எசே 38:10 எசே 38:11 எசே 38:17 அப் 4:28 |
4 | ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். | யாத் 14:8 யாத் 14:17 யாத் 4:21-31 யாத் 7:3 யாத் 7:13 யாத் 7:14 ரோம 11:8 |
5 | ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள். | யாத் 12:33 சங் 105:25 |
6 | அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, |
7 | பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான். | யாத் 14:23 யாத் 15:4 யோசு 17:16-18 நியா 4:3 நியா 4:15 சங் 20:7 சங் 68:17 ஏசா 37:24 |
8 | கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். | யாத் 6:1 யாத் 13:9 யாத் 13:16 யாத் 13:18 எண் 33:3 உபா 26:8 உபா 32:27 சங் 86:13 அப் 13:17 |
9 | எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள். | யாத் 15:9 யோசு 24:6 |
10 | பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். | சங் 53:5 ஏசா 7:2 ஏசா 8:12 ஏசா 8:13 ஏசா 51:12 ஏசா 51:13 மத் 8:26 மத் 14:30 மத் 14:31 1யோவா 4:18 |
11 | அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? | யாத் 15:23 யாத் 15:24 யாத் 16:2 யாத் 16:3 யாத் 17:2 யாத் 17:3 எண் 11:1 எண் 14:1-4 எண் 16:41 சங் 106:7 சங் 106:8 |
12 | நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். | யாத் 5:21 யாத் 3:9 |
13 | அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். | எண் 14:9 உபா 20:3 2இரா 6:16 2நாளா 20:15 2நாளா 20:17 சங் 27:1 சங் 27:2 சங் 46:1-3 ஏசா 26:3 ஏசா 30:15 ஏசா 35:4 ஏசா 41:10-14 மத் 28:5 |
14 | கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். | யாத் 14:25 யாத் 15:3 உபா 1:30 உபா 3:22 உபா 20:4 யோசு 10:10 யோசு 10:14 யோசு 10:42 யோசு 23:3 யோசு 23:10 நியா 5:20 2நாளா 20:17 2நாளா 20:29 நெகே 4:20 ஏசா 31:4 ஏசா 31:5 |
15 | அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. | யாத் 17:4 யோசு 7:10 எஸ்றா 10:4 எஸ்றா 10:5 நெகே 9:9 |
16 | நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். | யாத் 14:21 யாத் 14:26 யாத் 4:2 யாத் 4:17 யாத் 4:20 யாத் 7:9 யாத் 7:19 |
17 | எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். | ஆதி 6:17 ஆதி 9:9 லேவி 26:28 உபா 32:39 ஏசா 48:15 ஏசா 51:12 எரே 23:39 எசே 5:8 எசே 6:3 எசே 34:11 எசே 34:20 ஓசி 5:14 |
18 | இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். | யாத் 14:4 யாத் 7:5 யாத் 7:17 |
19 | அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. | யாத் 14:24 யாத் 13:21 யாத் 23:20 யாத் 23:21 யாத் 32:34 எண் 20:16 ஏசா 63:9 |
20 | அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. | சங் 18:11 நீதி 4:18 நீதி 4:19 ஏசா 8:14 2கொரி 2:15 2கொரி 2:16 |
21 | மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. | யாத் 15:8 யோசு 3:13-16 யோசு 4:23 நெகே 9:11 யோபு 26:12 சங் 66:6 சங் 74:13 சங் 78:13 சங் 106:7-10 சங் 114:3-5 சங் 136:13 ஏசா 51:10 ஏசா 51:15 ஏசா 63:12 |
22 | இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. | யாத் 14:29 யாத் 15:19 எண் 33:8 சங் 66:6 சங் 78:13 ஏசா 63:13 1கொரி 10:1 எபிரெ 11:29 |
23 | அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். | யாத் 14:17 யாத் 15:9 யாத் 15:19 1இரா 22:20 பிரச 9:3 ஏசா 14:24-27 |
24 | கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, | 1சாமு 11:11 |
25 | அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள். | நியா 4:15 சங் 46:9 சங் 76:6 எரே 51:21 |
26 | கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார். | யாத் 14:16 யாத் 7:19 யாத் 8:5 மத் 8:27 |
27 | அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார். | யாத் 14:21 யாத் 14:22 யாத் 15:1-21 யோசு 4:18 |
28 | ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. | யாத் 15:10 உபா 11:4 நெகே 9:11 சங் 78:53 ஆபகூ 3:8-10 ஆபகூ 3:13-10 எபிரெ 11:29 |
29 | இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. | யாத் 14:22 யோபு 38:8-11 சங் 66:6 சங் 66:7 சங் 77:19 சங் 77:20 சங் 78:52 சங் 78:53 ஏசா 43:2 ஏசா 51:10 ஏசா 51:13 ஏசா 63:12 ஏசா 63:13 |
30 | இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள். | யாத் 14:13 1சாமு 14:23 2நாளா 32:22 சங் 106:8 சங் 106:10 ஏசா 63:9 யூதா 1:5 |
31 | கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள். | 1சாமு 12:18 சங் 119:120 |