| 1 | கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். | சங் 34:3 சங் 66:8 சங் 107:8 சங் 107:15 சங் 107:21 சங் 117:1 சங் 118:1 சங் 136:1-3 சங் 148:11-13 சங் 150:6 |
| 2 | துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். | சங் 7:7 சங் 100:2 சங் 100:4 எரே 31:12 எரே 31:13 |
| 3 | கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். | சங் 86:8-10 சங் 96:4 சங் 97:9 சங் 145:3 எரே 10:6 எரே 10:7 |
| 4 | பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். | சங் 21:2 யோபு 11:10 |
| 5 | சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. | சங் 33:7 ஆதி 1:9 ஆதி 1:10 யோபு 38:10 யோபு 38:11 நீதி 8:29 எரே 5:22 |
| 6 | நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். | சங் 95:1 ஓசி 6:1 மத் 4:2 வெளிப் 22:17 |
| 7 | அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. | சங் 48:14 சங் 67:6 சங் 115:3 யாத் 15:2 யாத் 20:2 எரே 31:33 எபிரெ 11:16 |
| 8 | இன்று அவருடைய சத்தத்தைக்கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். | யாத் 8:15 1சாமு 6:6 தானி 5:20 அப் 19:9 ரோம 2:5 எபிரெ 3:13 எபிரெ 12:25 |
| 9 | அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள். | சங் 78:17 சங் 78:18 சங் 78:40 சங் 78:41 சங் 78:56 1கொரி 10:9 |
| 10 | நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, | எண் 14:33 எண் 14:34 எண் 32:13 உபா 1:3 உபா 2:14-16 எபிரெ 3:9 எபிரெ 3:10 எபிரெ 3:17 |
| 11 | என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன். | எண் 14:23 எண் 14:28-30 உபா 1:34 உபா 1:35 எபிரெ 3:11 எபிரெ 3:18 எபிரெ 4:3 எபிரெ 4:5 |