| 1 | நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். | உபா 32:35 உபா 32:41 உபா 32:42 ஏசா 35:4 ஏசா 59:17 எரே 50:28 நாகூ 1:2 ரோம 12:19 2தெச 1:8 எபிரெ 10:30 |
| 2 | பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும். | சங் 7:6 சங் 68:1 சங் 74:22 மீகா 5:9 |
| 3 | கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? | சங் 43:2 சங் 73:8 சங் 74:9 சங் 74:10 சங் 79:5 சங் 80:4 சங் 89:46 எரே 12:1 எரே 12:2 எரே 47:6 வெளிப் 6:10 |
| 4 | எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? | சங் 31:18 சங் 59:7 சங் 59:12 சங் 64:3 சங் 64:4 சங் 73:8 சங் 73:9 சங் 140:3 நீதி 30:14 எரே 18:18 மத் 12:24 மத் 12:34 யூதா 1:14 யூதா 1:15 |
| 5 | கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். | சங் 7:2 சங் 14:4 சங் 44:22 சங் 74:8 சங் 74:19 சங் 74:20 சங் 79:2 சங் 79:3 சங் 79:7 சங் 129:2 சங் 129:3 ஏசா 3:15 ஏசா 52:5 எரே 22:17 எரே 51:20-23 எரே 51:34-23 மீகா 3:2 மீகா 3:3 வெளிப் 17:6 |
| 6 | விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: | ஏசா 10:2 ஏசா 13:15-18 எரே 7:6 எரே 22:3 எசே 22:7 மல்கி 3:5 |
| 7 | கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள். | சங் 10:11-13 சங் 59:7 யோபு 22:12 யோபு 22:13 ஏசா 29:15 எசே 8:12 எசே 9:9 செப் 1:12 லூக் 18:3 லூக் 18:4 |
| 8 | ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? | சங் 49:10 சங் 73:22 சங் 92:6 நீதி 12:1 ஏசா 27:11 எரே 8:6-8 எரே 10:8 ரோம 3:11 |
| 9 | காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? | யாத் 4:11 நீதி 20:1 நீதி 20:12 |
| 10 | ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ? | சங் 9:5 சங் 10:16 சங் 44:2 சங் 135:8-12 சங் 149:7 ஏசா 10:12 ஏசா 37:36 எரே 10:25 எசே 39:21 |
| 11 | மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். | சங் 49:10-13 யோபு 11:11 யோபு 11:12 ரோம 1:21 ரோம 1:22 1கொரி 1:19 1கொரி 1:21 1கொரி 1:25 |
| 12 | கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, | சங் 119:67 சங் 119:71 யோபு 5:17 நீதி 3:11 1கொரி 11:32 எபிரெ 12:5-11 |
| 13 | சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். | ஏசா 26:20 ஏசா 26:21 ஆபகூ 3:16 2கொரி 4:17 2கொரி 4:18 2தெச 1:7 2தெச 1:8 எபிரெ 4:9 வெளிப் 14:13 |
| 14 | கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். | சங் 37:28 1சாமு 12:22 ஏசா 49:14 ஏசா 49:15 எரே 32:39 எரே 32:40 யோவா 10:27-31 ரோம 8:30 ரோம 8:38 ரோம 8:39 ரோம 11:1 ரோம 11:2 எபிரெ 13:5 |
| 15 | நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள். | சங் 94:2 சங் 94:3 சங் 7:8 சங் 7:9 சங் 9:16 சங் 58:11 சங் 125:3 உபா 32:35 உபா 32:36 யோபு 35:14 மீகா 7:9 மல்கி 3:18 2பேது 3:8-10 வெளிப் 15:3 வெளிப் 15:4 |
| 16 | துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? | யாத் 32:26-29 எண் 25:6-13 நியா 5:23 1இரா 18:39 1இரா 18:40 2இரா 9:32 2இரா 10:15 ஏசா 59:16 ஏசா 63:5 எரே 5:1 எசே 22:30 மத் 12:30 3யோவா 1:8 |
| 17 | கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணியிருக்கும். | சங் 118:13 சங் 124:1 சங் 124:2 சங் 125:1 சங் 142:4 சங் 142:5 யோவா 16:32 2கொரி 1:8-10 2தீமோ 4:16 2தீமோ 4:17 |
| 18 | என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. | சங் 17:5 சங் 37:23 சங் 37:24 சங் 38:16 சங் 119:116 சங் 119:117 சங் 121:3 1சாமு 2:9 யோவா 12:5 ஏசா 41:10 லூக் 22:32 1பேது 1:5 |
| 19 | என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. | சங் 43:2-5 சங் 61:2 சங் 63:5 சங் 63:6 சங் 73:12-16 சங் 77:2-10 எரே 20:7-11 ஆபகூ 3:16-18 ரோம 5:2-5 2கொரி 1:4 2கொரி 1:5 1பேது 1:7 1பேது 1:8 |
| 20 | தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? | சங் 52:1 சங் 82:1 1சாமு 22:12 பிரச 3:16 பிரச 5:8 ஆமோ 6:3 |
| 21 | அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். | சங் 2:1-3 சங் 22:16 சங் 59:3 நீதி 1:11 நீதி 1:16 மத் 27:1 அப் 4:5-7 அப் 4:27-7 அப் 4:28-7 |
| 22 | கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். | சங் 94:10 சங் 27:1-3 சங் 59:9 சங் 59:16 சங் 59:17 சங் 62:2 சங் 62:6 |
| 23 | அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார். | சங் 7:16 சங் 9:16 சங் 9:17 சங் 55:23 சங் 64:8 எஸ்தர் 7:10 நீதி 1:31 நீதி 2:22 நீதி 5:22 தானி 7:24 |