1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.சங் 59:13 சங் 96:10 சங் 97:1 சங் 99:1 சங் 103:19 சங் 145:13 1நாளா 29:12 ஏசா 52:7 தானி 4:32-34 மத் 6:13 எபிரெ 1:8 வெளிப் 11:15-17 வெளிப் 19:6 2உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.சங் 45:6 சங் 145:13 நீதி 8:22 நீதி 8:23 தானி 4:34 மீகா 5:2 3கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.சங் 18:4 சங் 69:1 சங் 69:2 சங் 69:14-16 ஏசா 17:12 ஏசா 17:13 எரே 46:7 எரே 46:8 யோனா 2:3 வெளிப் 12:15 வெளிப் 17:15 4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.சங் 65:7 சங் 89:6 சங் 89:9 சங் 114:3-5 யோபு 38:11 எரே 5:22 மாற் 4:37-39 5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.சங் 19:7 சங் 19:8 சங் 119:111 சங் 119:129 சங் 119:138 சங் 119:144 ஏசா 8:20 மத் 24:35 எபிரெ 6:17 எபிரெ 6:18 1யோவா 5:9-13